Latest Updates
-
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
தினமும் மதியம் ஒரு டம்ளர் பெருங்காயத் தூள் கலந்த நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள்!
பலரும் நீரில் பெருங்காத் தூளை சேர்த்து குடிப்பார்கள் என்பதை தெரியுமா? பெருங்காயத் தூளை நீரில் கலந்து குடிப்பதால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
வீட்டில் சமையலறையில் உள்ள முக்கியமான பொருட்களுள் ஒன்று தான் பெருங்காயம். ஃபெருலா என்னும் மூலிகையில் இருந்து பிரித்தெரிக்கப்பட்ட ஒரு மணம் கொண்ட மசாலாப் பொருள் பெருங்காயம். இது இந்திய மற்றும் பாரசீக உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மசாலாப் பொருள் பொதுவாக தாளிக்கும் போது தான் பயன்படுத்தப்படுகிறது.

பெருங்காயத்தின் ஊட்டச்சத்து பற்றி பேசுகையில், இந்த சக்தி வாய்ந்த மசாலாப் பொருளில் நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நியாசின், கரோட்டின் மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவை அடங்கியுள்ளது. அதோடு இதில் ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் பண்புகளையும் கொண்டுள்ளதால், நிவாரணப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த மசாலாவில் ஆன்டிகோகுலண்ட் பண்புகள் உள்ளன மற்றும் இது ஒரு நீர்ப்பெருக்கியும் கூட. இப்படி பல அற்புதமான நன்மைகளைக் கொண்டுள்ளதால், ஆயுர்வேதத்தில் இது ஒரு முக்கிய மருத்துவ பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் பலரும் நீரில் பெருங்காத் தூளை சேர்த்து குடிப்பார்கள் என்பதை தெரியுமா? பெருங்காயத் தூளை நீரில் கலந்து குடிப்பதால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இப்போது அந்த நன்மைகள் என்னவென்று காண்போம்.

செரிமான பிரச்சனை நீங்கும்
பெருங்காயத் தூளை நீரில் கலந்து குடிப்பதால், அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், மற்றும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு பொருட்கள் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் அசிடிட்டியைத் தடுக்க உதவுகின்றன.

எலும்புகள் வலுபெறும்
நீரில் பெருங்காயத்தைக் கலந்து தினமும் குடிப்பது, எலும்புகளை வலிமையாக்க உதவுகின்றன. பெருங்காயத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆரோக்கியமான பற்கள் மற்றும் வலுவான எலும்புகளுக்கு வழிவகுக்கின்றன.

இரத்த சோகையை எதிர்க்கும்
பெருங்காயத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் இரத்த சோகைக்கு எதிரான ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைக்க உதவுகின்றன. மேலும் இதில் உள்ள ஆன்டி-கார்சினோஜெனிக் பொருட்கள், புற்றுநோயைத் தடுக்கின்றன.

சர்க்கரை நோய்க்கு நல்லது
மஞ்சள் நிற பெருங்காயத் தூளை நீரில் கலந்து குடிக்கும் போது, இரத்த அழுத்தம் சீராகிறது. அதோடு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

ஆஸ்துமா
ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள், பெருங்காயத் தூளை சுடுநீரில் கலந்து குடித்தால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், ஆஸ்துமாவைத் தூண்டும் பாக்டீரியாக்களை அழித்து, ஆஸ்துமாவைத் தடுக்கும்.

கண்களுக்கு நல்லது
பெருங்காயத்தில் பீட்டா-கரோட்டின் உள்ளது. இது கண்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுவதோடு, கண்கள் வறட்சியடைவதையும் தடுக்கின்றன. நீங்கள் கணினி முன் அதிக நேரம் செலவிடுபவராயின், தினமும் நீரில் பெருங்காயத் தூளை கலந்து குடியுங்கள்.

சுவாச கோளாறுகளைக் கட்டுப்படுத்தும்
பெருங்காயத் தூளை ஒருவர் தினமும் சுடுநீரில் கலந்து குடிப்பதன் மூலம், சுவாசக் கோளாறுகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். முக்கியமாக குளிர்காலத்தில் அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க, பெருங்காயத்தை நீரில் கலந்து குடிப்பது நல்ல பாதுகாப்பை வழங்கும்.

வலி நிவாரணி
பெருங்காயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வலி நிவாரண பண்புகள் உள்ளதால், உடல் வலியில் இருந்து மட்டுமின்றி, தலைவலி, ஒற்றைத் தலைவலியில் இருந்தும் நல்ல நிவாரணத்தை அளிக்கும்.

மாதவிடாய் கால பிரச்சனைகள்
சுத்தமான பெருங்காயத் துள் மாதவிடாய் காலத்தில் பெண்கள் சந்திக்கும் வயிற்று பிடிப்புகள், வயிற்று வலி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். அதோடு இது பெண்கள் சந்திக்கும் PCOD போன்ற பெண் கருவுறாமை பிரச்சனையை குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

மன அழுத்த நிவாரணி
உங்கள் மனநிலையில் அடிக்கடி ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, நீங்கள் மன அழுத்தம் அல்லது மனச் சோர்வை உணர்ந்தால், பெருங்காயத் தூளை சுடுநீரில் கலந்து குடியுங்கள். இதனால் அதில் உள்ள மன இறுக்க நிவாரண பண்புகள், நல்ல மனநிலையைப் பெற உதவி, மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும்.



Click it and Unblock the Notifications