For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என ஆரோக்கியமும், அழகும் அதிகரிக்க வேண்டுமா? அப்ப இத பயன்படுத்துங்க...

இடைக்காலத்தில் இருந்தே லேடீஸ் மேன்டில் மருத்துவத் துறையில் பயன்பட்டு வருகிறது. இந்த இலைகளில் விழும் மழைத்துளிகள் கூட மருத்துவ தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்று ஒரு காலத்தில் நம்பப்பட்டு வந்தது.

|

இடைக்காலத்தில் இருந்தே லேடீஸ் மேன்டில் மருத்துவத் துறையில் பயன்பட்டு வருகிறது. இந்த இலைகளில் விழும் மழைத்துளிகள் கூட மருத்துவ தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்று ஒரு காலத்தில் நம்பப்பட்டு வந்தது.

Amazing Benefits Of Lady’s Mantle For Skin, Hair And Health

இன்றைய காலகட்டத்தில் இந்த மூலிகை நிறைய உடல் உபாதைகளை சரி செய்கிறது. மேலும் கூந்தலின் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்தில் இது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதைப் பற்றி இங்கே விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதுமைத் தோற்றத்தைத் தடுக்கிறது

முதுமைத் தோற்றத்தைத் தடுக்கிறது

இந்த லேடீஸ் மேன்டில் மூலிகை வயதாவதை தடுக்கிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சரும நெகிழ்வுத் தன்மையை நீண்ட காலத்திற்கு பராமரிக்கிறது. எனவே உங்களுக்கு வயதானாலும் சருமம் இளமையாக இருக்கும்.

சிறந்த அஸ்ட்ரிஜெண்ட்

சிறந்த அஸ்ட்ரிஜெண்ட்

இந்த லேடீஸ் மேன்டிலில் உள்ள டானின் என்னும் பொருள் தான் அஸ்ட்ரிஜெண்ட் போன்று செயல்படுகிறது. எனவே இதை உங்கள் சருமத்திற்கு தினசரி பயன்படுத்தி வரலாம். ஆனால் இதற்கு எந்த வித அறிவியல் பூர்வமான சான்றுகள் இல்லை. ஆனால் இது ஒரு சிறந்த முறை.

லேடீஸ் மேன்டிலின் கூந்தல் பராமரிப்பு

லேடீஸ் மேன்டிலின் கூந்தல் பராமரிப்பு

லேடீஸ் மேன்டில் நேரடியாக கூந்தல் பராமரிப்புக்கு உதவுவதில்லை. ஆனால் கூந்தல் பராமரிப்புக்கு மறைமுகமாக நிறைய உதவிகளை செய்கிறது. ஆனால் இதற்கு எந்தவித அறிவியல் சான்றும் இல்லை. ஆனால் இது கூந்தல் பராமரிப்புக்கு சிறந்தது என்று மக்கள் கூறுகின்றனர்.

ஹேர் டானிக்

ஹேர் டானிக்

இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கூந்தல் செல்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இதனால் கூந்தல் வளர்ச்சி தூண்டப்படுகிறது. எனவே கூந்தல் வளர ஆசைப்படுபவர்கள் லேடீஸ் மேன்டிலை பயன்படுத்தி வரலாம்.

லேடீஸ் மேன்டிலின் உடல் நல நன்மைகள்

லேடீஸ் மேன்டிலின் உடல் நல நன்மைகள்

ஐரோப்பியர்கள், குறிப்பாக ஜெர்மனியர்கள் மற்றும் ஸ்வீடன்கள் இந்த லேடீஸ் மேன்டில் மூலிகையை தங்கள் உடல் நல நன்மைகளுக்காக பயன்படுத்தி வருகிறார்கள்.

காயங்களை குணப்படுத்துதல்

காயங்களை குணப்படுத்துதல்

சில ஆயுர்வேத மருத்துவர்கள் இந்த தாவரத்தை காயங்களுக்கு சிகச்சை அளிக்க பயன்படுத்தி வருகிறார்கள். இது ஸ்டைப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே நமக்கு ஏற்படும் சின்னக் காயங்கள், தீப்பட்ட காயங்கள், கீறல்களை இந்த மூலிகையை கொண்டே சரி செய்ய இயலும்.

மாதவிடாய் பிரச்சனைகள்

மாதவிடாய் பிரச்சனைகள்

குறிப்பாக இந்த மூலிகை மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்ய பயன்படுகிறது. குறிப்பாக பெண்களின் மாதவிடாய் போக்கை சரிசெய்கிறது. இதிலுள்ள சாலிசிலிக் அமிலம் மாதவிடாய் வலிகளுக்கு நல்ல வலி நிவாரணியாக செயல்படுகிறது.

யோனி நோய்த்தொற்றுகள்

யோனி நோய்த்தொற்றுகள்

இந்த மூலிகை பெண்களின் யோனி பகுதியை சுத்தம் செய்கிறது. ஈஸ்ட் தொற்று, அரிப்பு, வெள்ளை வெளியேற்றம் போன்றவை வராமல் தடுக்கிறது.

பிரசவத்திற்கு பிறகு

பிரசவத்திற்கு பிறகு

நீண்ட காலத்திற்கு முன்பு இந்த மூலிகையை வைத்து நிறைய கட்டுக் கதைகள் வந்தது. பெண்களின் கன்னித்தன்மையை மீட்டெடுக்க இந்த மூலிகையை பயன்படுத்தி வந்ததாக கூறினர். ஆனால் நவீன காலத்தில் பிரசவத்திற்கு பிறகு பாலூட்டும் பெண்களின் மார்பகத்திலும் வயிற்றிலும் ஏற்படும் தழும்புகளை போக்க இது பயன்படுகிறது.

வாய் ஆரோக்கியம்

வாய் ஆரோக்கியம்

பல் அறுவை சிகிச்சைக்கு பின், லேடீஸ் மேன்டிலில் இருந்து பெறப்பட்ட சாற்றை கொண்டு வாயை கழுவும் போது, அப்பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம், மற்றும் அதை விரைவில் குணமடையச் செய்யலாம்.

இதர உடல் நல நன்மைகள்

இதர உடல் நல நன்மைகள்

* இது பசியை அதிகரிக்க உதவுகிறது

* வயிற்று வலியை தணிக்கிறது

* சீரண சக்தியை எளிதாக்குகிறது

* சர்க்கரை நோயாளிகளின் இரத்த ஓட்ட பிரச்சனையை சரிசெய்கிறது.

* இந்த லேடீஸ் மேன்டில் மருந்தை மேற்பூச்சாகவோ அல்லது உட்செலுத்தும் மருந்தாகவோ பயன்படுத்தலாம். இருப்பினும் இதை எடுத்துக் கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை செய்து கொள்வது நல்லது. நீங்கள் கர்ப்பமாக இருந்தால் இதை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing Benefits Of Lady’s Mantle For Skin, Hair And Health

Lady's mantle has been used since medieval times for its medicinal properties. But what are these properties? Here is a list just for you!
Story first published: Tuesday, October 22, 2019, 17:15 [IST]
Desktop Bottom Promotion