காலையில் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன...?

காலையில எழுந்துக்கறதுக்கே படாதபாடு பட வேண்டி இருக்கு. இதுல எங்க இருந்து சில முக்கியமான வேலைகள செய்யறது..? அப்படினு பலர் எப்போதும் நினைப்பதுண்டு. பலர் இந்த புத்தாண்டில் இதையே உறுதி மொழியாக கூட எடுத்திருப்பதும் உண்டு. காலையில் எழுந்து கொள்வது மட்டும் முக்கியம் கிடையாது. அதை விட மிக முக்கியமான ஒன்று இந்த ஆலிவ் எண்ணெய்யை ஒரு ஸ்பூன் சாப்பிடுவதே.

காலையில் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன..?

அது என்ன காலையிலையே ஆலிவ் எண்ணெய் சாப்பிடுறதா..? என்கிற கேள்விக்கு பல வித அற்புத பதில்கள் உள்ளன. அதுவும் உங்களின் உடலில் நீண்ட நாட்களாக உள்ள அனைத்துவித பிரச்சினைக்கும் இது சிறந்த தீர்வை தரும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். உடல் எடை குறைவு, புற்றுநோய், வயதாவதை தடுத்தல் போன்ற பல பிரச்சினைகளுக்கும் இந்த 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் தீர்வை தருகின்றதாம். வாங்க, இது எப்படி சாத்தியம் என்பதை இனி தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலையில் எழுந்ததும்...

காலையில் எழுந்ததும்...

காலையில் நாம் எழுந்ததும் ஒரு சில விஷயங்களை தவறாது செய்ய வேண்டும். அதில் மிக முக்கியமானது ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன் சாப்பிடுவது. மற்ற எண்ணெய்களை விட இந்த எண்ணெய்யை காலையில் வெறும் வயிற்றில் எடுத்து கொண்டால் உடலில் ஏராளமான மாற்றங்கள் நடக்குமாம்.

நச்சுக்களை வெளியேற்ற...

நச்சுக்களை வெளியேற்ற...

நமது உடலில் சேர கூடிய அழுக்குகள் தான், நமக்கு பலவித நோய்களை தருகின்றது. இந்த நச்சுக்களை உடலில் இருந்து நீக்கி விட்டாலே நோய்கள் இன்றி வாழலாம். தினமும் காலையில் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் குடிப்பதால் குடல் பகுதி, செரிமான மண்டலம் முழுவதும் சுத்தமாகி விடும். இதனை 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்தும் சாப்பிடலாம்.

எதிர்ப்பு சக்தியை இரட்டிப்பாக்க

எதிர்ப்பு சக்தியை இரட்டிப்பாக்க

ஆலிவ் எண்ணெய்யில் ஒமேகா 3 போன்ற கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளது. தினமும் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சாப்பிட்டால் இந்த கொழுப்பு அமிலங்கள் நமது உடலுக்கு அதிக ஆற்றலை தந்து நோய்கள் இல்லாமல் வாழ வைக்கிறது. மேலும், எதிர்ப்பு சக்தியின் அளவையும் இது உயர்த்துகின்றதாம்.

காலையில் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன..?

மிக மோசமான கெட்ட கொலஸ்ட்ராலை உடலில் இருந்து துரத்தி அடிக்க 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் உதவும். இதனால் இதயத்தில் ஏற்படுகின்ற அடைப்பு, ரத்த கொதிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.

எனவே தினமும் காலையில் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சாப்பிடுங்கள். இதனை சமையலுக்கும் பயன்படுத்தலாம்.

எடையை குறைக்க

எடையை குறைக்க

உடல் எடை கூடி போய் இருந்தால் உங்களுக்கான தீர்வு இந்த ஆலிவ் எண்ணெய்யில் உள்ளது. மருத்துவர்களும் உடல் எடையை குறைப்பவர்களுக்கு ஆலிவ் எண்ணெய்யை தான் பரிந்துரைக்கின்றனர். காலையில் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சாப்பிட்டு வந்தால் உடல் எடை கச்சிதமாக இருக்கும்.

கல்லீரை சுத்தம் செய்ய

கல்லீரை சுத்தம் செய்ய

கல்லீரல் பாதிப்புகள் வராமல் இருக்க, இந்த ஆலிவ் எண்ணெய்யே போதும். 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் உள்ள அழுக்குகள் முற்றிலுமாக சுத்தமாகி விடும்.

நீண்ட இளமைக்கு

நீண்ட இளமைக்கு

இனி, எந்த ஒரு கிரீமோ, பவ்டரோ உங்களை அழகு செய்ய தேவையில்லை. மாறாக இந்த ஆலிவ் எண்ணெய் உங்களை நீண்ட காலம் இளமையாக வைத்து கொள்ளுமாம். இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் இ, போன்றவை அதிக அழகுடன் உங்கள் சருமத்தை வைத்து கொள்ளுமாம்.

பெருங்குடல் புற்றுநோய்

பெருங்குடல் புற்றுநோய்

இன்று பலருக்கும் தெரியாமல் மறைந்து கொண்டுள்ள ஒரு பேராபத்து தான் இந்த பெருங்குடல் புற்றுநோய். இதனை தடுக்கும் ஆற்றல் ஆலிவ் எண்ணெய்க்கு உள்ளதாம்.

பெருங்குடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதோடு, புற்றுநோய் செல்கள் உருவாகாமல் பார்த்து கொள்ளுமாம்.

சர்க்கரை அளவு

சர்க்கரை அளவு

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் நமது உடலுக்கு எண்ணற்ற கோளாறுகள் வர தொடங்கும். இந்த சர்க்கரை அளவை சீராக வைத்து கொள்ள ஆலிவ் எண்ணெய் உதவுகிறதாம். மேலும், கொலெஸ்ட்ராலையம் இது குறைகிறதாம்.

சுறுசுறுப்பான மூளை

சுறுசுறுப்பான மூளை

எப்போதும் சோர்வாக உள்ளீர்களா..? உங்களுக்கு இந்த ஆலிவ் வைத்தியம் நன்கு உதவும். தினமும் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சாப்பிட்டு வந்தால் மூளை படு சுறுசுறுப்பான இருக்கும். மேலும், ஞாபக மறதியையும் குணப்படுத்த கூடும்.

வீக்கங்களை குறைக்க

வீக்கங்களை குறைக்க

உடலின் உட்பகுதியில் அல்லது வெளி பகுதியில் வீக்கங்களோ, நெருப்பு காயங்களோ இருந்தால் அதற்கு தீர்வை தருகிறது இந்த ஆலிவ் எண்ணெய். 1 அல்லது 2 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் இதற்கும் நல்ல பலன் கிடைக்குமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion