For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களை சுற்றியிருப்பவர்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இந்த உளவியல் தந்திரங்களே போதும்...!

மனஅழுத்தம், சோர்வு, பதட்டம் போன்றவை எப்போதும் நம்மோடு இருப்பவையாக மாறிவிட்டது. நம்மை பொறுத்தவரை நமக்கு எப்போதும் கெட்டது மட்டுமே நடப்பதாக உணருவோம்.

|

நமது முன்னோர்களின் வாழ்க்கை முறைக்கும், இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. இப்போதிருக்கும் பரபரப்பான வாழ்க்கை முறையில் நாம் அனைவரும் நேரமின்றி காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு பறக்கிறோம். எப்போதும் வேலை, பயணம் என நமது நேரம் கரைந்து கொண்டிருக்கிறது.

Clever psychological tricks

மனஅழுத்தம், சோர்வு, பதட்டம் போன்றவை எப்போதும் நம்மோடு இருப்பவையாக மாறிவிட்டது. நம்மை பொறுத்தவரை நமக்கு எப்போதும் கெட்டது மட்டுமே நடப்பதாக உணருவோம், ஆனால் உண்மை அதுவல்ல. சொல்லப்போனால் இது ஒரு உளவியல் பிரச்சினை ஆகும். இந்த பிரச்சினைகளை சமாளிக்க சில உளவியல் தந்திரங்கள் உள்ளது. இந்த தந்திரங்கள் சிக்கல்களை தவிர்த்து நமது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடிக்கடி சிரிக்கவும்

அடிக்கடி சிரிக்கவும்

ஒருவர் தனியாக சிரிக்கும் போதோ அல்லது குழுவாக சிரிக்கும் போதோ சுற்றி இருக்கும் அனைவரும் அங் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்புவார்கள். அதற்கு காரணம் அவர்கள் உங்களின் மகிழ்ச்சியில் பங்கெடுக்க விரும்புவார்கள். மனிதராய் பிறந்த அனைவருமே மகிழ்ச்சியான சூழ்நிலையில்தான் இருக்க விரும்புவார்கள்.

சுவிங்கம்

சுவிங்கம்

இது மிகவும் எளிமையான வழியாகும். நீங்கள் பதட்டமாக இருக்கும்போது இந்த சுவிங்கம் அல்லது வேறு எதையாவது சாப்பிடுங்கள். சாப்பிடுவது உங்கள் மனதில் இருக்கும் பயத்தை விரட்டும் தந்திரமாகும். சாப்பிடுவதால் கிடைக்கும் இன்பம் மூளையை எந்த ஆபத்தும் இல்லை என்று உணர வைக்கும்.

MOST READ: உங்க வீட்ல நீங்க எத்தனையாவது குழந்தைனு சொல்லுங்க... உங்கள பத்தின ரகசியங்கள நாங்க சொல்றோம்...!

அமைதியாய் இருங்கள்

அமைதியாய் இருங்கள்

காரணம் எதுவாக இருந்தாலும் சரி யாராவது உங்கள் மீது கோபப்பட்டாலோ அல்லது உங்கள் மீது வருத்தப்பட்டாலோ அமைதியாக இருங்கள். இது அவர்களை சங்கடப்படுத்தும், அவர்கள் உங்கள் மீது கோபம் கூட கொள்ளலாம் ஆனால் சிறிது நேரத்திற்க்கு பிறகு அவர்களை நினைத்து அவர்கள் வெட்கப்படுவார்கள்.

பதிலை பெற கண்ணை பாருங்கள்

பதிலை பெற கண்ணை பாருங்கள்

உங்களின் கேள்விகளுக்கு யாராவது முழுமையான பதிலை தரவில்லை என்றால் அவர்களின் கண்களை தொடர்ந்து பாருங்கள். அவர்கள் தொடர்ந்து பேசுவார்கள் மேலும் அதிக தகவல்களை தருவார்கள். இதற்கு காரணம் நீங்கள் அவர்கள் முன்னால் கூறிய பதிலில் திருப்தி அடையவில்லை என்று அவர்களுக்கு உணர்த்தும்.

உங்களை மகிழ்விக்க அடிக்கடி புன்னைக்கவும்

உங்களை மகிழ்விக்க அடிக்கடி புன்னைக்கவும்

உங்களை பற்றி நீங்களே நம்பிக்கையாகவும், நேர்மறையாகவும் உணர சிரிப்புதான் சிறந்த வழி. உணர்ச்சி வெளிப்பாடுகள் உணர்ச்சிகளை ஏற்படுத்துகின்றன அல்லது வெளிப்படுத்துகின்றன என்பதே இதற்குக் காரணம். எனவே சிரித்துக் கொண்டே இருங்கள்.

