Latest Updates
-
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க..
அமெரிக்காவில் வேகமாய் பரவிக் கொண்டிருக்கும் 'மூளையைத் தின்னும்' அமீபா- எப்படி பரவுகிறது, அறிகுறிகள் என்ன?
மனித மூளைக்குள் செல்லக்கூடிய ஒரு கொடிய நுண்ணுயிர் தற்போது அமெரிக்காவில் வேகமாக பரவிக் கொண்டிருப்பதாக நிபுணர்கள் கூறி கவலைக் கொள்கின்றனர்.
உலகமே கோவிட்-19 தொற்றுநோயுடன் போராடிக் கொண்டிருக்கும் போது, மக்களிடையே பரவக்கூடிய பிற நோய்களும் உலகெங்கிலும் அதிகம் பரவிக் கொண்டிருக்கின்றன. என்ன தான் கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகெங்கிலும் உள்ள சுகாதார நிபுணர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒரு சவாலாக இருந்த போதிலும், மனித மூளைக்குள் செல்லக்கூடிய ஒரு கொடிய நுண்ணுயிர் தற்போது அமெரிக்காவில் வேகமாக பரவிக் கொண்டிருப்பதாக நிபுணர்கள் கூறி கவலைக் கொள்கின்றனர்.

இந்த மூளையைத் தின்னும் அமீபா அமெரிக்காவின் தெற்கு பகுதியில் காணப்படுகிறது. இருப்பினும், இது நாட்டின் வடக்கு பகுதியிலும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. இப்போது இப்படிப்பட்ட கொடிய மூளையைத் தின்னும் அமீபா நோயைப் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைக் காண்போம்.
1 வயது குழந்தை பிரபாகரனுக்கு இதய நோய் பிரச்சனை... காப்பாற்ற தயவுசெய்து உதவுங்களேன்!

'மூளையைத் தின்னும்' அமீபா என்றால் என்ன?
மூளையைத் தின்னும் அமீபா என்ற பெயர் வந்ததற்கு காரணம், இந்த நுண்ணுயிர் மூளையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டது. இந்த நுண்ணுயிர் மனித மூளைக்குள் நுழைந்துவிட்டால், அது மூளைத் திசுக்களை அழித்து, மூளையில் அழற்சி மற்றும் வீக்கத்தை உண்டாக்கும்.
1 வயதுடைய குழந்தை பிரபாகரனை இதய பிரச்சனையிலிருந்து காப்பாற்ற தயவுசெய்து நன்கொடை அளியுங்கள்!

'மூளையைத் தின்னும்' அமீபா எங்கே காணப்படுகிறது?
இயற்கையாகவே அமீபா வெதுவெதுப்பான நன்னீரில் காணப்படுகிறது. இருப்பினும், காலநிலை மாற்றங்களுடன் வெப்பநிலை அதிகரிக்கும் போது, இந்த அமீபா கண்டத்தின் பிற மாநிலங்களிலும் காணப்படுகிறது. பொதுவாக இந்த அமீபாவை நீரில் காணலாம் மற்றும் இது 113 டிகிரி பாரன்ஹீட் வரையிலான வெப்பமான வெப்பநிலையை விரும்புகிறது.

'மூளையைத் தின்னும்' அமீபா மூளைக்குள் எவ்வாறு நுழைகிறது?
மூளையைத் தின்னும் அமீபாவால் மூக்கின் வழியாக மூளைக்குள் நுழைய முடியும். ஆனால் இந்த அமீபாவை வாய் வழியாக விழுங்கினால், இது தொற்றை ஏற்படுத்தாது.

'மூளையைத் தின்னும்' அமீபாவால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்?
முதன்மை அமெபிக் மெனிங்கோயென்ஸ்ஃபாலிடிஸ் (Primary Amebic Meningoencephalitis Or PAM) என்னும் மூளையைத் தின்னும் அமீபாவால் ஏற்படும் தொற்று மிகவும் அரிதானது. கடந்த பத்து வருடங்களில் 34 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) தெரிவிக்கின்றன.

அறிகுறிகள் என்ன?
மூளையைத் தின்னும் அமீபா தொற்றின் ஆரம்ப அறிகுறிகளில் கடுமையான முன் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை அடங்கும். ஸ்டேஜ் 2 அறிகுறிகளில் கடுமையான கழுத்துப் பிடிப்பு, வலிப்புத் தாக்கங்கள், மனநிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், பிரமைகள் மற்றும் கோமா ஆகியவை அடங்கும்.

'மூளையைத் தின்னும்' அமீபா தொற்றை தடுக்கும் வழிகள் என்ன?
நன்னீர் ஏரிகள் அல்லது குளங்களில் அமீபாக்கள் காணப்படுவதால், ஏரி, குளங்களில் நீச்சல் மற்றும் டைவிங் அடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் மூளையைத் தின்னும் அமீபா பரவிக் கொண்டிருப்பதால், இந்த மாதிரியான சூழ்நிலையில் ஏரி, குளங்களில் தொற்றை உண்டாக்கும் அமீபா இருக்கக்கூடும்.
ஒரு முக்கியமான விஷயம், இந்த நோய்த்தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது. நீரின் மூலம் மட்டுமே பரவும். ஆனால் இந்த அமீபா மூளையைத் தாக்கிவிட்டால், உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுவும் தொற்று ஏற்பட்ட ஒரு வாரத்திற்குள் உயிரிழந்துவிடுவார்களாம்.



Click it and Unblock the Notifications
