இந்த பொருட்களை தொட்டா மறக்காம கையை கழுவிருங்க இல்லனா பெரிய ஆபத்துதான் தெரிஞ்சிக்கோங்க...

கை கழுவுவது என்பது அடிப்படை ஆரோக்கிய பழக்கங்களில் ஒன்றாகும். ஏனெனில் அது நமது உடலுக்குள் கிருமிகள் செல்வதை பெருமளவில் தடுக்க உதவும் ஒரு சுகாதர முறையாகும்.

கை கழுவுவது என்பது அடிப்படை ஆரோக்கிய பழக்கங்களில் ஒன்றாகும். ஏனெனில் அது நமது உடலுக்குள் கிருமிகள் செல்வதை பெருமளவில் தடுக்க உதவும் ஒரு சுகாதர முறையாகும். பொதுவாக நாம் சாப்பிடுவதற்கு முன் மற்றும் சாப்பிட்டு முடித்ததற்கு பிறகு மற்றும் கழிவறைக்கு சென்று வந்த பிறகு கைகளை கழுவுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். ஆனால் நமது ஆரோக்கியத்திற்கு இது மட்டும் போதாது.

Wash Your Hands Immediately After Touching These Things

நாம் அன்றாடம் தொடக்கூடிய சில பொருட்களும், இடங்களும் கிருமிகளின் வாழ்விடங்களாக இருக்கிறது. இந்த பொருட்களை தொட நேர்ந்தால் உடனடியாக கைகளை கழுவ வேண்டியது அவசியம். இல்லையெனில் கை மற்றும் வாய் வழியாக செல்லக்கூடிய கிருமிகள் உங்களுக்கு பல ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும். இந்த பதிவில் எந்தெந்த பொருட்களை தொட்ட பின்னால் உடனடியாக கைகளை கழுவ வேண்டும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பணம்

பணம்

டிஜிட்டல் இந்தியாவாக மாறி கார்டுகளை உபயோகிக்க தொடங்கி இருந்தாலும் பணத்தை தொடாமல் நம்மால் வாழ முடியாது. பணத்தை கையில் தொட்ட பின் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கைகளை கழுவி விடுங்கள். ஏனெனில் பணத்தில் நூற்றுக்கணக்கான கிருமிகள் இருக்க வாய்ப்புள்ளது. வாய் மற்றும் பிறப்புறுப்புகளி பாதிக்கும் கிருமிகள், செல்லப்பிராணிகள் DNA மற்றும் வைரஸ்கள் என பல ஆபத்துகள் பணத்தின் மூலம் பரவக்கூடும். நாணயங்களில் கூட பெத்தோஜன்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.

கைப்பிடிகள்

கைப்பிடிகள்

பாக்டீரியா மற்றும் வைரஸ் பரவுதலை தடுக்க கை கழுவுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். பொது போக்குவரத்து சாதனங்களில் பயணம் செய்தால் உடணடியாக கையை கழுவ வேண்டியது அவசியமாகும். ஏனெனில் பலரும் பேருந்து மற்றும் ஆட்டோக்களில் இருக்கும் கைப்பிடிகளை உபயோகிப்பார்கள். அதனால் பொதுவாகவே அங்கு அதிக கிருமிகள் இருக்கும். எனவே பயணம் முடிந்த உடனேயே கைகளை கழுவுவது நல்லது.

 ஹோட்டல் மெனு

ஹோட்டல் மெனு

உணவகங்கள் பொதுவாக கிருமிகள் நிறைந்த இடமாக இருக்கலாம். அதிலும் மெனுக்கள் மிகவும் மோசமானவை ஆகும். உணவகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் மெனுக்களில் 185,000 பாக்டீரிய உயிரினங்கள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். பலரும் இதை உபயோகிப்பதால் இதன் மூலம் கிருமிகள் பரவலாம். நாமும் பயன்படுத்திதான் ஆகவேண்டும் ஆனால் பயன்படுத்திய பிறகு கையை கழுவிட வேண்டும்.

மற்றவர்களின் பேனா

மற்றவர்களின் பேனா

இப்போதெல்லாம் பெரும்பாலும் மளிகை சாமான் லிஸ்ட் எடுக்கக்கூட போனைதான் பயன்படுத்துகிறோம். ஆனால் சிலசமயம் பேனாவை உபயோகிக்கும் நிலை ஏற்படலாம். ஓர் அலுவலக பேனாவில் கழிவறையில் இருக்கும் அளவிற்கு பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. அதிலும் பலர் பேனா மூடிகளை வாயில் வைக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். இது அவர்களுக்கு போல பிரச்சினைகளை உண்டாக்கும்.

விலங்குகள்

விலங்குகள்

செல்ல பிராணிகளுடன் விளையாடிய பிறகு கை கழுவுவதை பலரும் செய்வதில்லை, ஆனால் அதனை கண்டிப்பாக செய்ய வேண்டும். ஏனெனில் விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்கள் எண்ணற்றவை. எனவே விலங்குகளுடன் விளையாடிய பின் அது உங்கள் வீட்டு செல்ல பிராணியாகவே இருந்தாலும் கைகளை கழுவ வேண்டியது அவசியம்.

தொடுதிரை

தொடுதிரை

தொடுதிரை போன் வந்த பிறகு பேப்பர்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. ஆனாலும் போன் உபயோகித்த பிறகு கைகளை கழுவ வேண்டியது அவசியமாகும். கிருமிகள் அனைத்து இடங்களிலும் இருக்கலாம் ஆனால் சில இடங்களில் நீங்கள் நினைப்பதை விட அதிகமாக இருக்கலாம். அந்த இடங்களில் ஒன்றுதான் தொடுதிரை ஆகும். கதகதப்பாக இருக்கும் இடங்களில் கிருமிகள் அதிகம் வசிக்க விரும்பும். உங்கள் போன் பெரும்பாலும் சூடாகத்தான் இருக்கும். இதுபோதும் கிருமிகள் அதிகளவில் பெருக.

மருத்துவமனையில் இருக்கும் அனைத்தும்

மருத்துவமனையில் இருக்கும் அனைத்தும்

மருத்துவமனைக்கு பெரும்பாலும் நோயாளிகளே வருவார்கள். எனவே மருத்துவமனை முழுவதும் கிருமிகள் நிறைந்திருக்கும். எனவே நீங்கள் மருத்துவமனைக்கு சென்று விட்டு அங்குள்ள பொருட்களை தொட்டு விட்டு கைகளை சுத்தமாக கழுவாமல் இருப்பது உங்கள் உடலுக்குள் கிருமிகள் நுழைய நீங்களே வாசலை திறந்து வைப்பது போன்றதாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, April 9, 2019, 18:00 [IST]
Desktop Bottom Promotion