MOST READ: லக்ஷ்மி தேவியின் அருள் நிறைந்த இந்த பொருளை வீட்டில் வைப்பது உங்களின் அனைத்து கஷ்டங்களையும் நீக்கும்

நம்பிக்கையாக இருங்கள்

நம்பிக்கையாக இருங்கள்

'நான் நினைக்கிறேன் அல்லது நான் நம்புகிறேன்' என்று எழுதுவது அல்லது சொல்வது நீங்கள் தெரிவிக்க வேண்டியவற்றில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதைக் குறிக்கிறது. நம்பிக்கையுடன் இருங்கள். நேர்காணல் செய்பவர்களை உங்கள் பழைய நண்பர்களாக நினைத்து பாருங்கள் உங்களின் செயல்பாடுகளில் ஏற்படும் அற்புத மாற்றங்களை உணருவீர்கள்.

பிறரை வாழ்த்தும்போது மகிழ்ச்சியாக இருங்கள்

பிறரை வாழ்த்தும்போது மகிழ்ச்சியாக இருங்கள்

இந்த தந்திரம் உங்களுக்கு சிறப்பான முடிவுகளை வழங்கும். எல்லோரும் அன்புடன் வரவேற்பதை விரும்புகிறார்கள், எனவே நீங்கள் விருந்தினர்களைக் கொண்டிருக்கும்போது, அவர்களைப் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் பாருங்கள். அடுத்தமுறை அவர்கள் உங்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உங்களை உபசரிப்பார்கள்.

பெரிய உதவி

பெரிய உதவி

நீங்கள் ஒருவரிடம் பெரிய உதவியை கேட்கும் போது பெரும்பாலும் அவர்கள் அதனை மறுத்து விடுவார்கள். ஆனால் அப்போதே வேறு ஒரு சிறிய உதவியை கேட்டால் மறுக்காமல் செய்வார்கள். இப்படித்தான் உங்கள் காரியத்தை சாதித்து கொள்ள வேண்டும்.

MOST READ: குழந்தைகள் குடிக்கும் இந்த வகை பால் மற்றும் தண்ணீர் அவர்களின் ஆரோக்கியத்தை சிதைக்கக்கூடும்...!

மனஅழுத்தத்தை மகிழ்ச்சியாக மாற்றவும்

மனஅழுத்தத்தை மகிழ்ச்சியாக மாற்றவும்

படபடப்பு, அதிகரித்த இதய துடிப்பு, வியர்த்தல் போன்ற மன அழுத்தத்தின் அறிகுறிகள். மகிழ்ச்சியின் அறிகுறிகளும் இதுதான். னவே மன அழுத்தம் அல்லது அழுத்தத்தில் இருக்கும்போது, உங்கள் பணியை ஒரு சவாலாக நினைத்துப் பாருங்கள். நீங்கள் அதை மகிழ்ச்சியாக செய்வீர்கள்.

உங்கள் நம்பிக்கையால் மற்றவர்களை ஏமாற்றுங்கள்

உங்கள் நம்பிக்கையால் மற்றவர்களை ஏமாற்றுங்கள்

முந்தைய காலத்தில், மக்கள் உலகம் தட்டையானது என்று நினைத்து அதை நம்பினர். இது புத்திசாலித்தனத்திலிருந்து தோன்றியது அல்ல, ஆனால் முழு நம்பிக்கையுடன் செய்யப்பட்ட ஒரு அனுமானம். இந்த தந்திரம் மக்களை நம்பும்படி செய்தது. நீங்கள் புத்திசாலிகளாக இல்லாவிட்டாலும், உங்கள் நம்பிக்கையை மற்றவர்களை நம்பவைக்கும் தந்திரம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

உங்களை நீங்களே காப்பாற்றுங்கள்

உங்களை நீங்களே காப்பாற்றுங்கள்

உங்கள் மீது ஒருவர் குற்றம் சாட்ட போகிறார்கள் என்றோ அல்லது உங்களை திட்டப் போகிறார்கள் என்றோ உங்களுக்கு தெரிய வந்தால் அவர்களுக்கு முன்னால் உட்காருவதற்கு பதிலாக அவர்கள் பக்கத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். இது அவர்களின் அணுகுமுறையை மாற்றும்.

கண்ணின் நிறம்

கண்ணின் நிறம்

நீங்கள் புதிதாக ஒருவரை சந்திக்கும் போது அவர்கள் கண்ணின் நிறத்தை கவனியுங்கள். இது கண்களை பார்த்து பேசுவது போல தோன்றும் மேலும் உங்கள் மீதான அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்.

MOST READ: உங்கள் கையில் தங்கச்சி கோடு எங்கு இருக்கிறது தெரியுமா? அது கையில் இருப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?

எதிர் கேள்விகள்

எதிர் கேள்விகள்

ஒருவர் தொடர்ந்து உங்களிடம் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தால் நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது அவர்களிடம் எதிர் கேள்விகள் கேட்பதுதான். தொடர்ந்து கேட்டு கொண்டே இருங்கள். அவர்கள் உங்களிடம் கேள்வி கேட்பதை நிறுத்தி விடுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Clever psychological tricks to handle people

Here are some psychological tricks to handle people and tough situations.
Story first published: Tuesday, July 16, 2019, 14:51 [IST]
Desktop Bottom Promotion