Latest Updates
-
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்!
சுயஇன்பம் காணும்போது ஆபாசப்படம் பார்ப்பவரா நீங்கள்? உங்களுக்கான எச்சரிக்கைதான் இது...!
ஆபாசப்படம் பார்ப்பது என்பது தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் மிகவும் சாதாரணமான மற்றும் எளிதான ஒன்றாக மாறிவிட்டது.
ஆபாசப்படம் பார்ப்பது என்பது தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் மிகவும் சாதாரணமான மற்றும் எளிதான ஒன்றாக மாறிவிட்டது. இன்று உலகளவில் இது மிகப்பெரும் வியாபாரமாக மாறிவிட்டது, இவர்களின் மிகப்பெரிய மூலதனம் இன்றைய கால இளைஞர்கள்தான். அனைவரின் கையிலும் ஸ்மார்ட்போன் இருக்கும் இருந்த காலத்தில் எந்த இணையத்தை பார்த்தாலும் நமது கிளர்ச்சியை தூண்டும் சில ஆபாசத்தளங்களின் லிங்க்குகள் அந்த இணையத்தில் இருப்பதை நாம் தினம்தோறும் பார்க்கிறோம்.

சுயஇன்பம் காண்பது ஆண், பெண் இருவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான ஆரோக்கியாமான பழக்கமாகும். சுயஇன்பம் காண்பது என்பது உங்களுக்கு சில ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும் அது எல்லை மீறாத அளவிற்கு பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் ஆபாசப்படம் பார்த்துக்கொண்டே சுயஇன்பம் காணும் தவறான பழக்கம் இப்போது இளைஞர்களிடையே பெருமளவில் பரவி வருகிறது. இது அவர்களுக்கு உடலளவிலும், மனதளவிலும் பல பாதிப்புகளை உண்டாக்குகிறது. இந்த பதிவில் ஆபாசப்படம் பார்த்துக்கொண்டே சுயஇன்பம் காண்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

விறைப்பு செயலிழப்பு
விறைப்பு செயலிழப்பு என்பது பெண்ணுடன் உறவில் ஈடுபடும்போது ஆணுறுப்பு முழுமையான விறைப்பை அடைய இயலாத நிலையாகும். ஆபாசப்படம் பார்த்துக்கொண்டே அதிகமாக சுயஇன்பம் காணும்போது அது உண்மையான நெருக்கமான சூழ்நிலை ஏற்படும் போது உங்கள் ஆணுறுப்பு அதற்கு தயாராகாது. ஆபாசப்படம் பார்க்கும்போது மட்டுமே உங்களுக்கு முழுமையான விறைப்பு ஏற்படுவதை நீங்கள் உணருவீர்கள். இதற்கு காரணம் உங்களுடைய மூளை ஆபாசப்படம் பார்த்துக்கொண்டே சுயஇன்பம் காண்பதே உங்களுடைய பாலியல் ஆசைகளை பூர்த்தி செய்கிறது என்று நினைக்க தொடங்குவதுதான்.

முன்கூட்டியே விந்து வெளியேறுதல்
இது பெண்ணுடன் உறவில் ஈடுபடும்போது ஆண்களுக்கு விரைவாகவே விந்து வெளியேறும் நிலையாகும். சிலசமயம் உறவில் ஈடுப்படுவதற்கு முன்பே கூட விந்தணுக்கள் வெளியேறிவிடும். மேலும் அடுத்த முறை விறைப்பை அடையமுடியாத நிலை கூட ஏற்படலாம். இதற்கு காரணம் நீங்கள் மிகச்சிறிய வயதிலேயே சுயஇன்பம் காண தொடங்கியதுதான். நீங்கள் உங்களின் ஆணுறுப்பு நரம்புகளை சிறிய வயதில் பயத்தின் காரணமாக விரைவில் விந்து வெளியேறும்படி பழக்கியிருப்பீர்கள். மேலும் இதனுடன் ஆபாசப்படம் பார்க்கும்போது அதன் காலஅளவு மிகவும் சுருங்கும்.

தாமதமான வெளியேற்றம்
இந்த நிலையில் உள்ள ஆண்களுக்கு உச்சக்கட்டம் என்பது மிகவும் தாமதமாகவே ஏற்படும் அல்லது ஏற்படாமலே போகவும் வாய்ப்புள்ளது. இதற்கும் ஆபாசப்படங்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. ஆபாசப்படங்கள் பார்க்கும்போது விந்தணு வெளியேறுவதை தள்ளிப்போட நீங்கள் அடிக்கடி இடைவெளி விடுவீர்கள். இந்த சூழ்நிலையில் உங்கள் ஆணுறுப்பு இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இயற்கையான முறையில் எந்தவித புற உந்துதலும் இன்றி சுயஇன்பம் காண்பதே ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கைக்கு நல்லதாகும்.

