Just In
- 39 min ago
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
- 13 hrs ago
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- 15 hrs ago
தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
- 15 hrs ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!
Don't Miss
- News
என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி
- Movies
ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா?
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Technology
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கையை சரியாக கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா?
ஆரோக்கியமாய் வாழ ஆசைப்பட்டால் அதற்கு சில பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். அதில் அடிப்படையான முதல் பழக்கமாக இருக்க வேண்டியது கை கழுவுவது ஆகும். சாப்பிடும் முன்னரும், பின்னரும் மேலும் வெளியில் சென்று வந்தால், ஏதாவது பொருளை தொட்டால் உடனடியாக கை கழுவுவதை வழக்கமாக கொள்ள வேண்டும்.
கை கழுவுவது உங்களுக்கு சாதாரண ஒன்றாக தோன்றலாம் ஆனால் கையை ஒழுங்காக கழுவவில்லை என்றாலோ அல்லது அடிக்கடி கழுவவில்லை என்றாலோ நீங்கள் பல ஆரோக்கிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த பதிவில் கை கழுவாமல் இருந்தால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

சுவாசக்கோளாறு ஏற்படலாம்
கையை கழுவவில்லை என்றாலும் உடல்நிலை சரியில்லாமல் போகும் என்று நம் அம்மாக்கள் சொல்வது உண்மைதான். நீங்கள் நினைக்கலாம் இதனால் சளி மட்டும்தான் பிடிக்கும் என்று ஆனால் உண்மை அதுவல்ல, காய்ச்சல், நிமோனியா மற்றும் சுவாசக்கோளாறுகள் போன்ற பல பிரச்சினைகள் இதனால் ஏற்ப்படலாம். சுத்தமாக அடிக்கடி கையை கழுவுவது உங்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்படும் வாய்ப்பை 21 சதவீதம் வரை குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.

வயிற்றுப்போக்கு
கையை சரியாக கழுவும் பழக்கம் இல்லாதவர்களுக்கு வயிறு தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பாத்ரூம் சென்று வந்த பிறகு கையை கழுவுவது நீங்கள் சுகாதாரமாய் இருப்பதற்கான முதல் படி ஆகும். மலம் கழிக்கும் போது வெளிப்படும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் வயிறு தொடர்பான பல பிரச்சினைகளை உண்டாக்கும் குறிப்பாக சாலோமோனோலா, நோரோவைரஸ் போன்றவை ஆபத்தானவையாகும்.

நச்சு உணவு
கையை கழுவாமல் உணவு உண்பதும் சரி, உணவை பரிமாறுவதும் சரி உணவை நச்சாக்குவதற்கு சமமாகும். உணவை சமைக்க தொடங்கும் முன்னும், காய்கறி மற்றும் இறைச்சிகளை சுத்தப்படுத்தும் முன்னரும் கையை கழுவ வேண்டியது அவசியம். இதன்மூலம் பாக்டீரியா பரவுவதை பெருமளவில் நீங்கள் தடுக்கலாம். அசைவ உணவுகளை சுத்தப்படுத்தும் முன்னரும், பின்னரும் கையை கழுவ மறந்து விடாதீர்கள்.

மற்றவர்களுக்கு நோயை பரப்பலாம்
நீங்கள் நாள் முழுவதும் உங்களை சுற்றியிருக்கும் பல பொருட்களை தொடுவீர்கள். உங்கள் கண், வாய், மூக்கு, காது போன்றவற்றை தொட்டு விட்டு கையை கழுவாமல் கதவு, கைப்பிடி போன்றவற்றை தொடுவீர்கள். இதனால் அந்த இடஙகளில் வைரஸ்கள் பரவியிருக்க வாய்ப்புள்ளது. இந்த இடத்தை மற்றவர்கள் தொடும்போது அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள்
கை கழுவாமல் இருப்பது உங்களுக்கு நீங்களே நோயை ஏற்படுத்தி கொள்ள வழிவகுப்பதுடன் மற்றவர்களுக்கும் ஆபத்தை உண்டாக்குவதாக அமைகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இதனால் உங்களால அதிக பாதிப்புக்கு உள்ளாகலாம். குழந்தைகளை தொடும் முன் கண்டிப்பாக கையை கழுவ வேண்டியது அவசியமாகும்.
MOST READ: திருநங்கைகள் தோன்ற காரணமாக இருந்ததே அர்ஜுனனின் இந்த மகன்தானாம் தெரியுமா?

பாக்டீரியாவை தடுக்கலாம்
கை கழுவுவது என்பது நீங்கள் நோயை பெறாமல் இருப்பதற்கு செய்யப்படும் முதல் செயலாகும். எனவே இதனை அடிக்கடி செய்வதன் மூலம் பாக்டீரியாக்கள் பரவுவதை நீங்கள் தடுக்கலாம். இதனால் உங்கள் ஆன்டி பாக்டீரிய மருந்துகள் தேவையே இல்லை. தினமும் 5 அல்லது 6 முறைக்கு மேல் கை கழுவுபவர்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும் வாய்ப்பு 60 சதவீதம் குறையும்.