Latest Updates
-
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
பறவை காய்ச்சல் பரவும் போது சிக்கன் சாப்பிடலாமா? முட்டைகளால் கூட இது பரவுமா?
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவின் பல பகுதிகளில் பறவை காய்ச்சலும் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவின் பல பகுதிகளில் பறவை காய்ச்சலும் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் இமாச்சல பிரதேசத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்த சுமார் 1600 பறவைகள் உயிரிழந்துள்ளன. அதோடு, ராஜஸ்தானில் காகம் மற்றும் மயில்கள் திடீரென உயிரிழந்துள்ளன. இதற்கு பறவை காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதோடு தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் கோட்டயம் மற்றும் ஆலப்புழா போன்ற பகுதிகளில் உள்ள வாத்துப் பண்ணையில் திடீரென்று 1,500 வாத்துகள் இறந்துள்ளன. இதையடுத்து, அப்பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 36,000 வாத்துகள் கொல்லப்படுவதாக கூறப்படுகின்றன.
என்ன தான் பறவை காய்ச்சல் வாத்துக்களை பாதித்திருந்தாலும், இன்னும் மனிதர்களுக்கு எவ்வித தொற்றும் ஏற்படவில்லை. இப்போது இந்த பறவை காய்ச்சல் குறித்து பலரது மனதில் எழும் சில கேள்விகளையும், அதற்கான விடைகளையும் காண்போம்.

1. ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா என்றால் என்ன?
ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா, அல்லது "பறவைக் காய்ச்சல்" அல்லது "ஏவியன் காய்ச்சல்" என்பது பறவை காய்ச்சல் வைரஸ்களால் ஏற்படும் தொற்றாகும். இந்த காய்ச்சல் வைரஸ்கள் பறவைகள் மத்தியில் இயற்கையாகவே ஏற்படுகின்றன. உலகெங்கிலும் உள்ள காட்டு பறவைகள் தங்கள் குடலில் வைரஸ்களை கொண்டு செல்கின்றன. ஆனால் பெரும்பாலும் அவை அவற்றிலிருந்து நோய்வாய்ப்படாது. இருப்பினும், பறவைகளிடையே பறவை காய்ச்சல் மிகவும் தொற்றுநோயாகும் மற்றும் இது கோழிகள், வாத்துகள் போன்ற சில வளர்ப்பு பறவைகளை எளிதில் பாதித்து நோய்வாய்ப்படச் செய்து, அவற்றைக் கொன்றுவிடும்.

2. பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?
பறவை காய்ச்சல் வைரஸ்கள் பொதுவாக மனிதர்களைப் பாதிக்காது. ஆனால் 1997 ஆம் ஆண்டு முதன்முதலாக பறவை காய்ச்சல் வைரஸ்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

3. பறவைகளில் பறவை காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது?
பொதுவாக பாதிக்கப்பட்ட பறவைகளின் உமிழ்நீர், நாசி சுரப்பு மற்றும் மலம் ஆகியவற்றில் காய்ச்சல் வைரஸ்கள் இருக்கும். எப்போது இந்த அசுத்தமான வெளியேற்றங்களுடன் ஆரோக்கியமான பறவைகள் தொடர்பு கொள்கிறதோ, அப்போது அந்த பறவைகள் பாதிக்கப்படுகின்றன.

4. பறவைக் காய்ச்சல் மனிதர்களிடம் எவ்வாறு பரவுகிறது?
பெரும்பாலான சமயங்களில் மனிதர்களிடம் பறவை காய்ச்சல் தொற்று ஏற்படுவதற்கு காரணமாக பாதிக்கப்பட்ட கோழி அல்லது அசுத்தமான மேற்பரப்புகளுடனான தொடர்பின் விளைவாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் இதுவரை மனிதனிடமிருந்து மனிதனுக்கு இந்த வைரஸ் பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

5. ஒருவரது வீட்டிற்கு அருகில் புலம்பெயர்ந்த பறவைகள் காணப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
புலம்பெயர்ந்த பறவைகள் இந்த பறவை காய்ச்சல் வைரஸை சுமக்கலாம் அல்லது சுமக்காமலும் இருக்கலாம். இது அந்த பறவை எங்கிருந்து வந்ததோ அந்த பகுதியைப் பொறுத்தது. இதை ஒரு நிபுணரால் மட்டுமே தீர்மானிக்க முடியும். ஆகவே புலம்பெயர்ந்த பறவையைப் பார்த்தால், அதைக் கொல்லக்கூடாது. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக அந்த பறவை மற்றும் அதன் நீர்த்துளிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். அதோடு நகராட்சி அதிகாரிகளுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

6. ஒரு இறந்த பறவையைப் பார்த்தால் என்ன செய்ய வேண்டும்?
பறவை இறப்பதற்கான காரணம் உறுதியாக தெரியவில்லை என்றால், நகராட்சி அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் அந்த பறவை பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை அறிய சோதனைக்கு அனுப்புவார்கள்.

7. கோழி விற்கும் கடைக்கு அருகில் உள்ள கடைக்கு சென்றால் பறவைக் காய்ச்சல் வருமா?
பறவை காய்ச்சல் ஒரு பெருந்தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டிருந்தால், இது சாத்தியமாகும்.

8. கோழி மற்றும் கோழி பொருட்களை சாப்பிடுவது பாதுகாப்பானதா?
பறவைக் காய்ச்சல் வைரஸால் தொற்று ஏற்படும் என்ற அச்சமின்றி, கோழி மற்றும் கோழி தயாரிப்புக்களை வழக்கம் போல தயார் செய்து சாப்பிடலாம். ஆனால் அதற்கு ஒருவர் நல்ல சுகாதார மற்றும் சமையல் நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். பொதுவாக இந்த வைரஸ் 70 டிகிரி C வெப்பநிலையில் 30 நிமிடங்களில் அழிக்கப்படுகிறது. மேலும் ஒருவர் கோழி மற்றும் முட்டைகளைக் கையாண்ட பிறகு, கைகளையும், அது வெளிப்பட்ட மற்ற பகுதிகளையும் சோப்பு பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.

9. முட்டைகளில் உள்ள கோழியின் நீர்த்துளிகள் தொற்றை ஏற்படுத்துமா?
பொதுவாக கோழியானது முட்டை போட்ட பல மணிநேரங்களுக்கு பின் நுகர்வோரை அடைவதால், அந்த கோழியின் நீர்த்துளிகள் பறவை காய்ச்சல் வைரஸைச் சுமந்தாலும் கூட, தொற்றுக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. ஏனெனில் பறவை காய்ச்சல் வைரஸ் சில மணிநேரம் சூரிய ஒளியில் உலர்த்தப்படுவதன் மூலம் அழிக்கப்படுகிறது.

10. கோழியின் எச்சங்களை உரமாக பயன்படுத்துவது பாதுகாப்பானதா?
பெருந்தொற்று காலந்தில், கோழியில் புதிய எச்சங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம். தொற்றுநோய் முற்றிலும் சரியாகும் வரை வேறு சில உரங்களைப் பயன்படுத்தவும்.

11. மனிதர்களில் பறவை காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?
* இருமல்
* காய்ச்சல்
* தொண்டை புண்
* தசை வலி
* நிமோனியா மற்றும் பிற சிக்கல்கள்.

12. பறவை காய்ச்சலுக்கான சோதனைகள் என்ன?
பறவை காய்ச்சலை பரிசோதிப்பதற்கு நோயாளியின் தொண்டையில் இருந்து நீர்த்துளிகள் (Swab Test) எடுத்து சோதனை செய்யப்படுகிறது.

13. பறவை காய்ச்சலுக்கான சோதனை இடங்கள் யாவை?
பறவை காய்ச்சலுக்கான சோதனை வசதிகள் தற்போது புதுடெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் புனேவின் தேசிய வைராலஜி நிறுவனம் ஆகியவற்றில் செய்யப்படுகின்றன.

14. பறவை காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி உள்ளதா?
பறவை காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி மனிதர்களுக்கு இல்லை. அதுமட்டுமின்றி, மனித காய்ச்சல் வைரஸுக்கு எதிரான தடுப்பூசியும் பறவை காய்ச்சலில் இருந்து பாதுகாக்காது.

15. பறவை காய்ச்சலைத் தடுக்க ஏதாவது மருந்துகள் உள்ளதா?
மனிதர்களிடம் பறவை காய்ச்சலைத் தடுப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் மருந்துகளைப் பயன்படுத்த பரிந்துரை எதுவும் இல்லை.



Click it and Unblock the Notifications