குறைந்த டெஸ்டோஸ்டிரோன்
ஆண்களின் பாலியல் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஹார்மோன் என்றால் அது டெஸ்டோஸ்டிரோன்தான். இதுதான் ஆண்களை ஆண்களாக மாற்றுகிறது. வலிமையான பாலியல் செயல்திறன், வலிமையான எலும்புகள், முடி வளர்ச்சி போன்றவற்றிற்கு டெஸ்டோஸ்டிரோன் மிகவும் அவசியமாகும். பெண்களுக்கும் இந்த டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் சுரப்பு அவசியமாகும். ஆண்கள் விந்தணுக்களை வெளியற்றும் போது குறிப்பிட்ட அளவு டெஸ்டோஸ்டிரோன் வெளிப்படுகிறது. அதனால்தான் ஆண்கள் விந்தணு வெளியேறியவுடன் சோர்வாக உணர்கிறார்கள். ஆபாசப்படம் பார்த்துக்கொண்டே சுயஇன்பம் காணும்போது உங்கள் மூளை அதிகளவு டெஸ்டோஸ்டிரோனை வெளியற்றும்படி சிக்னல்களை அனுப்புகிறது.

தனிமை
ஆபாசப்படம் பார்க்கும் ஆண்களும் சரி, பெண்களும் சரி எப்பொழுதும் தனிமையை விரும்புபவராய் மாறிவிடுகிறார்கள் மேலும் அதிக மனஅழுத்ததிற்கும் ஆளாகிறார்கள். இவர்கள் நண்பர்களுடன் இருப்பதை விரும்புவதை காட்டிலும் போன் மற்றும் கணிப்பொறியுடன் இருப்பதையே விரும்புகிறார்கள். இதனால் மற்றவர்களுக்கு இவர்கள் மீது அதிக வெறுப்பை ஏற்படுத்தும்.

சமூக பதட்டம்
பொது இடங்களில் நம்பிக்கையுடன் வெளிப்படுவதை இழப்பார்கள். ஆபாசப்படத்திற்கும், சுயஇன்பத்திற்கும் அதிக அடிமையானவர்களுக்கு அவர்கள் மீதான சுயமதிப்பீடு எப்பொழுதும் குறைவாக இருக்கும். இது அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும். மற்றவர்களுடன் சகஜமாக பழகுவது என்பது இவர்களுக்கு மிகவும் கடினமான காரியமாக மாறிவிடும்.

பாலியல் ஆசை குறைதல்
தொடர்ந்து ஆபாசப்படம் பார்த்து சுயஇன்பம் காண்பவர்கள் தங்களின் பாலியல் ஆசைகளை பூர்த்தி செய்துகொள்ள இதுவே போதும் என்ற மனநிலைக்கு விரைவில் வந்துவிடுகிறார்கள். இதனால் அவர்கள் எதிர்ப்பாலினத்தாருடன் உறவில் ஈடுபடும் ஆசையை இழக்க வாய்ப்புள்ளது. ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு இந்த பிரச்சினை அதிகம் ஏற்படுவதாக உளவியல் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அடிமைத்தனம்
புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போல ஆபாசப்படம் பார்த்து கொண்டே சுயஇன்பம் காண்பதும் ஒருவிதமான போதைதான். பிறகு நாளடைவில் நீங்கள் இந்த பழக்கத்திற்கு அடியாமையாகி விடுவீர்கள். இது தொடரும் பட்சத்தில் ஆபாசப்படம் பார்த்தால் மட்டுமே பாலியல் ஆசைகளும், விறைப்பும் ஏற்படும் என்னும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள். இது உங்களின்தாம்பத்திய வாழ்க்கைக்கும் துளியும் நல்லதல்ல.

தாழ்வு மனப்பான்மை
ஆபாசப்படங்களில் அவர்கள் பல தந்திரங்களையும், மருந்துகளையும் உபயோகப்படுத்தி நீண்ட நேரம் உறவில் ஈடுபடுவது போல நடிக்கிறார்கள். ஆனால் நீங்கள் அதனை பார்க்கும்போது தனக்கு ஆபாசப்படத்தில் காட்டுவது போல ஆணுறுப்பு நீளமாக இல்லையே, நீண்ட நேரம் உறவில் ஈடுபட இயலவில்லையே என்ற கவலைகள் எழும். மேலும் இது உங்களுக்குள் உங்களின் பாலியல் செயல்திறனை பற்றிய பல சந்தேகங்களை எழுப்பும்.



Click it and Unblock the Notifications
