Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க
நம் முன்னோர்கள் தொப்பை வராமல் இருக்க இத தான் அடிக்கடி குடிப்பாங்களாம்! என்னன்னு தெரிஞ்சுக்கணுமா?
பானைப் போன்று அசிங்கமாக தொங்கும் தொப்பையையும், அதிகப்படியான உடல் எடையையும் குறைக்க உதவும் ஓர் அற்புதமான பொருள் தான் வாழைத்தண்டு. முந்தைய காலத்தில் வாழைத்தண்டை மக்கள் தங்கள் உணவில் அதிகம் சேர்த்தனர்.
நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்து சோர்ந்து போயிட்டீங்களா? இதுவரை எடையைக் குறைக்க பல வழிகளை முயற்சித்தும், எதுவும் பலன் அளிக்கவில்லையா? உடனே மனதை தளர விட்டு, எடை குறைக்கும் முயற்சியைக் கைவிடாதீர்கள். உடல் பருமனை சாதாரணமாக நினைக்க வேண்டாம். ஒருவர் தொப்பையுடன், உயரத்திற்கு ஏற்ற எடையை விட அதிகமாக இருந்தால், அவர் பல ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும். சொல்லப்போனால் தற்போது நிறைய பேர் பிபி, சர்க்கரை நோய் என்று பல உடல்நல பிரச்சனைகளால் கஷ்டப்படுவதற்கு முதன்மையான காரணமாக உடல் பருமனைக் கூறலாம்.

அதோடு உடல் பருமனடைவது என்பது எளிது. ஆனால் அதைக் குறைப்பது தான் கடினம். அதிலும் நினைத்தவுடனேயே உடல் எடையை குறைத்துவிட முடியாது. ஒருவர் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், அதற்கு முதலில் பொறுமை அவசியம். பொறுமையுடன், நம்பிக்கையோடு ஒரு விஷயத்தைக் கடைப்பிடித்தால், நிச்சயம் உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம்.
அப்படி பானைப் போன்று அசிங்கமாக தொங்கும் தொப்பையையும், அதிகப்படியான உடல் எடையையும் குறைக்க உதவும் ஓர் அற்புதமான பொருள் தான் வாழைத்தண்டு. முந்தைய காலத்தில் வாழைத்தண்டை மக்கள் தங்கள் உணவில் அதிகம் சேர்த்து வந்தார்கள். அதனால் தான் நம் முன்னோர்கள் தொப்பையின்றி இருந்தனர் என்பது தெரியுமா?

எடை குறைப்பில் வாழைத்தண்டு
வாழைத்தண்டில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. குறிப்பாக வாழைத்தண்டில் கலோரிகள் மிகவும் குறைவு. ஆனால் நார்ச்சத்தோ மிகவும் அதிகம். ஒருவர் வாழைத்தண்டை ஜூஸ் போன்று தயாரித்துக் குடித்தால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதனால் இது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது செல்களில் சேமிக்கப்படும் சர்க்கரை மற்றும் கொழுப்புக்களின் வெளியீட்டைக் குறைக்கும். அதோடு இதில் உடலில் இருந்து கொழுப்பை அகற்ற உதவும் ஒரு வகையான நார்ச்சத்தும் உள்ளது.

சிறுநீரக கற்களை கரைக்கும்
வாழைத்தண்டு ஜூஸ் ஒரு டையூரிக் ஆகும். இது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவதற்கும், சிறுநீர் பாதையை சுத்தப்படுத்துவதற்கும் ஒரு சிறந்த உணவாக அமைகிறது. முக்கியமாக வாழைத்தண்டு ஜூஸ், சிறுநீரகங்களில் உள்ள சிறுநீரக கற்களைக் கரைத்து வெளியேற்றும் திறன் கொண்டது.

செரிமானம் மற்றும் மெட்டபாலிசம் மேம்படும்
வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் வழக்கமான குடல் இயக்கத்திற்கு உதவுறிது. அதோடு இது உடலின் மெட்டபாலிசம் என்னும் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. இதனால் இது உடல் எடையைக் குறைப்பதில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.

ஆயுர்வேதத்தில் வாழைத்தண்டு
ஆயுர்வேதத்தின் படி, வாழைத்தண்டு ஜூஸை குடிப்பது சிறுநீரக கற்களை எளிதில் கரைத்து வெளியேற்ற உதவும். இதற்கு காரணம், முன்பே கூறியது போல இதில் உள்ள டையூரிக் பண்புகள் தான். இது தான் சிறுநீரக கற்களின் அளவைக் குறைக்க உதவுகிறது.

தொப்பைக் குறைக்க வாழைத்தண்டு ஜூஸை எவ்வாறு தயாரிப்பது?
வாழைத்தண்டை மட்டும் ஜூஸ் எடுத்து குடிப்பது என்பது இயலாத ஒன்று. வாழைத்தண்டு ஜூஸை ருசியானதாக்க, அத்துடன் ஒருசில பொருட்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் இந்த ஜூஸ் சுவையானதாக இருப்பதோடு, தொப்பை அல்லது உடல் எடையைக் குறைக்கும் செயல்முறையும் வேகப்படுத்தப்படும்.

வாழைத்தண்டு ஜூஸ் தயாரிக்க தேவையான பொருட்கள்:
* வாழைத்தண்டு - 1 கப் (நறுக்கியது)
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:
* ஒரு கப் நீரில் நறுக்கிய வாழைத்தண்டைப் போட்டு 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் அதை அப்படியே பிளெண்டரில் போட்டு அரைத்து, வடிகட்டி பயன்படுத்தி, சாற்றினை பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

குறிப்பு
வாழைத்தண்டு ஜூஸை தயாரித்த உடனேயே குடிக்க வேண்டும். இந்த ஜூஸை உங்களின் அன்றாட டயட்டில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உங்கள் தொப்பை வேகமாக குறைவதோடு, சிறுநீரக கற்களின் அபாயமும் தடுக்கப்படும். ஆனால் நீங்கள் ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவராயின், உங்கள் டயட்டில் புதியதாக ஏதாவது ஒன்றை சேர்க்கும் முன், மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications
