Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
2.0 படத்தில் கூறியது போல உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஆராவிற்குள் இருக்கும் அதிசயங்கள் என்ன தெரியுமா?
ஆரா என்பது நமது உடலை சுற்றி இருக்கும் ஒரு மின்காந்த படலமாகும். மனிதர்களுக்கு மட்டுமின்றி பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் அவர்களுக்கான ஆரா இருக்கும்.
ஒரு மனிதனாக நம்மை நாம் நன்கு புரிந்து கொள்ள முதலில் நமது ஆராவை பற்றி புரிந்து கொள்ள வேண்டும்.
"ஆரா" இந்த வாரத்தை உங்களுக்கு புதியதாக இருக்கலாம். சமீபத்தில் வெளிவந்த 2.0 படத்தில் நீங்கள் இந்த ஆராவை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கலாம். அந்த படத்தில் ஆராவின் சக்தியை பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி விரிவாக காட்டியிருப்பார்கள். நம்முடைய சக்தி என்னவென்று புரிந்து கொள்ள முதலில் நாம் ஆராவை பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆரா என்பது நமது உடலை சுற்றி இருக்கும் ஒரு மின்காந்த படலமாகும். மனிதர்களுக்கு மட்டுமின்றி பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் அவர்களுக்கான ஆரா இருக்கும். அந்த படத்திலேயே இறந்த பல சிட்டுக்குருவிகளின் ஆராக்கள் இணைந்துதான் அவனை ஒரு அசுரனாக மாற்றும். ஆனால் மற்ற உயிர்களுடைய ஆராக்களில் இருந்து மனிதர்களின் ஆரக்கல் நிறைய வித்தியாசங்களுடன் உள்ளவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த பதிவில் ஆரா பற்றி உங்களுக்கு தெரியாத பல தகவல்களை பார்க்கலாம்.

மின்காந்த மண்டல உடல்
மனித உடலை சுற்றி இருக்கும் மின்காந்த மண்டலத்தின் அளவு என்பது விஞ்ஞானம் மூலம் அளவிட கூடிய ஒன்றுதான். மனித ஆராக்களை பொறுத்தவரை அவை ஏழு சிக்கலான அடுக்குகளுடன் உள்ளது. இந்த ஒவ்வொரு அடுக்கும் நம்முடைய உணர்ச்சிகள், மனநிலைகள், உணர்வுகள், ஆரோக்கியம் மற்றும் நடத்தை போன்றவற்றை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

ஆராவின் அடுக்குகள்
நாம் நொடிக்கு நொடி செய்யும் ஒவ்வொரு அசைவும் உணர்ச்சிகளின் வெளிப்பாடும் நமது உண்மையான சுயத்தின் வெளிப்பாடாக ஆராவில் பிரதிபலிக்கிறது. ஆராவின் முக்கியத்துவம் என்பது ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாத ஒன்றாகும். ஆராவின் ஒவ்வொரு அடுக்குகளையும் நன்கு புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

உடல் அடுக்கு
நமது ஆராவின் முதல் அடுக்கு உடல் தோற்றப்பாதை என்று அழைக்கப்படுகிறது, நமது உடலுக்கு மிகவும் நெருக்கத்தில் இருக்கும் ஆராவின் அடுக்கு இதுதான், இது நமது ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் ஒன்றாக இருக்கிறது. பகல் பொழுதை விட இரவு தூங்கும் நேரத்தில் இந்த அடக்கு அதிக வலிமையுடன் இருக்கும். இது நமது உடலில் இருந்து இரண்டு இன்ச் வெளியே இருக்கும், இந்த அடுக்கில் ஏற்படும் சிதறல்களே நமக்கு ஆரோக்கிய குறைபாடுகளாக ஏற்படுகிறது.

