அறிகுறி எதுவுமே இல்லாமல் கொரோனா பாசிட்டிவ் காமிக்குதா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கருத்துப்படி, கொரோனா வைரஸ் நோயாளிகளில் குறைந்தது 80 சதவீதம் பேர் அறிகுறியற்றவர்களாக அல்லது லேசான அறிகுறிகளைக் கொண்டவர்களாக இருக்கலாம்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கருத்துப்படி, கொரோனா வைரஸ் நோயாளிகளில் குறைந்தது 80 சதவீதம் பேர் அறிகுறியற்றவர்களாக அல்லது லேசான அறிகுறிகளைக் கொண்டவர்களாக இருக்கலாம். அமெரிக்காவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வழக்குகளில் சுமார் 40 சதவீதம் அறிகுறியற்றவை என்று CDC தெரிவித்துள்ளது.

Asymptomatic COVID-19 Management: Home Care Tips For Patients With No Or Very Mild Symptoms

இதற்கிடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிரா சுகாதார துறை அமைச்சர் ராஜேஷ் டோப், பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அவரது மகள் ஆராத்யா பச்சன்-க்கு கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் வந்துள்ளது என உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், தாய்-மகள் இருவரும் எவ்வித அறிகுறியற்றவர்கள் மற்றும் அவர்கள் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சொல்லப்போனால் நடிகர் அபிஷேக் பச்சனுக்கும், அவரது தந்தை அமிதாப் பச்சனுக்கும் கொரோனா பரிசோதனையின் போது பாசிட்டிவ் வந்ததை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து தான் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவுக்கு சோதனை செய்தனர். இதற்கிடையில் ஐஸ்வர்யாவின் மாமியார் ஜெயா பச்சனுக்கு சோதித்ததில், அவருக்கு நெகட்டிவ் வந்தது.

நாடு முழுவதும் அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் சமீபத்தில் மிகவும் லேசான அல்லது அறிகுறியற்ற கொரோனா வழக்குகளை வீட்டிலேயே தனிமைப்படுத்துவதற்கான வழிக்காட்டுதல்களை சிறிது திருத்தி வெளியிட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறியற்ற கோவிட்-19 நோய்த்தொற்று

அறிகுறியற்ற கோவிட்-19 நோய்த்தொற்று

கொரோனா வைரஸ் தாக்கிய பல நோயாளிகளுக்கு அறிகுறி எதுவும் இல்லாமல் தொற்று இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறியுள்ளன. ஆகவே அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளை கண்டறிவது என்பது சவாலானதாக உள்ளது. ஏனெனில் இந்த நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்படாவிட்டால் அவர்களுக்கு வைரஸ் இருப்பதே தெரியாது. துரதிர்ஷ்டவசமாக, அறிகுறியற்ற நோய்த்தொற்றின் பரவலை கண்டறிவது குறித்து இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. ஏனெனில் அவை வழக்கமாக சோதிக்கப்படவில்லை.

ஒரே மாதிரியான நோய்த்தொற்று

ஒரே மாதிரியான நோய்த்தொற்று

சில ஆய்வுகள் அறிகுறியற்ற மற்றும் அறிகுறி உள்ள கொரோனா நோயாளிகள் ஒரே நோய்த்தொற்றைக் கொண்டிருப்பதாக காட்டுகின்றன. இதனால் இந்த வைரஸ் மக்கள்தொகையில் மிகப்பெரிய பகுதியில் வெளிப்படுகின்றன மற்றும் தாமதமாக கண்டறியும் அபாயத்தையும், இறப்பு விகிதத்தையும் அதிகரிக்கின்றன.

அமைதியான நுரையீரல் பாதிப்பு

அமைதியான நுரையீரல் பாதிப்பு

அதோடு சீனாவின் வுஹானில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அறிகுறியற்ற கொரோனா தொற்று அமைதியான நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரிய வந்தது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, விரைவான சோதனை சாதனங்களைப் பயன்படுத்தி பொது மக்களுக்கு கோவிட்-19 சோதனையை விரிவுபடுத்துவதும், வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதும் தான் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே முதன்மையான வழியாகும்.

அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளுக்கான சில வீட்டு மேலாண்மை குறிப்புகள்

அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளுக்கான சில வீட்டு மேலாண்மை குறிப்புகள்

கோவிட்-19 நோயாளிகளில் 70-80 சதவீதம் அறிகுறியற்ற வழக்குகளாக உள்ளன. இந்த வகை நோயாளிகளுக்கு அறிகுறி மிகவும் குறைவாக அல்லது எந்த ஒரு அறிகுறியும் இருப்பதில்லை. ஆனால் அவர்களுக்கு சோதனை செய்தால், பாசிட்டிவ் காட்டுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இத்தகைய கொரோனா/கோவிட்-19 நோயாளிகள் வீட்டிலேயே கவனித்துக் கொள்வதாக இருந்தால், ஒருசில விஷயங்களை பின்பற்ற வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

வீட்டில் இருக்கும் கொரோனா நோயாளிகள் பின்பற்ற வேண்டியவைகள்:

வீட்டில் இருக்கும் கொரோனா நோயாளிகள் பின்பற்ற வேண்டியவைகள்:

* ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடவும் மற்றும் சூடான பானங்களை அருந்தவும்.

* 10 நாட்களுக்கு தினமும் ஜிங்க் மற்றும் வைட்டமின் சி நிறைந்த மல்டிவைட்டமின் மாத்திரையை சாப்பிடவும்.

* உணவுப் குப்பைகளை கவனமாக அகற்றவும்.

* வீட்டில் எப்போதும் N95 மாஸ்க்குகளை அணிந்து, அடிக்கடி சோப்பால் கைகளைக் கழுவவும் அல்லது சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்தவும்.

* உடல் வெப்பநிலையை சோதிக்கவும். ஒருவேளை உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால், உடனே சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும்.

* பாதிக்கப்பட்ட நோயாளி வீட்டின் எந்த உறுப்பினருடனும் தொடர்பு கொள்ளாமல் இருக்க வேண்டும். அதோடு, வீட்டில் உள்ள ஒருவர் மட்டுமே நோயாளிக்கு தேவையான உணவு மற்றும் உடைகளை குறைந்தது 3 அடி இடைவெளியில் கொடுக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion