Latest Updates
-
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம்
69 வயதில் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு காலமான பாடகர் பப்பி லஹிரி - அதென்ன பிரச்சனை?
சமீபத்தில் பழம்பெரும் பாடகரும், இசையமைப்பாளருமான பப்பி லஹிரி தனது 69 வயதில் மும்பையில் உள்ள க்ரிட்டிகேர் மருத்துவமனையில் காலமானார். தூக்கத்தில் மூச்சுத்திணறல் காரணமாக இறந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் பழம்பெரும் பாடகரும், இசையமைப்பாளருமான பப்பி லஹிரி தனது 69 வயதில் மும்பையில் உள்ள க்ரிட்டிகேர் மருத்துவமனையில் காலமானார். இவர் இந்தியாவில் 80 மற்றும் 90-களில் டிஸ்கோ இசையைப் பிரபலப்படுத்தியவர். கடந்த ஆண்டு கோவிட்-19 இல் இருந்து மீண்ட பிறகு, பல உடல்நல பிரச்சனையால் போராடி வந்தார். இந்நிலையில் பாடகர் பப்பி லஹிரி தூக்கத்தில் மூச்சுத்திணறல் காரணமாக இறந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதுக்குறித்து மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் தீபக் நம்ஜோஷி பிடிஐ-க்கு கூறியதாவது, "லஹிரி கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த திங்கட்கிழமை அன்று தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் செவ்வாய்க்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவரது குடும்பத்தினர் மருத்துவரை வீட்டிற்கு அழைத்தனர். அதன் பின் அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். இவருக்கு ஏற்கனவே பல உடல்நல பிரச்சனைகள் இருந்தன. இப்படிப்பட்ட நிலையில் நள்ளிரவுக்கு முன்பு OSA என்னும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் காரணமாக இறந்தார்." என்றார்.
அது என்ன தூக்கத்தில் மூச்சுத்திணறல் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, அது ஒருவரை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து இப்போது விரிவாக காண்போம்.

தூக்கத்தில் மூச்சுத்திணறல் என்றால் என்ன?
பலருக்கும் தூக்கத்தில் கூட மூச்சுத்திணறல் ஏற்படும் என்பது தெரியாது. தூக்கத்தில் மூச்சுத்திணறல் என்பது மிகவும் பொதுவான தூக்க கோளாறுகளில் ஒன்றாகும். பொதுவாக தூக்கம் உட்பட அனைத்து நேரங்களிலும் வாய் மற்றும் மூக்கில் இருந்து நுரையீரலுக்கு காற்று செல்ல வேண்டும். சுவாசிப்பது நிறுத்தப்படும் காலங்கள் மூச்சுத்திணறல் என்று அழைக்கப்படுகின்றன. அதாவது, இந்நிலையில் ஒருவர் அசந்து தூங்கும் போது சுவாசம் நிறுத்தி வைக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் சுவாசிக்கத் தொடங்கும். இந்த வகை மூச்சுத்திணறலானது தூக்கத்தின் போது ஒருவரது தொண்டையில் உள்ள மென்மையான திசுக்களை ஆதரிக்கும் தசைகள் தளர்ந்து ஓய்வெடுக்கும் போது சுவாசப்பாதையில் தடை உண்டாவதால் ஏற்படுகிறது. இப்படி சுவாசப்பாதை தடைபடும் போது உடலுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது. இது மிகவும் ஆபத்தானது. இப்பிரச்சனையை ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயல வேண்டும்.

தூக்கத்தில் மூச்சுத்திணறல் பிரச்சனையின் அறிகுறிகள்
* பகலில் அதிகம் தூங்குவது
* சத்தமாக குறட்டை விடுவது
* தூங்கும்போது மூச்சுத்திணறலால் திடீர் விழிப்பு ஏற்படுவது
* தூங்கி எழும் போது வாய் வறட்சி அல்லது தொண்டை வலியை அனுபவிப்பது
* காலை தலைவலி
* பகலில் கவனம் செலுத்துவதில் சிரமப்படுவது
* மனச்சோர்வு அல்லது எரிச்சல் போன்ற மனநிலை மாற்றங்கள்
* உயர் இரத்த அழுத்தம்
* குறைவான பாலுணர்ச்சி

காரணங்கள்
* உடல் பருமன் - தூக்கத்தில் மூச்சுத்திணறல் பிரச்சனை உள்ள பெரும்பாலானோர் உடல் பருமனுடன் இருப்பார்.
* மரபணு - உங்கள் குடும்பத்தில் யாருக்காவது ஏற்கனவே இந்த பிரச்சனை இருந்தால், பின்னர் உங்களுக்கும் இந்த பிரச்சனை வர வாய்ப்புள்ளது.
* முதுமை - 60 வயதிற்கு மேல் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
* நியூரோமஸ்குலர்- நியூரோமஸ்குலர் என்பது மூளையால் சுவாசப்பாதைகள் மற்றும் மார்பு தசைகளுக்கு செய்திகளை அனுப்ப முடியாமல் போகும் ஒரு நிலை. இந்த நிலை தூக்கத்தில் மூச்சுத்திணறலை ஏற்படுத்தும்.
* இதயம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள்- இதயம் மற்றும் சிறுநீரகங்களில் பிரச்சனைகள் இருந்தாலும், தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. ஏனெனில் இதயம் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுபவர்களின் கழுத்தில் திரவம் குவிந்து, மூச்சுக்குழாய்களைத் தடுக்கிறது. இந்த மூச்சுக்குழாய் அடைப்பு காரணமாக இப்பிரச்சனை தொடங்குகிறது.

வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்குமா?
தூக்கத்தில் மூச்சுத்திணறல் பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். மேலும் இப்பிரச்சனை உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நாய், இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களைத் தூண்டலாம். தூக்கத்தில் மூச்சுத்திணறல் வரத்தூண்டும் பிற சிக்கல்கள் பின்வருமாறு:
* பகல் வேளையில் தூக்கம் மற்றும் கவனம் செலுத்துவத்தில் சிரமம்
* மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம், அசாதாரண இதயத் துடிப்பு அல்லது பக்கவாதம் போன்ற இதயம் தொடர்பான பிரச்சனைகள்
* சர்க்கரை நோய்
* க்ளுக்கோமா மற்றும் கண் வறட்சி போன்ற கண் பிரச்சனைகள்
* கர்ப்பகால நீரிழிவு அல்லது குறைந்த எடை கொண்ட குழந்தைகள் போன்ற கர்ப்பம் தொடர்பான பிரச்சனைகள்
* அறுவை சிகிச்சைக்கு பிறகு சிக்கல்கள்

தூக்கத்தில் மூச்சுத்திணறலுக்கு (OSA) சிகிச்சை உள்ளதா?
தூக்கத்தில் மூச்சுத்திணறலுக்கு சிகிச்சைகள் உள்ளன. அந்த சிகிச்சைகளில் ஒன்று, தூங்கும் போது உங்கள் சுவாசப்பாதையைத் திறந்து வைக்க நேர்மறை அழுத்தத்தைப் பயன்படுத்தும் சாதனத்தைப் பயன்படுத்துவது. மற்றொரு வழி தூக்கத்தின் போது உங்கள் கீழ் தாடையை முன்னோக்கி தள்ளும் ஒரு மௌத் பீஸ் ஆகும். மல்லாக்க படுப்பது OSA-வை மோசமாக்கலாம். எனவே லேசான தூக்கத்தில் மூச்சுத்திணறல் உள்ளவர்கள் ஒரு பக்கமாக தூங்க கற்றுக் கொள்ள முயற்சிப்பது நல்லது. சில நேரங்களில், அறுவை சிகிச்சை கூட சிறந்த வழியாக இருக்கலாம்.



Click it and Unblock the Notifications
