Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
மோசமான தலைவலி மற்றும் ஒற்றை தலைவலியை ஈஸியா குணப்படுத்த நீங்க என்ன செய்யணும் தெரியுமா?
ஒற்றைத் தலைவலி உங்களுக்கு தலைவலியைத் தந்து, உங்களைச் சோர்வடையச் செய்யும். பெரும்பாலான மக்கள் வலியைக் குணப்படுத்த மருந்துகளை நம்பியிருந்தாலும், இந்த இயற்கையான தீர்வு ஒரு எளிய கலவையை குடிப்பதன் மூலம் வலியைக் குறைக்க உதவும்
தலைவலியும், வயிற்று வலியும் அவரவருக்கு வந்தாலதான், தெரியும் என்பார்கள். அந்தளவிற்கு தலைவலி மக்களை பாடாய்ப்படுத்தி எடுக்கும். தலைவலி வந்தால், அவர்களால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது, மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். இதற்கு மருந்து, மாத்திரைகள் அலல்து தையளம் தேய்த்து அதற்கான நிவாரணத்தை பெறுவார்கள். தலைவலியில் ஒற்றை தலைவலி பலருக்கு வழக்கமாக ஏற்படலாம். ஒற்றை தலைவலியை போக்க நீங்கள் இயற்கை முறை தீர்வை நாடலாம்.

மிருதுவாக்கி சாப்பிடுவது மோசமான தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியைப் போக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சரி, இது விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் காலே, கீரை மற்றும் இலை கீரைகள் கொண்ட மிருதுவானது உடனடியாக மோசமான தலைவலியை மேம்படுத்தி வலியைக் குணப்படுத்தும். இந்த குணப்படுத்தும் கலவையைப் பற்றி இக்கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஒற்றைத் தலைவலியை நீக்கும் மிருதுவாக்கி செய்வது எப்படி?
இந்த ஒற்றை தலைவலியை விரைவாக குணப்படுத்தும் மிருதுவாக்கியை தயார் செய்ய, காய்கறிகள் மற்றும் இலை கீரைகளை கழுவி நறுக்கி வைக்க வேண்டும். 4-5 கலர் கீரை இலைகள், 1 கப் அன்னாசிப்பழம், 1 நறுக்கப்பட்ட வெள்ளரிக்காய், 1 அங்குலம் இஞ்சி, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் சிறிது உப்பு மற்றும் மிளகு சேர்த்து கலக்கவும். கட்டிகள் வராமல் மிருதுவாகக் கலக்கவும் மற்றும் சிறிது ஐஸ்கட்டி கலந்து, தடையில்லாமல் குடிக்கவும். சுவையை அதிகரிக்க நீங்கள் இன்னும் சில எலுமிச்சை சாறை சேர்ந்து அருந்தலாம்.

ஒற்றை தலைவலி
ஒற்றைத் தலைவலி ஏற்படுவது நரம்பியல் பிரச்சினை என்றும் கூறுகின்றனர். இதில் ஒரு நபருக்கு அடிக்கடி வலி ஏற்படுகிறது, மேலும் இந்த வலி தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நீடிக்கிறது. இதில் வாந்தி, குமட்டல், பதற்றம் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. ஒற்றைத் தலைவலி தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது. ஆதலால், ஒற்றை தலைவலி பிரச்சனை உங்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கும்.

இயற்கையான தீர்வு
ஒற்றைத் தலைவலி உங்களுக்கு தலைவலியைத் தந்து, உங்களைச் சோர்வடையச் செய்யும். பெரும்பாலான மக்கள் வலியைக் குணப்படுத்த மருந்துகளை நம்பியிருந்தாலும், இந்த இயற்கையான தீர்வு ஒரு எளிய கலவையை குடிப்பதன் மூலம் வலியைக் குறைக்க உதவும்.

எப்படி குணப்படுத்துகிறது?
காலே மற்றும் கீரை போன்ற இலை கீரைகளில் ஃபோலேட், இரும்பு மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது, இது கார்டிசோல் அளவைக் குறைக்க உதவுகிறது. உடலில் கார்டிசோலின் அளவு அதிகரிப்பது செரிமானம், மன அழுத்தம் மற்றும் கடுமையான தலைவலியை பாதிக்கும்.

இறுதிகுறிப்பு
தவிர, இலை கீரைகளில் வைட்டமின் பி மற்றும் பி 9 நிறைந்துள்ளது, இது ஒற்றைத் தலைவலி தாக்குதல்களைக் குறைக்க உதவுகிறது. உங்கள் தலைவலியை இயற்கையாகவே குணப்படுத்த உதவும் இந்த எளிய ஸ்மூத்தியை அருந்துங்கள்.



Click it and Unblock the Notifications
