For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

28 நாட்கள் தொடர்ந்து சரக்கு அடிக்காமல் இருந்தால் என்னென்ன விளைவுகள் உடலில் உண்டாகும்..?

|

ஒரு சில பழக்க வழக்கங்களை நாம் தொடர்ந்து செய்து வருவதால் பலவித மாற்றங்கள் உடலில் உண்டாகும். சில மாற்றங்கள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். சில மாற்றங்கள் மிகவும் மோசமான விளைவுகளை உண்டாக்கும். இதுவே சில பழங்களை நிறுத்துவதால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்க கூடும். உதாரணத்திற்கு மது பழக்கம், புகை பழக்கம் போன்றவற்றை கூறலாம்.

28 நாட்கள் தொடர்ந்து சரக்கு அடிக்காமல் இருந்தால் என்னென்ன விளைவுகள் உடலில் உண்டாகும்?

இது போன்ற பழக்கத்தை கொஞ்ச நாட்கள் நிறுத்தி வைத்தாலே ஏராளமான மாற்றங்கள் உடலில் ஏற்படும். முக்கியமாக மது பழக்கத்தை நிறுத்தி வைத்தால் உடலில் பலவித தாக்கங்கள் உண்டாகும். தொடர்ந்து 28 நாட்கள் வரை மதுவை குடிக்காமல் இருந்தால் உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் உண்டாகும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புள்ளி விவரம்

புள்ளி விவரம்

ஒரு நபர் சராசரியாக ஒரு வருடத்திற்கு 9.5 லிட்டர் அளவு மது அருந்துவதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இதில் பலர் போதைக்கு அடிமையானவர்கள்.

சிலர் எப்போதாவது குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள். சரக்கும் அடிக்கும் பழக்கத்தை இவர்கள் 28 நாட்கள் வரை செய்யாமல் இருந்தால் பல தாக்கங்கள் உடலில் உண்டாகும் என ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

பசி

பசி

மதுவை 28 நாட்கள் தடை செய்து வைத்திருந்தால் பசி அதிகரிக்க கூடும். மதுவிற்கு பதிலாக சாப்பாட்டை அதிகம் விரும்ப தொடங்குவீர்கள். மேலும், எதையாவது சுவையாக சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு உண்டாகும்.

கனவு

கனவு

சரக்கு அடித்து விட்டு தூங்கினால் மிக மோசமான கனவுகளே ஏற்படும். ஆனால், சரக்கு அடிக்காமல் இருந்தால் இத்தகைய கனவுகள் உண்டாகாது. மாறாக கனவுகள் எல்லாமே சுகமானதாக மாறும்.

ஆனால், தொடர்ந்து சரக்கு அடித்து வந்தவர்களுக்கு நடுவில் 28 நாட்கள் இதை தவிர்த்தாக வேண்டும் என்றால் சற்று கடினம் தான். இது பலருக்கு தூக்கமின்மையை கூட உண்டாக்கி விடும்.

MOST READ: தினமும் கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் உடலில் ஏற்படும் தெரியுமா?

தலை வலி

தலை வலி

சரக்கை ஒதுக்கிய முதல் வாரத்தில் தலைவலி உண்டாக வாய்ப்புகள் உள்ளது. மேலும், சிலருக்கு உடலிலும் வலி உண்டாகும். சரக்கு அடிக்கும் போது அசுத்தமாக மாறிய கல்லீரல், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சுத்தம் பெற தொடங்கும்.

செரிமானம்

செரிமானம்

குடிப்பதை நிறுத்திய பின் செரிமான மண்டலம் முன்பை விட தற்போது சீராக செயல்பட ஆரம்பிக்கும். அத்துடன் வயிற்றில் இருக்க கூடிய அமிலத்தின் அளவும் சீராக இருக்கும். இந்த மாற்றம், சரக்கை நிறுத்திய 2 வாரங்களில் இருந்து தான்

தொடங்கும்.

ஆரோக்கியம்

ஆரோக்கியம்

மது பழக்கத்தை நிறுத்திய பின்னர் உங்களது உடல் பழைய நிலைக்கே திரும்ப தொடங்கும். அந்த வகையில் இது நல்ல தூக்கத்தை தந்து, உங்களை காலையில் விரைவாக எழுந்து கொள்ள செய்யும். மேலும், உறுப்புகளும் சீராக வேலை செய்யும்.

MOST READ: சாப்பிடுவதற்கு முன்னர் பழங்களை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்?

பற்கள்

பற்கள்

முன்பை விட தற்போது பற்களும் பழைய நிலைக்கே மாறி விடும். குடி பழக்கத்தை விடுவதால் பற்சிதைவு ஏற்படாமல் தடுக்கலாம். மேலும், பற்களை உறுதிப்படுத்தி பற்களை வெண்மையாக்கும். மேலும், துர்நாற்றமும் குறைய தொடங்கும்.

முகம்

முகம்

இத்தனை நாட்களாக சரக்கு அடித்து வந்த உங்களின் முகத்திலும் சரக்கை நிறுத்தியதால் பலவித மாற்றங்கள் உண்டாக தொடங்கும். முன்பு முகத்தில் சீராக இரத்த ஓட்டம் இல்லாமல் இருந்திருக்கும். ஆனால், சரக்கை நிறுத்திய முதல் வாரத்திற்கு பிறகு சீராக இரத்த ஓட்டம் இருக்கும். இது முக சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றையும் தடுக்கும்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

ஆரம்ப நிலையில் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், இதை தொடர்ந்து 28 நாட்கள் கடைபிடித்து வந்தால் நிச்சயம் உடல் நலம் முன்பை விட பல மடங்கு மாற்றம் பெறும். இரத்த ஓட்டம் தடையில்லாமல் இருப்பதால் மன அழுத்தமும் குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits of Giving Up Alcohol for 28 Days

This article speaks about what happens to your body when you haven’t drunk alcohol for 28 Days.
Desktop Bottom Promotion