For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு தூங்கும்போது சலவாய் தொழுகுமா? அதுக்கு காரணம் என்னனு தெரியுமா? இதுதான்...

நாம் தூங்குகின்ற பொழுது, சிலருக்கு சலவாய் ஒழுகும். அதற்குப் பின்னால் இருக்கின்ற காரணம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? இதோ தெரிந்து கொள்ளுங்கள்.

|

ஒவ்வொருவரும் தூங்கும் தன்மை சற்று வித்தியாசமாகத் தான் இருக்கும். சிலர் குறட்டை விட்டுக் கொண்டே தூங்குவார்கள், சிலர் தூக்கத்தில் புலம்புவார்கள், இன்னும் சிலர் தூங்கும் போது எச்சில் வடிப்பார்கள்.

Why Drooling When You Sleep is Actually a Sign of Good Health

இது மற்றவர்கள் முன்னிலையில் அவர்களுக்கு சங்கோஜத்தை ஏற்படுத்தி விடும். இந்த மாதிரி எச்சில் வடிப்பது நல்லதா? என்பதை பற்றி தான் நாம் இப்பொழுது இக்கட்டுரையில் பார்க்க போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் எச்சில் வடிகிறது?

ஏன் எச்சில் வடிகிறது?

குழந்தைகள் தூங்கும் போது எச்சில் வடிப்பது ரெம்ப சாதாரண விஷயம். சில சமயங்களில் பெரியவர்களுக்கு கூட இந்த மாதிரி நேரும்.

நமது வாய் உமிழ்நீர் நிறைந்த ஒரு அமைப்பு. சில சமயங்களில் நாம் தூங்கும் போது வாயை திறந்து வைத்து தூங்க ஆரம்பித்து விடுவோம். இதனால் வாயில் சுரக்கும் உமிழ்நீரானது வெளியே வழிய ஆரம்பித்து விடும் என்று டாக்டர் நைல் குலின் என்ற தூக்க மருத்துவர், அமெரிக்க ஸ்லீப் அசோஸியேஷின் பென்சில்வேனியாவிலிருந்து கூறுகிறார்.

MOST READ: லோ சுகர்னால கிறுகிறுனு வருதா? இதுல ஏதாவது ஒன்ன சாப்பிடுங்க... உடனே சரியாகிடும்...

உமிழ்நீர்

உமிழ்நீர்

உமிழ்நீர் ஒரு நல்ல விஷயம். உண்மையைச் சொல்லப் போனால் உமிழ்நீர் பற்களில் ஏற்படும் சொத்தையை எதிர்த்து போரிடுகிறது. எனவே நீங்கள் தூங்கும் போது எச்சில் வடிப்பவராக இருந்தால் மற்றவர்களை காட்டிலும் உங்கள் பற்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

அதே மாதிரி இந்த தூங்கும் போது எச்சில் வடிப்பதை பார்த்தால் நாம் அசந்து தூங்கும் சமயங்களில் மட்டுமே ஏற்படும். அதாவது நீங்கள் ரிலாக்ஸாக ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறீர்கள் என்பதை இது குறிக்கிறது. ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது நமது மூளை சுரக்கின்ற எச்சிலை முழங்க வேண்டும் என்ற சிக்னலை தொண்டைக்கும் வாயுக்கும் வழங்க மறந்து விடுகிறது. இதனால் தான் எச்சில் வெளியே வடிய துவங்குகிறது.

ஆழ்ந்த உறக்கம்

ஆழ்ந்த உறக்கம்

தூங்கும் போது நிம்மதியான தூக்கம் இல்லாவிட்டால் உங்கள் மனது அமைதியாக இருக்காது, உடல் நிலை பாதிக்கக்கூடும், உங்கள் உடல் போதிய ஓய்வு இல்லாமல் கஷ்டப்படும். எனவே தூக்கம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அப்படி பார்க்கையில் தூங்கும் போது எச்சில் வடிப்பவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதால் போதுமான உறக்கத்தால் அவர்களின் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

போதுமான தூக்கம் மன அழுத்தத்தை குறைக்கும், சிறந்த கவனத்தை கொடுக்கும், உங்கள் நோயெதிர்ப்பு மண்டலமும் நன்றாக செயல்படும். எனவே இது ஆழ்ந்த உறக்கத்தை மேற்கொள்ளும் உங்களுக்கு கிடைத்த நன்மையாகும்.

MOST READ: சின்ன வயசுலயே எலும்பு முறிவு ஏற்படுவது ஏன்? என்ன செய்தால் எலும்புகள் உறுதியாகும்?

விஷமாகிவிடுமா?

விஷமாகிவிடுமா?

சில சமயங்களில் தூங்கும் போது கண்கள் படபடவென்று துடிக்கும். இதுவு‌ம் ஆழ்ந்த உறக்கத்தின் நிலை தான். எனவே தூக்கத்தில் எச்சில் வடிப்பதும் அப்படி ஒன்றும் கெட்ட விஷயம் கிடையாது.

எனவே எழுந்திருக்கும் போது இது உங்களுக்கு அசெளகரியமான விஷயமாக தென்பட்டால் இதை தடுக்க நீங்கள் மல்லாக்க நேராக படுத்து தூங்குங்கள். அப்படி

MOST READ: ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம்? அதுக்குமேல வந்தா என்ன செய்யணும்?

வேப்பரஃப்

வேப்பரஃப்

தூங்கும் போது வாய் திறந்து இருப்பது தடுக்கப்படுகிறது. இதனால் எச்சில் வடியாது. காரணம் பக்க வாட்டில் படுத்து உறங்குவது, குப்புற படுத்து உறங்குவது எச்சில் வடிக்க நேரிடும்.

வேண்டும் என்றால் தூங்கும் போது வேப்பர் ரப் (vapor rub) போன்றவற்றை மூக்கில் தடவிக் கொள்ளலாம் என்று ஆக்ஸ்மேன் கூறுகிறார். இல்லையென்றால் உங்கள் மருத்துவரிடம் கூட இது குறித்து ஆலோசித்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Drooling When You Sleep is Actually a Sign of Good Health

here we are talking about Why Drooling When You Sleep is Actually a Sign of Good Health.
Story first published: Friday, December 14, 2018, 15:38 [IST]
Desktop Bottom Promotion