Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
நீங்கள் சாப்பிடும் உணவுப்பொருள்களில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவது எப்படி தெரியுமா?
இன்றைய காலகட்டத்தில் நாமே ஆரோக்கிய உணவுகளை சாப்பிட நினைத்தாலும் நம்மால் அது முடியாது. அதற்கு காரணம் உணவு பொருட்களில் செய்யப்படும் கலப்படம்.
நமது முன்னோர்களின் உணவு முறைக்கும் இப்போது நாம் பின்பற்றும் உணவுமுறைக்கும் பல வித்தியாசங்கள் உள்ளது. நமது முன்னோர்கள் இயற்கையாக கிடைத்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு நீண்ட காலம் வாழ்ந்தார்கள். ஆனால் நாம் சுவைக்காக ஆரோக்கியத்தை எப்போது தியாகம் செய்துவிட்டோம்.

இன்றைய காலகட்டத்தில் நாமே ஆரோக்கிய உணவுகளை சாப்பிட நினைத்தாலும் நம்மால் அது முடியாது. அதற்கு காரணம் உணவு பொருட்களில் செய்யப்படும் கலப்படம். நாம் அன்றாடம் உபயோகிக்கும் அனைத்து பொருட்களிலும் இப்பொழுது கலப்படம் அதிகரித்துவிட்டது. மக்களின் ஆரோக்கியத்தை விட இலாபமே பெரிதென பெரும் முதலாளிகள் நினைக்க தொடங்கியதன் விளைவுதான் இது. இந்த பதிவில் உங்கள் சமையலறையில் இருக்கும் உணவுப்பொருட்களை எப்படி சோதிப்பது என்று பார்க்கலாம்.

சில்வர் பேப்பர்
இனிப்புகளை சுற்றி மெல்லிய சில்வர் படலம் அமைப்பது பிரபலமாகி வருகிறது. அதற்கு காரணம் அது ஆரோக்கியத்தை வழங்கும் என்பதுதான். ஆனால் அதிலும் இப்பொழுது கலப்படம் தொடங்கி விட்டது. அந்த பேப்பரை உங்கள் விரலால் தொடவும். அது உங்கள் விரலில் ஓட்டினால் அது உண்மையானது அல்ல.

மஞ்சள் வேர்
சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் மஞ்சளில் கலப்படம் தொடங்கி விட்டது. மஞ்சளின் தரத்தை சோதிக்க மஞ்சள் வேர்களை ஒரு பேப்பரில் எடுத்துக்கொண்டு அதன்மீது குளிர்ந்த நீரை தெளிக்கவும். அதன் வண்ணம் நீங்கினால் அதில் கலப்படம் செய்திருப்பது உறுதி.

பால்
அதிக கலப்படம் செய்யப்படும் பொருளென்றால் அது பால்தான். இதனை சோதிக்க ஒரு மென்மையான சாய்ந்த மேற்பரப்பில் ஒரு துளி பாலை விடவும். பால் அசையாமலோ அல்லது மெதுவாக வெள்ளை துளிகளுடன் கீழ்நோக்கி இறங்கினால் அது சுத்தமான பாலாகும். பால் துளி உடனடியாக கீழ்நோக்கி இறங்கினால் பாலில் தண்ணீர் கலந்திருப்பது உறுதி. பாலில் செயற்கை பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதா என்பதை ஆராய பாலை கொதிக்க வைக்கவும். பால் கொதிக்கும்போது மணல் நிறமாகவும், அதிக நுரையும் வெளிப்பட்டால் அதில் செயற்கை பொருட்கள் உள்ளது உறுதி.

தேன்
இயற்கை வழங்கும் தேனில்தான் அதிக கலப்படமும் செய்யப்படுகிறது. தேனின் தரத்தை சோதிக்க அதில் ஒரு சிறிய பஞ்சு திரியை போடவும். பின் அந்த திரியை எடுத்து கொளுத்தவும். திரி எரிந்தால் தேன் சுத்தமானது இல்லையெனில் கலப்படம் செய்யப்பட்டது.

சீரகம்
சீரகத்தின் தரத்தை சோதிப்பது மிகவும் எளிதானது. சிறிது சீரகத்தை அள்ளி உங்கள் கையில் வைத்து நன்கு கசக்கவும். உங்கள் உள்ளங்கையின் நிறம் கருப்பாக மாறினால் சீரகத்தில் கரித்தூள் சேர்க்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

மல்லித்தூள்
மல்லித்தூள் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு உணவுப்பொருளாகும். இதன் தரத்தை சோதிக்க ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் மல்லித்தூளை போடவும். அது கலப்படம் செய்யப்பட்ட மல்லித்தூளாக இருந்தால் அதில் மரத்தூள் மிதக்கும்.

இலவங்கப்பட்டை
அசைவ உணவுகளில் இலவங்கப்பட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதனை சோதிக்க ஒரு பட்டையை எடுத்து உங்கள் வைத்து உடைக்கவும். உங்கள் கையில் அதன் வண்னம் ஓட்டினால் அவை போலியானது என்று அர்த்தம்.

மிளகாய்த்தூள்
உங்கள் உணவிற்கு சுவையை சேர்ப்பது மிளகாய்த்தூள் ஆகும். ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூளை போடவும். தண்ணீரில் மிதக்கும் சிவப்பு துகள்கள் அது கலப்படம் செய்யப்பட்டது என்று உறுதிசெய்கிறது.

கருப்பு மிளகு
கருப்பு மிளகு என்பது சுவைக்காகவும், ஆரோக்கியதிர்க்கவும் சேர்க்கப்படும் ஒரு பொருளாகும். கலப்படம் செய்யப்பட்ட மிளகு பிரகாசமாகவும், மண்ணெண்ணெய் வாசத்துடனும் இருக்கும்.



Click it and Unblock the Notifications