Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
ஆஸ்துமாவிற்கு மாற்று மருத்துவத்தை மேற்கொள்பவரா? அப்ப இந்த செய்தி உங்களுக்கு தான்…
ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட பல சிகிச்சை முறைகள் உள்ளன. இருப்பினும், ஆஸ்துமா பிரச்சனைக்கு மாற்று மருத்துவ முறையும் உண்டு.
சிறு குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் ஏற்படக்கூடிய நோய்களில் ஆஸ்துமாவும் ஒன்று. இன்றைய காலக்கட்டத்தில் இது மிகவும் அதிகரித்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட பல சிகிச்சை முறைகள் உள்ளன. இருப்பினும், ஆஸ்துமா பிரச்சனைக்கு மாற்று மருத்துவ முறையும் உண்டு. இத்தகைய சிகிச்சையின் மூலம், ஆஸ்துமாவின் அபாயத்திலிருந்து நோயாளிகளை காப்பாற்ற முடியும். இது ஆஸ்துமா சிகிச்சையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சிகிச்சை முறையாகும்.

இத்தகைய மாற்று மருத்துவத்தில் மசாஜ் சிகிச்சை, பயோஃபீட்பேக், மூலிகை சிகிச்சை, யோகா போன்றவை அடங்கும். சுமார் 60% ஆஸ்துமா நோயாளிகள் மாற்று மருந்தைப் பயன்படுத்தி தங்களது உடல்நிலையை சீராக வைத்திருக்க முயற்சிக்கின்றனர்.

ஆஸ்துமாவின் அறிகுறிகள்:
* சளி, இருமல் அல்லது வறட்டு இருமல்
* மார்பு இறுக்கமாக இருப்பதை போல் உணர்வது
* சுவாசிப்பதில் சிரமம்
* மூச்சுத்திணறல்
* இரவில் அல்லது காலையில் நிலைமை மிகவும் கடுமையாவது
* குளிர்ந்த காற்றை சுவாசிப்பதன் மூலம் கடுமையான நிலைக்கு ஆளாவது
* உடற்பயிற்சியின் போது உடல்நிலை மோசமாவது
* சத்தமாக சுவாசிப்பது, சோர்வை ஏற்படுத்துவது
* தீவிர நிலையை அடையும் போது அடிக்கடி வாந்தியெடுத்தல்

ஆஸ்துமா ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்:
இன்றைய காலகட்டத்தில், ஆஸ்துமா ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணம் என்றால் காற்று மாசுபாடு. அதாவது தொழிற்சாலைகள், வாகனங்கள் போன்றவற்றிலிருந்து வெளியேறும் புகை தான் அவற்றிற்கு காரணம். குளிர், காய்ச்சல், புகைபிடித்தல், வானிலை மாற்றம் போன்ற காரணங்களாலும் சிலருக்கு ஆஸ்துமா வருகிறது. சில ஒவ்வாமை உணவுகளை உட்கொள்வதால் சுவாச நோய்கள் ஏற்படுகின்றன. வயிற்றில் அதிக அளவு அமிலம் இருப்பதாலும் கூட ஆஸ்துமா ஏற்படும். இது தவிர, போதை மருந்துகள், ஆல்கஹால் மற்றும் சில நேரங்களில் அதிகப்படியான மன அழுத்தமும் ஆஸ்துமாவை ஏற்படுத்துகிறது. அதிகப்படியான உடற்பயிற்சியும் கூட ஆஸ்துமா ஏற்படக் காரணமாகி விடுகிறது. சிலருக்கு, இந்த சிக்கல் மரபணு மூலமாகவும் உண்டாகலாம்.

