Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
இத்தனை மணி நேரம் தூங்குவது உங்களுக்கு மாரடைப்பை ஏற்படுத்தும் தெரியுமா?
குறிப்பிட்ட நேரத்திற்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ தூங்கும்போது அது உஙகள் உடலில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
தூக்கம் என்பது நமது உடலுக்கு தேவையான, அவசியமான ஒன்றாகும். ஏனெனில் நமது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதில் தூக்கத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. நாள் முழுவதும் வேலை செய்வதால் உண்டாகும் சோர்விலிருந்து தப்பிக்கவும், அடுத்தநாள் வேலை செய்வதற்கு தேவையான ஆற்றலை வழங்கவும் தூக்கம்தான் அடிப்படையான தேவையாகும்.

ஒருநாளைக்கு ஒரு மனிதன் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். அதற்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ தூங்கும்போது அது உஙகள் உடலில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கிய முறையிலிருந்து மாறிவிட்ட நமது வாழ்க்கை முறையில் தூக்கத்தின் அளவு குறைந்தால் எந்த ஆபத்து ஏற்படும் என்று ஓரளவிற்கு அறிவோம். ஆனால் குறிப்பிட்ட நேரத்தை விட அதிகம் தூங்கினால் என்னாகும் என்பதை பற்றிய புரிதல் நமக்கு மிகவும் குறைவாகவே உள்ளது.

எடை அதிகரிப்பு
உங்கள் எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் 8 மணி நேரத்திற்கு அதிகம் தூங்குவதுதான். எவ்வளவு அதிகம் தூங்குகிறீர்களோ உங்கள் உடலில் அவ்வளவு அதிகம் கொழுப்பு அதிகரிக்கும். 8 மணி நேரத்திற்கு அதிகமாக தூங்குபவர்களுக்கு மற்றவர்களை விட 21 சதவீதம் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்கள் டயட் கூட அதிக தூக்கத்தால் ஏற்படும் உடல் எடையை குறைக்க இயலாது.

தலைவலி
அதிக நேரம் தூங்குவது உங்களுக்கு தலைவலி மற்றும் மைக்ராய்ன்களை தூண்டும். இதற்கு காரணம் நரம்பிய கடத்திகளில் ஏற்படும் செரோடினின் அளவின் மாறுபாடு அதிகரிப்பது ஆகும். அதிக நேரம் தூங்குவது உங்களின் காலை நேர பணிகள் அனைத்தையும் முடக்கும்.

முதுகு வலி
vஉங்களுக்கு முதுகு வலி அதிகமாக இருந்தால் அதற்கு காரணம் நீங்கள் அதிக நேரம் தூங்குவதாகத்தான் இருக்கும். நீண்ட நேரம் ஒரே நிலையில் படுத்திருப்பது உங்கள் தசைகளில் விறைப்பு மற்றும் வலியை அதிகரிக்கிறது. முதுகு வலி உள்ளவர்களை மருத்துவர்கள் 7 மணி நேரத்திற்கு மேல் தூங்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள்.

வயதாகுதல்
நீண்ட காலமாக அதிக நேரம் தூங்குவது உங்கள் மூளையை அதிக வயதாவது போல உணரச்செய்யும். குறிப்பாக வயதானவர்கள் நீண்ட நேரம் தூங்கும்போது அது அவர்களுக்கு அவர்களின் வயதை விட 2 வயது அதிகமாக உணரச்செய்யும். இது நினைவாற்றல் பாதிப்பு, கவனமின்மை போன பிரச்சினைகளை உண்டாக்கும். மேலும் மனநல பிரச்சினைகளை உண்டாக்கும்.

இதய நோய் மற்றும் சர்க்கரை நோய்
9 மணி நேரம் முதல் 11 மணி நேரம் வரை தூங்குபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு 28 சதவீதம் அதிகம் என ஆய்வுகள் கூறுகிறது. மேலும் மரணத்தை ஏற்படுத்தும் இதய சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு 38 சதவீதம் அதிகம் எனவும் கூறப்படுகிறது. அதிக நேரம் தூங்குவது உங்கள் எடையை அதிகரிக்கும், எடை அதிகரிப்பும், சர்க்கரை நோயும் நேரடி தொடர்பு கொண்டதாகும். அதிக நேரம் தூங்குவது டைப் 2 சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும்.

சர்க்காடியன் ரிதம் கோளாறு
சர்க்காடியன் ரிதம் கோளாறு உங்களின் உடலுக்குள் நடக்கும் செயல்பாடுகளுக்கும், உங்களின் தினசரி அட்டவணைகளுக்கும் இடையே வேறுபாடு ஏற்படும் போது உண்டாகும் நோயாகும். இதனால் தூங்குவதில் சிக்கல், பகல் தூக்கம் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.

கருவுறுதலை குறைக்கும்
இனப்பெருக்கத்துடன் தொடர்புள்ள ஹார்மோன்களின் உற்பத்தியானது தூக்கத்துடன் தொடர்புடையது ஆகும். செயற்கை கருத்தரித்தல் சிகிச்சையில் இருக்கும் பெண்கள் எப்பொழுதும் அதிக நேரம் தூங்கக்கூடாது. அவ்வாறு தூங்கினால் கருவுறும் வாய்ப்பு 43 சதவீதம் குறையுமென மகப்பேறு மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதேபோல 6 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களுக்கு 46 சதவீதம் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications
