For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வேலைகள் செய்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு மிகவும் அதிகமாம்..உங்க வேலையும் இதுல இருக்கா?

மக்களிடையே பொதுவாக நிலவும் ஒரு நம்பிக்கை புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களால்தான் புற்றுநோய் ஏற்படுகிறது என்பதாகும். ஆனால் இது உண்மையல்ல ஒருவர் செய்யும் வேலை கூட அவர்களுக்கு புற்றுநோயை உண்

|

புற்றுநோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. மக்களிடையே பொதுவாக நிலவும் ஒரு நம்பிக்கை புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களால்தான் புற்றுநோய் ஏற்படுகிறது என்பதாகும். ஆனால் இது உண்மையல்ல ஒருவர் செய்யும் வேலை கூட அவர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கலாம்.

Jobs increase Cancer risk

உண்மைதான் நீங்கள் செய்யும் வேலை எப்படிப்பட்டது என்பதை பொறுத்தே உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு எவ்வளவு உள்ளது நிர்ணயிக்கப்படும். சில அலுவலக பணிகள், வெளிப்புற பணிகள், பனி செய்யும் சூழல் போன்றவை உங்களுக்கு பல்வேறு வகையான புற்றுநோய்களை உண்டாக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த வேலை செய்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரப்பர் உற்பத்தி

ரப்பர் உற்பத்தி

ரப்பர் உற்பத்தி என்பது சில நூற்றாண்டுகளாக இருக்கும் ஒரு தொழிலாகும். டயர், கையுறை என அனைத்தும் ரப்பர் உற்பத்தியை சேர்ந்ததுதான். ரப்பர் பல்வேறு இரசாயனங்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதிலிருந்து உருவாகும் மாசு, இரசாயண நீராவி போன்றவை பல மோசமான நோய்கள் ஏற்பட காரணமாகிறது. இதனால் சிறுநீரக புற்றுநோய், வயிறு புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

முடி வடிவமைப்பாளர்

முடி வடிவமைப்பாளர்

முடி வடிவமைப்பாளர்கள் பெரும்பாலும் தங்களின் விரல்கள் மற்றும் கத்தரிக்கோலைதான் பயன்படுத்துவார்கள். ஆனால் உண்மையான பிரச்சினை அவர்கள் உபயோகிக்கும் முடி சாயத்தில்தான் உள்ளது. மூன்றில் ஒரு பங்கு பெண்கள் முடி சாயத்தை உபயோக்கிறார்கள். இதனை முடிவடிவமைப்பாளர்களே அதிகம் உபயோக்கிறார்கள். அடிக்கடி இட்னஹ் இரசாயன கலவையை தொட நேர்வதால் இவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமிருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.

மெக்கானிக்

மெக்கானிக்

மெக்கானிக் வேலை என்பது மாசு, அழுக்கு, கிரீஸ் நிறைந்த வேலை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது நீங்கள் நினைக்கும் வேலையை விட மிகவும் ஆபத்தானதாகும். பொதுவாக மெக்கானிக் செட்களில் அதிக வெப்பம் இருக்கும். உதிரிப்பாகங்களை நெருப்பு கொண்டு மாற்றும் போது அது அந்த பொருளுடன் சேர்ந்து இராசயன கலவையை வெளிபடுத்தும். இதனால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.மேலும் இந்த இடங்களில் பெட்ரோலின் பயன்பாடு அதிகமிருக்கும். புற்றுநோய் ஏற்பட இதுவும் ஒரு காரணமாகும்.

MOST READ: 30 வயதை நெருங்கும் ஆண்கள் தொப்பையை குறைக்க இந்த வழிகளை பின்பற்றினாலே போதும்...!

கட்டுமான தொழிலாளர்கள்

கட்டுமான தொழிலாளர்கள்

கட்டுமான தொழிலாளர்கள் அவர்கள் வேலையில் பல ஆபத்துக்களை சந்திக்கிறார்கள், அதில் புற்றுநோய் அபாயமும் ஒன்று. ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் இன்றும் பல பழைய கட்டிடங்களில் இருக்கிறது. இதனை மாற்றி கட்டுபவர்கள் இதற்கு கீழ் வேலை செய்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகமாகும்.

பிளாஸ்டிக் உற்பத்தி

பிளாஸ்டிக் உற்பத்தி

பிளாஸ்டிக் பல வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது, பல இடங்களில் ரப்பருக்கு பதிலாக இது பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பிளாஸ்டிக் உற்பத்தியிலும் பல ஆபத்துகள் உள்ளது. இங்கு இருக்கும் இரசாயனங்களால் இங்கு வேலை செய்பவர்களுக்கு நுரையீரல், சிறுநீரக புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

சுரங்க வேலை

சுரங்க வேலை

சுரங்க வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு புற்றுநோய் அதிகரிக்கும் வாய்ப்பு மிகவும் அதிகமாகும். பூமிக்கு அடியில் வேலை செய்பவர்களுக்கு மூளை புற்றுநோய், தைராய்டு புற்றுநோய் போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகமென நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இடங்களில் டீசல் அதிகம் உபயோகிப்படுவதும், புகைப்பதும் நுரையீரல் புற்றுநோயை அதிகரிக்கும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

MOST READ: இந்த வகை மலர்களை வைத்து கடவுளை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் துன்பத்தை அதிகரிக்கும் தெரியுமா?

உலோக வேலைகள்

உலோக வேலைகள்

பிளாஸ்டிக் வேலைகளை போலவே உலோகம் தொடர்பான வேலைகளும் நுரையீரல் மற்றும் குரல்வளையில் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது. உருக்குஆலை, வெல்டிங் பட்டறை போன்ற வேலைகளில் ஈடுபடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு 75 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.

கதிரியக்க தொழில்நுட்பம்

கதிரியக்க தொழில்நுட்பம்

கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் பல நோயை கண்டறிவதற்கு உதவுகின்றனர். ஆனால் அவர்களின் ஆரோக்கியமே கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. லேப்பில் வேலை செய்பவர்களுக்கு தைராய்டு புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு அதிகமுள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.

இரசாயன தொழிற்சாலை பணியாளர்கள்

இரசாயன தொழிற்சாலை பணியாளர்கள்

ஆபத்தான இரசாயனங்கள் இருக்கும் இடங்களில் வேலை செய்பவர்கள் அவர்களின் ஆரோக்கியத்தை அவர்களே கெடுத்து கொள்கிறார்கள். இதனால் சரும புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. டை, பெயிண்ட் போன்றவை அதிகமிருக்கும் இடங்களில் வேலை செய்பவர்களுக்கு சிறுநீரக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

MOST READ: கடவுளின் அவதாரங்களே மரணித்த போதும் இந்த 8 பேர் மட்டும் எப்படி சாகாவரத்தை பெற்றார்கள் தெரியுமா?

மனஅழுத்தமுள்ள வேலைகள்

மனஅழுத்தமுள்ள வேலைகள்

பணியிடங்களில் ஏற்படும் மனஅழுத்தம் உங்களுடைய தூக்கத்தை கெடுக்கக்கூடும். மனஅழுத்தம் அதிகமுள்ள வேலைகள் செய்பவர்களுக்கும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது என்று ஆய்வுகள் கூறுகிறது. 15 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து மனஅழுத்தம் தரும் வேலைகளில் இருப்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Jobs That Put You at a Higher Risk of Cancer

Here we listing the jobs that are increasing the risk of cancer.
Story first published: Wednesday, May 29, 2019, 17:27 [IST]
Desktop Bottom Promotion