For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தும்மல் வரும்போது நம் கண்கள் தானாக மூடிக்கொள்வதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?

நமது உடலில் நடக்கும் பல செயல்கள் நமது கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை. அப்படி நம் உடல் தன்னிச்சையாக செய்யும் ஒரு செயல்தான் தும்மல் ஆகும்.

|

நமது உடலில் நடக்கும் பல செயல்கள் நமது கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை. அப்படி நம் உடல் தன்னிச்சையாக செய்யும் ஒரு செயல்தான் தும்மல் ஆகும். உண்மையில் தும்மல் என்பது ஒரு நிர்பந்தம் ஆகும். தும்மலின் போது நமது மூக்கு மற்றும் நுரையீரலில் இருந்து 250 கிமீ வேகத்திற்கு காற்று வெளியேற்றப்படுகிறது.

Why and How Do We Sneeze

தும்மல் என்பது கிருமிகள் மற்றும் வைரஸ்கள் பரவுவதற்கான முக்கிய வழிகளில் ஒன்றாகும், குறிப்பாக மழைக்காலங்களில் ஜன்னல்கள் மூடியிருக்கும் போது. ஒரு தும்மலினால் பல்லாயிரக்கணக்கான உமிழ்நீர் மற்றும் சளி துகள்கள் வெளியேறலாம். இந்த ஒவ்வொரு துகளும் 0.5 - 5 மைக்ரான் விட்டம் கொண்டிருக்கும். தும்மல் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை இந்த பதவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தும்மல்கள்

தும்மல்கள்

சிலர் நிலமே அதிரும் அளவிற்கு சத்தமாக தும்முவார்கள், சிலரோ மிகவும் மெதுவாக சத்தமே வராதபடி தும்முவார்கள். ஆனால் அனைவரும் தும்மல் வரும்போது கண்களை மூடிக்கொள்வார்கள். இதெற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா?

தும்மல் ஏற்பட காரணம்

தும்மல் ஏற்பட காரணம்

தும்மல் ஏற்படுவதற்கு தற்போது கூறப்படும் காரணம் நமது உடலை தாக்கும் வைரஸ்களை நம் உடலில் இருந்து வெளியேற்றும் ஒரு பரிணாம பிரதிபலிப்புதான் இது. தும்மல் ஒரு சிறிய எரிச்சலால் கூட தூண்டப்படலாம். பொதுவாக மூக்கின் சளி சவ்வு மற்றும் நுரையீரல், காதுகள் அல்லது கண்களில் இருக்கும் கிருமிகள், வைரஸ்கள், ஒவ்வாமை அல்லது பிற துகள்களினால் ஏற்படும் எரிச்சலால் தும்மல் ஏற்படுகிறது.

தும்மலின் விளைவுகள்

தும்மலின் விளைவுகள்

தும்மல் என்பது இயற்கையான உடல் ரீதியான பிரதிபலிப்பாகும், இது உங்கள் உடலில் இருந்து தேவையற்ற பொருட்கள் அல்லது எரிச்சலை உங்கள் மூக்கிலிருந்து அழிக்க அனுமதிக்கிறது. இதனை கட்டுப்படுத்த முயலும்போது அது உங்கள் உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

MOST READ: பெயர் ' A' எழுத்தில் ஆரம்பிப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் தெரியுமா?

தும்மலை கட்டுப்படுத்தினால் என்ன நடக்கும்

தும்மலை கட்டுப்படுத்தினால் என்ன நடக்கும்

மூக்கு மற்றும் வாய்தான் உங்கள் தும்மலை கட்டுப்படுத்த இருக்கும் கடைசி வாய்ப்பு ஆகும். இந்த பகுதிகளில் தும்மலை அடக்கினால் அது உங்கள் சைனஸின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். நீங்கள் வாய்ப்பகுதியில் தும்மலை நிறுத்தினால், நீங்கள் ஒரு வல்சால்வாவை உருவாக்குவீர்கள், இதனால் கடுமையான இருமல் ஏற்படும்.

தும்மலை உருவாக்கும் தசைகள்

தும்மலை உருவாக்கும் தசைகள்

தும்மல் ஒரு நொடியில் வந்து செல்வதாக இருக்கலாம். ஆனால் அதற்கு பின்னால் பல தசைகளின் பங்கு இருக்கிறது. வயிற்று தசைகள், மார்பு தசைகள், நுரையீரலுக்கு கீழே இருக்கும் தசைகள், குரல் தண்டு தசைகள், தொண்டையின் பின்புறத்தில் தசைகள், கண் இமைகளில் உள்ள தசைகள் என அனைத்தும் ஒன்று சேர்ந்துதான் ஒரு தும்மலை உருவாக்குகிறது.

பாதிப்புகள்

பாதிப்புகள்

தும்மலை அடக்குவதால் ஏற்படும் அழுத்தம் உங்களுக்கு கடுமையான இருமலை உண்டாக்கும். இதனால் உங்கள் முதுகில் வலி ஏற்படலாம். சிலசமயம் தும்மல்கள் கீழ் முதுகில் சுளுக்கை ஏற்படுத்தும். மிகவும் சக்திவாய்ந்த தும்மலை கட்டுப்படுத்துவது உங்களுக்கு எலும்பு முறிவை கூட ஏற்படுத்தலாம்.

தும்மல் வரும்போது ஏன் கண்கள் மூடிக்கொள்கிறது?

தும்மல் வரும்போது ஏன் கண்கள் மூடிக்கொள்கிறது?

தும்மல் வரும்போது யாராலும் கண்களை திறந்து வைத்திருக்க முடியாது. இதுவும் நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒரு தன்னிச்சை செயலாகும். கண்களை மூடுவது தும்மலினால் கண்களுக்கு பின்புறம் ஏற்படும் அழுத்தத்தையும், அசௌகரியத்தையும் தடுக்கத்தான். மற்றொரு காரணம் தும்மலின் பொது வெளிப்படும் கிருமிகளும், வைரஸ்களும் கண்களுக்குள் நுழையாமல் இருக்க நம் உடல் செய்துகொள்ளும் தன்னிச்சை செயல்.

MOST READ: புராணங்களின் படி இப்படி குளிப்பது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்யும் மிகப்பெரிய பாவமாகும்...!

இதயத்தின் மீது பாதிப்பு

இதயத்தின் மீது பாதிப்பு

நமது இதயம் துடிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது. ஆனால் தும்மல் நமது இதயத்துடிப்பை மீது ஒரு விநாடி குறைக்கும். ஆனால் தும்மல் முடிந்தவுடன் அடுத்தத் துடிப்பு விரைவாக வரும். தும்மல் நமது உடலில் இருக்கும் கிருமிகளை வெளியேற்றும் ஒரு நிகழ்வு ஆகும். இதனை கட்டுப்படுத்துவது நமது உடலின் மீது எதிர்மறை விளைவுகளைத்தான் உண்டாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Do We Sneeze? and How Do We Sneeze?

Check out the reason why do we sneeze and how do we sneeze?
Story first published: Friday, July 12, 2019, 13:28 [IST]
Desktop Bottom Promotion