Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
ஜாக்கிரதை! இந்த அன்றாட பழக்கங்கள் புற்றுநோயை வரவழைக்கும்.. உடனே இப்பழக்கங்களை கைவிடுங்க..
புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்கள் புற்றுநோயை உண்டாக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் நாம் அன்றாடம் மேற்கொள்ளும் சில செயல்கள் அல்லது பழக்கவழக்கங்கள் கூட புற்றுநோயை உண்டாக்கும்.
உலகில் புற்றுநோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே புற்றுநோய் மிகப்பெரிய ஆரோக்கிய பிரச்சனையாகும். உலகில் ஒவ்வொரு வருடமும் சுமார் 10 மில்லியன் மக்கள் புற்றுநோயால் இறக்கின்றனர். உலகில் ஒவ்வொரு ஆறாவது மரணமும் புற்றுநோயால் ஏற்படுகிறது. புற்றுநோய் என்பது அசாதாரண உயிரணு வளர்ச்சியை உள்ளடக்கிய நோய்களின் ஒரு குழுவாகும். இது உடலின் மற்ற பகுதிகளுக்கு படையெடுக்கும் அல்லது பரவும்.

ஒருவருக்கு புற்றுநோய் பல காரணிகளால் வரும். புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற பழக்கங்கள் புற்றுநோயை உண்டாக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் நாம் அன்றாடம் மேற்கொள்ளும் சில செயல்பாடுகள் அல்லது பழக்கவழக்கங்கள் கூட புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும். இந்த கட்டுரையில் புற்றுநோயைத் தூண்டிவிடக்கூடிய பழக்கவழக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து உடனே அப்பழக்கங்களை கைவிடுங்கள்.

குழாய் நீரைக் குடிப்பது
இன்றைய காலத்தில் சுவாசிக்கும் காற்று முதல் குடிக்கும் நீர் வரை அனைத்துமே மாசடைந்துள்ளது. வடிகட்டப்படாத நீரான குழாய் நீரை ஒருவர் குடித்தால், அது உடலில் புற்றுநோயை உண்டாக்கும். ஆகவே எப்போதும் நீரை குடிக்கும் முன், அதை சூடாக்கி குடிக்கவும் அல்லது நன்கு வடிகட்டி குடிக்க வேண்டும்.

மிகவும் சூடான பானத்தைக் குடிப்பது
இந்தியர்களால் மிகவும் சூடான காபி அல்லது டீயைக் குடிக்காமல் இருக்க முடியாது. குறிப்பாக குளிர்காலங்களில் கொதிக்கும் டீ அல்லது காபியை சற்றும் குளிர வைக்காமல் குடிப்பார்கள். காபி, டீயை சூடாக குடிப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் மிகவும் சூடாக குடிப்பது தான் ஆபத்து. முக்கியமாக மிகவும் சூடான பானத்தைக் குடிப்பது உணவுக்குழாய் புற்றுநோயுடன் இணைக்கப்பட்டுள்ளது.

வெப்பமூட்டும் பார்சல் உணவு கொள்கலன்கள்
கடைகளில் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுபவர்கள், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வெப்பமூட்டும் பார்சல் உணவு கொள்கலன் கொண்டு உணவுகளை மீண்டும் சூடாக்காதீர்கள். ஏனெனில் அந்த கொள்கலன் செய்யப்பட்ட மெட்டீரியல், புற்றுநோயை உண்டாக்கும் கெமிக்கல்களை உணவுகளில் வெளியிடக்கூடும்.

புகைப்பிடிப்போரின் அருகில் இருப்பது
நீங்கள் புகைப்பிடிக்காமல், புகைப்பிடிப்போரின் அருகில் இருந்தாலும், புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கும். ஆகவே புகைப்பிடிப்போரின் அருகில் இருப்பதை முடிந்த வரை தவிர்த்திடுங்கள். இதனால் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.

உடலுழைப்பில்லாத வாழ்க்கை
ஒருவர் உடலுழைப்பில்லாத வாழ்க்கையை வாழ்ந்தால், அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. நீண்ட நேரம் உட்கார்ந்தவாறோ அல்லது நீண்ட நேரம் எந்த ஒரு வேலையும் செய்யாமல் ஒரே நிலையில் இருந்தாலோ, உடலில் கொழுப்புக்கள் தேங்குவதோடு, உடலில் புற்றுநோய் செல்களின் உருவாக்கத்தை தூண்டிவிடும்.

ட்ரை க்ளீனிங் உடைகளை அணிவது
ட்ரை க்ளீனிங் செயல்முறையின் போது பயன்படுத்தப்படும் கெமிக்கலான 'perc' ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. எனவே யாரெல்லாம் ட்ரை க்ளீன் செய்யப்பட்ட உடைகளை அதிகம் அணிகிறார்களோ, அவர்களுக்கு சிறுநீரகம், உணவுக் குழாய் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான அபாயம் அதிகம் உள்ளது. ஆகவே எச்சரிக்கையாக இருங்கள்.

தோட்டப் பராமரிப்பு
தோட்டப் பராமரிப்பு செயலானது ஒரு சிறப்பான உடற்பயிற்சி. ஆனால் அந்த வேலையை செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். களைகளை அழிப்பதற்கு, களைக்கொல்லி கெமிக்கல்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். இந்த களைக்கொல்லி கெமிக்கல்கள் மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை.

காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு மிகவும் அபாயகரமானது. மாசடைந்த காற்றில் தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் ஏராளம் இருப்பதால், அந்த காற்றை ஒருவர் அதிகமாக அடிக்கடி சுவாசிக்கும் போது, அது நுரையீரல் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.

நொதிக்க வைக்கப்பட்ட உணவுகள்
இது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். நொதிக்க வைக்கப்பட்ட உணவுகள் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கலாம். ஆனால் அனைத்து வகையான நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளும் நல்லதல்ல. சில வகையான நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளில் நைட்ரைட்டுகள் மற்றும் நைட்ரேட்டுகள் அதிக அளவில் இருக்கலாம். இவை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

மெனிக்யூர் மற்றும் பெடிக்யூர்
பொதுவாக பெண்கள் மெனிக்யூர் மற்றும் பெடிக்யூரை அடிக்கடி செய்வார்கள். இந்த செயல்முறையின் போது பயன்படுத்தப்படும் கெமிக்கல்கள் சரும புற்றுநோயை உண்டாக்கலாம். ஆகவே கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்தி அடிக்கடி மெனிக்யூர் மற்றும் பெடிக்யூர் செய்வதை தவிர்த்திடுங்கள்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி
இறைச்சி விரும்பிகள் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிகம் வாங்கி சாப்பிடுவர். இந்த வகை இறைச்சி பெருங்குடல் மற்றும் வயிற்று புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. உங்கள் ஆரோக்கியம் பாதுகாப்புடன் இருக்க பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.



Click it and Unblock the Notifications
