Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
வெறும் 2 துளி ரத்தத்தை வைத்து 8 வித நோய்களை கண்டுபிடிக்கலாம்.! எப்படி தெரியுமா..?
மனித உடல் பலவித மாற்றங்களை சந்தித்து வருகிறது. ஆதிகாலம் முதலே மனித இனம் மிக பெரிய அளவில் பரிணாமம் அடைந்துள்ளது. மனித உடலானது பெரும்பாலும் ரத்தினால் உருவானது. இப்படிப்பட்ட இந்த உன்னதமான ரத்தம் 3 முக்கிய பொருளால் உருவானது. சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளாட்டிலேட்ஸ் முதலியவை தான் இதன் 3 முக்கிய அங்கங்கள்.

இவற்றில் ஏதேனும் ஒன்று குறைந்தால் கூட உடலில் பலவித நோய்கள் உண்டாகும். உடலில் உருவாக கூடிய எந்த வகை நோயாக இருந்தாலும் அதை கண்டறியவும், குணப்படுத்தவும் இரத்தம் மிக இன்றியமையாததாகும். அந்த வகையில் உடலில் இருக்க கூடிய நோய்களை கண்டறிய இரத்தத்தின் 2 துளிகள் போதும். வெறும் 2 துளி இரத்தத்தை வைத்து எப்படிப்பட்ட நோய்களை எல்லாம் கண்டறிய இயலும் என்பதை இனி அறிந்து கொள்வோம்.

சிறுநீரக கோளாறுகள்
சிறுநீரகத்தில் உள்ள கிரியாட்டினின் அளவு பெண்களுக்கு 1.2 அளவுக்கு மேலாகவும், ஆண்களுக்கு 1.4 அளவுக்கு மேலாகவும் இருத்தல் வேண்டும்.
இவ்வாறு இல்லையெனில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதை குறிக்கும். 2 துளி இரத்தத்தில் சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை கண்டறிய இயலும்.

வயது என்ன..?
இந்த வகை இரத்த பரிசோதனையில் ஒரு சில உண்மைகள் தெரிய வரும். அதாவது, மிக எளிதாக உங்களின் வயதை கண்டறிந்து விடலாம்.
எதற்ச்சையாக ஒருவர் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் போது அவரின் வயதை பொருத்து சிகிச்சை அளிக்கப்படும். இது போன்ற நேரங்களில் இரத்த பரிசோதனை மிகவும் உதவும்.

நரம்பு பிரச்சினை
அடிக்கடி தலைவலி, முளையில் லேசான அல்லது வீரியம் அதிகம் கொண்ட வலி உங்களுக்கு ஏற்பட்டால் நரம்பு சார்ந்த பிரச்சினையாக இருக்கலாம்.
இது போன்ற பிரச்சினைகளை சில துளி இரத்தத்தை வைத்து அறிந்து கொள்ள இயலும். ஆகவே நரம்பியல் சார்ந்த பிரச்சினைகளையும் ஒரே ரத்த பரிசோதனையின் மூலம் கண்டறிய முடியும்.

கருத்தரிப்பு
உங்கள் மனைவி கர்ப்பமாக உள்ளாரா என்பதை சிறுநீரை வைத்து கண்டறிய ஓரிரு நாட்கள் எடுத்து கொள்ளும். ஆனால், சில துளி இரத்தத்தை வைத்து நம்மால் மிக சுலபமாக கருத்தரிப்பில் உள்ள சந்தேகத்தை தெளிவுபடுத்தி கொள்ளலாம்.

சர்க்கரை வியாதி
சர்க்கரை வியாதியினால் இன்று பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். வெறும் ஓரிரு துளி இரத்தத்தினால் உடலில் எவ்வளவு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உள்ளது என்பதை கண்டறியலாம்.
6.4 அளவுக்கு மேல் இவை இருந்தால் சர்க்கரை நோயின் அறிகுறிகள் உங்களுக்கு உள்ளது என்பதை இது உணர்த்துகிறது.

மன உளைச்சல்
மனநிலை ரீதியான பிரச்சினைகளை கண்டறியவும் இரத்த பரிசோதனை ஒன்றே போதும். இதனை செரடோனின் என்கிற ஹார்மோனின் அளவை வைத்து கண்டறிய முடியும். இதை இரத்தத்தில் உள்ள பிளாட்டிலேட்ஸை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

எவ்வளவு வைட்டமின்..?
உடலுக்கு தேவையான அளவு வைட்டமின் சத்து இருக்கிறதா என்பதை உடலில் ஏற்படும் மாற்றத்தை வைத்து அறிந்து கொள்ளலாம்.
இதனை ஈடுகட்ட மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டு வந்தால் இரத்த பரிசோதனையின் மூலம் உங்களுக்கு ஏற்படும் பாதிப்பை அறிந்து கொள்ளலாம்.

ஞாபக மறதி
மனிதர்களுக்கு ஞாபக மறதி வருவது மிக இயல்பான ஒன்றே. ஆனால், சிலருக்கு இதுவே நோயாக மாறினால் ஆபத்து தான்.
அந்த வகையில் சில துளி இரத்தத்தை வைத்தே நம்மால் மூளையின் இந்த செயல்பாட்டை அறிந்து கொள்ள இயலும். எந்த அளவிற்கு உங்களின் மூளையின் திறன் உள்ளது என்பதை இதன் மூலம் கண்டறியலாம்.

இரத்த பரிசோதனை
எதுவாக இருந்தாலும் இரத்த பரிசோதனை என்பதே முதல் கட்ட பரிசோதனையாக பல ஆண்டுகளாக மருத்துவ துறையில் இருந்து வருகிறது. இரத்த பரிசோதனை மற்ற எல்லாவித பரிசோதனைகளுக்கு இன்றும் என்றும் அன்னையாகவே விளங்குகிறது.



Click it and Unblock the Notifications