Just In
- 7 hrs ago
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 7 hrs ago
ஆண்களுக்கு பெண்கள் மீது வெறுப்பு வர உண்மையான காரணம் இதுதானாம்... பெண்களே பாத்து நடந்துக்கோங்க...!
- 8 hrs ago
தைப்பூசம் பற்றி பலருக்கு தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்!
- 9 hrs ago
உங்க துணைகிட்ட 'அந்த' விஷயத்த பத்தி வெட்கப்படமா பேச இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க...!
Don't Miss
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உணவை வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா?
உணவு என்பது நமது சுவை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் வழங்கக்கூடியதாகும். நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உணவிலிருந்துதான் கிடைக்கிறது. எனவே அந்த உணவை ஆரோக்கியமான உணவாக சாப்பிட வேண்டியது அவசியமாகும். நீங்கள் எந்த உணவை சாப்பிடுகிறீர்கள் என்பது மட்டுமல்ல எப்படி சாப்பிடுகிறீர்கள் என்பதும் உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகும்.
சாப்பிடும் முறை என்று வரும்போது மெதுவாக சாப்பிடுவது மற்றும் வேகமாக சாப்பிடுவது என்று இரண்டு வகை உள்ளது. பலரும் வேகமாக சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது மிகவும் ஆபத்தான பழக்கமாகும். ஏனெனில் வேகமாக சாப்பிடும்போது அது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இந்த பதிவில் வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

உடல் பருமன்
வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்களில் முக்கியமான ஒன்று எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஆகும். நன்றாக மெல்லாமல் சாப்பிடுவதோ அல்லது வேகமாக சாப்பிடுவதோ நீங்கள் எடுத்துக்கொள்ளும் கலோரிகளின் அளவை அதிகரிக்கும். விரைவாக சாப்பிடுவது பசியைக் கட்டுப்படுத்த உதவும் குடல் ஹார்மோன்களை சீர்குலைத்து உங்களுக்கு முழுமையான உணர்வை ஏற்படுத்தும். ஜப்பானில் நடத்தப்பட்ட ஆய்வில் வேகமாக சாப்பிடுவது உணவின் வெப்ப விளைவையும் பாதிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய்
வேகமாக சாப்பிடுவது மட்டும் உங்களுக்கு டைப் 2 சர்க்கரை நோயை ஏற்படுத்தாது. ஆனால் இது உங்கள் உடலை அதன் திசை நோக்கி இழுத்து செல்லும். பல இளம் வயது ஆண் மற்றும் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் வேகமாக சாப்பிடுகிறவர்களுக்கு இன்சுலின் பாதிப்பு ஏற்படும். இதனால் உங்கள் உடல் இன்சுலினை திறம்பட பயன்படுத்த தவறுகிறது. இதனால் சர்க்கரை நோய் ஏற்படலாம். முன்னரே கூறியது போல வேகமாக சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும். உடல் எடையும், சர்க்கரை நோயும் நேரடி தொடர்புடையதாகும்.

வளர்ச்சிதை மாற்ற குறைபாடு
இன்சுலின் எதிர்ப்பு வளர்ச்சிதை மாற்ற நோயுடன் தொடர்புடையதாகும். இதனால் சர்க்கரை நோய் மட்டுமின்றி மாரடைப்பு, இதய நோய் போன்ற பல நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது. 40 வயதிற்கு மேற்பட்ட வளர்ச்சிதை மாற்ற நோய் இல்லாத 9000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் வேகமாக சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களுக்கு விரைவில் வளர்ச்சிதை மாற்ற நோய் வந்தது. குறிப்பாக வேகமாக சாப்பிடுகிறவர்களுக்கு நல்ல கொழுப்பு எனப்படும் HDL கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகும். இதனால் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

இரைப்பை அழற்சி
வேகமாக சாப்பிடுவது இரைப்பை அழற்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் குடல் வீக்கம், கடுமையான வயிற்றுப்புண் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மருத்துவர்கள் தங்களிடம் வேகமாக சாப்பிடுகிறவர்கள் என்று கூறுபவர்களுக்கு இரைப்பை அழற்சி அறிகுறிகள் அதிகம் இருந்ததாக கூறுகிறார்கள்.

அடைப்பு
வேகமாக உணவு சாப்பிடுகிறவர்கள் அவர்கள் உணவை எப்படி எடுத்து கொள்கிறார்கள் தெரியுமா? அவர்கள் உணவை சாப்பிடுவதில்லை மாறாக முழுங்கவே செய்கிறார்கள். இதனால் மூச்சுக்குழல் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகளை எப்பொழுதும் உணவுகளை மெதுவாக நன்கு மென்று சாப்பிட வேண்டும் என்று கூறி வளர்க்க வேண்டும்.

எப்படி சாப்பிட வேண்டும்?
உங்களின் தினசரி அட்டவணையில் உணவிற்கு அதிக முன்னுரிமை கொடுக்கவும். உங்களின் ஒவ்வொரு உணவிற்கும் குறைந்தது 20 நிமிடமாவது எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் உடலுக்கு மூளைக்கு முழுமையான உணர்வை ஏற்படுத்தும் சிக்னலை அனுப்ப இந்த காலம் கண்டிப்பாக தேவை.

அனுபவித்து சாப்பிடுங்கள்
சாப்பிட தொடங்குவதற்கு முன் உங்கள் உணவினை ரசிக்க பழகுங்கள். உங்கள் உணவின் வாசனை, தோற்றம், அரோமா என அனைத்தையும் நன்கு உணருங்கள். இவற்றை உணர்ந்து சாப்பிட்டால் கண்டிப்பாக நீங்கள் சாப்பிட நீண்ட நேரம் எடுத்து கொள்வீர்கள்.

அதிகமாக மெல்லுங்கள்
சிறிய துண்டுகளாக எடுத்து நன்கு மென்று சாப்பிடுங்கள். இது நீங்கள் சாப்பிடும் வேகத்தை குறைப்பதுடன் உணவு செரிக்கும் வேகத்தை அதிகரிப்பதுடன் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் வீணாவதையும் தடுக்கிறது.