நிழலிடா (அ) ஆஸ்ட்ரால் அடுக்கு
நிழலிடா (அ) ஆஸ்ட்ரால் அடுக்கானது நமது வரலாறு மற்றும் நமக்கு அன்பானவர்கள் உடனான நமது அனுபவத்தையும் கொண்டிருக்கும். நாம் மற்றவர்களுடன் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதை இந்த அதுக்குத்தான் தீர்மானிக்கும். மற்றவர்கள் மீது நாம் காட்டும் இரக்கம் மற்றும் கவனிப்பை இந்த அடுக்கிலிருந்துதான் பெறுகிறோம்.

குறைந்த மனநல (அ) லோயர் மெண்டல் அடுக்கு
பெரும்பாலான மக்களுக்கு குறைந்த மனநல அடுக்கானது அவர்களின் அன்றாட வாழ்வில் அதிக செல்வாக்கு செலுத்துவதாக இருக்கிறது. நமது எண்ணங்களையும், கருத்துக்களையும் நாம் சேகரித்து வைக்குமிடம் இதுதான். நாம் ஆழ்ந்த சிந்தனையிலோ அல்லது வேலைப்பளு அதிகம் இருக்கும்போதோ இந்த அடுக்கு விரிவடையும். இட்னஹ் அடுக்கில் ஏற்படும் பாதிப்புகள் நம்மை கிளர்ச்சியுற செய்யும்.

உயர் மனநல அடுக்கு
உங்கள் குறைந்த மனநிலை அடுக்கிற்கு அருகில் இருந்தாலும் இந்த உயர் மனநிலை அடுக்கானது உங்களை ஆன்மீகத்தின் அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும். நிபந்தனையற்ற அன்பு, சுய-அன்பு மற்றும் தன்னலமற்ற தன்மையை அனுபவிக்கும் திறனை பாதிக்கும் அடுக்கு இதுதான். இந்த அடுக்கை சரியாக பராமரிப்பவர்கள் எந்தவொரு செயலையும் வெற்றிகரமாக முடிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.

ஆன்மீக அடுக்கு
ஆன்மீக அடுக்கு நம்மை போலவே சிந்தனை உள்ளவர்களுடனும், இந்த பரந்த பிரபஞ்சத்துடனும் நமக்கு இணைப்பை ஏற்படுத்துகிறது. இந்த அடுக்கை பற்றி நன்கு தெரிந்து கொண்டால் நாம் கற்றுக்கொள்ள கூடிய மக்கள் யார், நாம் கற்றுக்கொடுக்க வேண்டிய மக்கள் யார் என்பது நன்கு புரிந்து கொள்ளலாம். உங்கள் ஆன்மா உயரிய நிலையை அடைய இந்த அடுக்குடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்வது அடிப்படையான ஒன்றாகும்.

உள்ளுணர்வு அடுக்கு
மற்றவர்களை மன்னிக்கவும், மற்றவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளவும் இந்த அடுக்குதான் பொறுப்பு. இந்த அடுக்கில்தான் நாம் நம்முடைய கனவுகளையும், எதிர்காலத்தை பற்றிய திட்டங்களையும் சேகரித்து வைக்கிறோம். இந்த அடுக்கை சரியாக பராமரித்தால் உங்கள் வாழ்க்கையில் அமைதியும், அன்பும் நிலைத்திருக்கும். இந்த அடுக்குடன் தொடர்பு உள்ளவர்கள் அதிக கற்பனைத்திறன் உள்ளவர்களாக இருப்பார்கள்.

முழு அடுக்கு
முழுமையான அடுக்கு என்பது நமது உயிரின் ஒளியுடன் இணைதிருப்பதாகும். இது நம்மை நம்முடன், மற்றவர்களுடன் மற்றும் இந்த பிரபஞ்சத்துடன் இணைக்கும் வேலையை செய்கிறது. இந்த அடுக்கை சரியாக பராமரிக்கவில்லை எனில் அது நம் ஆன்மா உயர்நிலை அடைவதை தடுப்பதுடன் நாம்தான் உயர்ந்தவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி நம்மை தனிமையில் தள்ளிவிடும். ஆன்மீக பாதையில் நம் ஆன்மாவின் பயணத்தை பேரின்பத்தை நோக்கி செலுத்துவதில் இது முக்கியப்பங்கு வகிக்கிறது.



Click it and Unblock the Notifications