Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 கருத்துக்களை செய்தால் போதும்..!
கணினி, தொலைக்காட்சி, இணைய தளம் போன்ற எந்தவித அடிப்படை அறிவியல் வளர்ச்சியே இல்லாத காலத்தில் பல ஜாம்பவான்கள் வாழ்க்கையை நிம்மதியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்துள்ளனர். எவ்வளவு மோசமான சூழலிலும், அதனை கடந்து வர கூடிய பலவித தந்திரங்களை அந்த காலத்திலே நம் முன்னோர்கள் தெளிவாக விளக்கி உள்ளனர். இப்படிப்பட்ட கருத்துக்களை போதனை செய்ய ஒரு சிலரே அன்று இருந்தனர்.

அவர்களில் பலரால் இன்றும் என்றுமே போற்றப்படகின்ற சாணக்கியரை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். இவர் அந்த காலத்திலே 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வது எப்படி என்பதற்கான வழியை கூறியுள்ளார். இவரின் பல கருத்துக்கள் இன்றளவும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு கருத்துக்களுக்கு பின்னரும் பலவித உளவியல் ரீதியான சான்றுகளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தெரிந்து வைத்துள்ளார் இந்த மாமனிதர். இனி 100 வருடம் வாழ்வதற்கு எதை செய்ய வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அறிவு ஜீவி!
நாம் பிறரை விளையாட்டாக கிண்டலும் கேலியும் செய்வதற்கே "அறிவு ஜீவி" என்கிற இந்த வார்த்தையை பயன்படுத்துவோம். ஆனால், உண்மையிலே இந்த பெயருக்கு ஏற்ற சிறந்த மனிதர் சாணக்கியர் தான். வாழ்க்கையை அணு அணுவாக பிளந்து புரிதலுடன் பலவித கருத்துக்களை கூறியுள்ளார்.

உயிரும் உடலும்!
100 ஆண்டு காலம் வாழ்வது எளிமையான ஒன்று தான். ஆனால், அதற்காக நம் உடலையும், மனதையும் தயார் செய்வது தான் மிக முக்கியமான விஷயம்.
வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் உடலுக்கும் உயிருக்கும் ஒரு வித இணைப்பு எப்போதுமே இருக்கும். இந்த இணைப்பு தான் நம்மை உயிர்ப்புடன் வைக்கும் என சாணக்கியர் கூறுகிறார்.

மனம்!
உடலை நம் விருப்பத்திற்கு பணிய வைக்க வேண்டுமென்றால் முதலில் மனதை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.
எப்போதுமே எதிலும் உறுதி கொள்ள வேண்டும். இதை அடைவது நீங்கள் நினைப்பது போல மலையை தூக்கும் விஷயம் அல்ல. இது மிக எளிதான ஒன்று. "சுயம்" இந்த ஒன்று தான் உங்களை ஆட்டி படைக்கும் ஒரு கருவி.

எண்ணங்கள்
செய்கின்றது ஒன்றுமாக, சொல்கின்றது ஒன்றுமாக எப்போதுமே இருக்க கூடாது. இது வாழ்க்கையை இருள் சூழ செய்து விடும். இதற்கு உங்களின் மனதின் குரலை ஆழ்ந்து கேட்க வேண்டும்.
தினமும் உங்களுக்காக 30 நிமிடம் ஒதுக்கி உங்களை பற்றி, உங்கள் சுயத்தை பற்றி சிந்தியுங்கள் என சாணக்கியர் கூறுகிறார். இந்த பயிற்சி கட்டாயம் உங்கள் எண்ணங்களை மாற்றி அமைக்கும்.

மூளை!
மனித உடலில் மூளையின் எடை வெறும் 2% மட்டுமே. ஆனால், இது நம் உடலில் இருந்து 20 சதவிகிதத்திற்கும் மேலாக ஆற்றலை பெற்று கொள்கிறது. இதனால் நம் மனதின் வேலை கூடுதலாகிறது.
இன்றைய கால கட்டத்தில் இந்த சதவிகிதம் சற்று அதிகமாகி உள்ளது. உடல் உழைப்பை விட மூளையின் உழைப்பு தான் அதிகமாக உள்ளது. மூளை என்பது நம் மனதின் சாயல் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் என சாணக்கியர் தெளிப்படுகிறார்.

கவலை
இன்றைய கால கட்டத்தில் கவலை இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்ல வேண்டும். சின்ன தோல்வியோஅல்லது சிறு மன கசப்போ ஏற்பட்டால் உடனடியாக வாழ்வில் எதோ இடி விழுந்தது போல நினைக்காதீர்கள். "இதுவும் கடந்து போகும்" என்கிற மனநிலை தான் உங்கள் வாழ்க்கையையும் உங்களையும் உந்தும் சக்தி.

உடல்!
மனதை தயார் செய்த பிறகு அடுத்த வேலையாக நமது உடலை தான் நாம் தயார் செய்ய வேண்டும். பணம் சம்பாதித்தால் மட்டும் போதாதது.
நம் உடல் ஆரோக்கியம் அந்த பணத்தை விட விலை மதிப்பற்றது என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். கால மாற்றம் முக்கியம் தான், ஆனால் அதற்காக கண்ட உணவுகளை சாப்பிட்டு நம் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்ள கூடாது என சாணக்கியர் கூறுகிறார்.

பயிற்சி
உடல் உழைப்பு இன்றைய காலகட்டத்தில் குறைந்து விட்டாலும், நாம் அதை அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டு விட கூடாது.
மனம் மட்டும் தனியாக வேலை செய்தால் அது ஆரோக்கியமாவது. மனதுடன் சேர்த்து உடலும் வேலை செய்ய வேண்டும். இல்லையேல் இரண்டுமே பாதிக்கப்படும்.

உங்களுக்காக!
சாணக்கியர் பல கருத்துகளை இது போல கூறி இருந்தாலும், மேற்சொன்ன கருத்துக்கள் 100 ஆண்டுகள் ஆரோக்கியமாகவும் மன நிம்மதியுடனும் வாழ வழி செய்கின்றன.
இதில் அவர் சுருக்கமாக கூறும் கருத்து இதுதான், " மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று பிணைய பட்டுள்ளது", இவை இரண்டையும் சம நிலையில் யார் வைத்திருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே வாழ்வில் வெற்றி பெற இயலும் என உரக்க சொல்கிறார்.



Click it and Unblock the Notifications