ஆஸ்துமாவின் வகைகள்:
* ஒவ்வாமை ஆஸ்துமா
* ஒவ்வாமை இல்லாத ஆஸ்துமா
* கலப்பு ஆஸ்துமா
* உடற்பயிற்சியால் உண்டாகும் ஆஸ்துமா
* இருமல் மாறுபாடு ஆஸ்துமா
* தொழில்சார் ஆஸ்துமா
* இரவுநேர ஆஸ்துமா
* ஆஸ்துமாவின் பிரதிபலிப்பு
* குழந்தைகளுக்கு உண்டாகும் தொடக்க நிலை ஆஸ்துமா
* பெரியோருக்கான ஆஸ்துமா

ஆஸ்துமாவிற்கான மாற்று மருத்துவம்:
மூலிகை வைத்தியம்
தாவரங்கள் (மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள்) அவற்றிற்கென தனித்துவமான மற்றும் குறிப்பிடத்தக்க வரலாற்றைக் கொண்டுள்ளன. உடலியல் மற்றும் மூச்சுக்குழாய் கூறுகளுக்கு சிகிச்சையளிப்பதில் அவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆஸ்துமாவிற்கான மூலிகை சிகிச்சை முறையில் தாவரங்கள் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் அடங்கும். ஆஸ்துமாவிற்கு கொடுக்கப்படும் பெரும்பாலான மருந்துகள் கூட தாவரங்களிலிருந்து தான் தயாரிக்கப்படுகின்றன. இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி ஆஸ்துமா நோயாளிகளுக்கு தன்னிச்சையான முறையில், உடலியல் சார்ந்து கட்டுப்படுத்தப்படுகின்றன. இது ஆஸ்துமா உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு சிறந்த நிவாரணமாக கருதப்படுகிறது.

யோகா
ஆஸ்துமா பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெற யோகா மிகவும் நன்மை பயக்கும். ஆஸ்துமாவின் சிக்கலைக் குறைப்பதில், யோகா நல்ல மறுசீரமைப்பு என்றே கூறலாம். ஆஸ்துமா நோயாளிக்கு அனுலோம்-விலோம் உட்பட பல சிறப்பு யோகாசனங்கள் மிகவும் உதவியாக இருக்கும். சுவாசப் பயிற்சிகளால், அனைத்து வித சுவாசப் பிரச்சனைகளையும் கட்டுப்படுத்திடலாம்.

ஹோமியோபதி
மக்கள் பொதுவாக ஹோமியோபதி மருந்துகளை அதிகம் நம்புகிறார்கள். ஏனெனில், அவற்றால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. இதற்கு, இயற்கை பொருட்களை கொண்டு மருந்துகள் தயாரிக்கப்படுவதே காரணம். அதே போல், இந்த மருந்துகளும் தனித்துவமான முறைகளைப் பயன்படுத்தியே தயாரிக்கப்படுகின்றன. ஹோமியோபதி மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம், ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏறபடக்கூடிய மூச்சுத்திணறலைக் குறைக்கலாம். அதுதவிர, ஆஸ்துமாவின் பிற அறிகுறிகளையும் இதன்மூலம் கட்டுப்படுத்தலாம். ஆஸ்துமாவிற்கு மாற்று மருந்து எடுத்துக் கொள்வதற்கு முன்பு, உங்களது மருத்துவரை அணுகுவது அவசியம். மேலும், நீங்கள் எடுத்துக் கொள்ளவிருக்கும், சிகிச்சை முறையைப் பற்றிய முழுமையான தகவல்களையும் அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். ஏனெனில், சில நேரங்களில், மூலிகை அல்லது இயற்கை பொருட்களால் ஆன போதிலும் சில மாற்று மருந்துகள் தீங்கு விளைவிக்க வாய்ப்புள்ளது.

முடிவுரை:
மாற்று மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் தயாரிப்புகளை எடுத்துக் கொள்வதற்கு முன்பு உங்களது மருத்துவரை அணுகுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவர்களுடன் கலந்தாலோசித்து, அனைத்து தயாரிப்புகளையும் பற்றிய முழுமையான தகவல்களை அவர்களுக்கு தெரியப்படுத்தவும். மூலிகை மருந்துகளை வாங்கும் போது, அதன் பிராண்டையும், அதன் காலாவதி தேதியையும் நினைவில் வைத்திருக்க வேண்டியவது முக்கியம். மேலும், மருந்து பெட்டியில் எழுதப்பட்ட வழிகாட்டு முறைகளையும் கவனமாகப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications