Latest Updates
-
கேரட்டும், ஜவ்வரிசியும் இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. பிள்ளைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
Nag Panchami 2026: நாக பஞ்சமியில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
காரசாரமான சிக்கன் ஈரல் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 7 அறிகுறிகள் அடிக்கடி தெரியுதா? அப்ப அது குடல்வால் புற்றுநோயின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்.. -
ஆகஸ்ட் 19-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..! -
கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனச்சுமை அதிகரிக்கப்போகுதாம் -
புதன்-குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
வார ராசிபலன் (16 August 2026 - 22 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா
ஆண்களின் உடலில் ஆண் செக்ஸ் ஹார்மோன் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!
டெஸ்டோஸ்டிரோன் என்பது ஒரு செக்ஸ் ஹார்மோன். இது ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலினத்தவரின் உடலிலும் இருக்கும். குறிப்பாக இந்த ஹார்மோன் ஆண்களின் உடலில் அதிகளவிலும், பெண்களின் உடலில் குறைவான அளவிலும் இருக்கும். இந்த ஆண் செக்ஸ் ஹார்மோன் ஒரு ஆணின் உடலில் குறைவான அளவில் இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும்.
ஆண் செக்ஸ் ஹார்மோன் ஆண்களின் உடலில் பல முக்கிய செயல்பாடுகளில் ஈடுபடுகின்றது. அதில் எலும்புகள் மற்றும் தசைகளின் வளர்ச்சி, ஆண்களின் வலிமையான குரல், முடியின் வளர்ச்சி, இதர ஆண் மகனுக்கான தோற்றங்கள், விந்து உற்பத்தி போன்றவை குறிப்பிடத்தக்கவை. டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியானது வயது அதிகரிக்கும் போது குறைய ஆரம்பிக்கும் மற்றும் பல வயது முதிர்ந்த ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருப்பதற்கான அறிகுறிகள் நன்கு தெரியும்.

உங்களுக்கு ஒரு ஆணின் உடலில் ஆண் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால், இந்த கட்டுரையை தொடர்ந்து முழுமையாக படியுங்கள்.

விறைப்புத்தன்மை பிரச்சனை
டெஸ்டோஸ்டிரோன் ஒரு ஆணின் உடலில் குறைவாக இருந்தால், அந்த ஆணால் உறவின் போது விறைப்புத்தன்மையை நீண்ட நேரம் தக்க வைப்பது அல்லது விறைப்பு ஏற்படுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோன் ஆணுறுப்பில் உள்ள திசுக்களைத் தூண்டிவிட்டு நைட்ரிக் ஆக்ஸைடை உற்பத்தி செய்ய வைக்கிறது. இந்த நைட்ரிக் ஆக்ஸைடு உடலினுள் பல வினை புரியும் போது, அதன் விளைவாக ஏற்படுவது தான் விறைப்புத்தன்மை.
விறைப்புத்தன்மை பிரச்சனைக்கான இதர காரணிகளாவன: புகைப்பிடித்தல், தைராய்டு பிரச்சனைகள், உயர் கொலஸ்ட்ரால், மன அழுத்தம், மது அருந்துதல், சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம்.

தலைமுடி உதிர்தல்
பல ஆண்கள் வயது அதிகரிக்கும் போது சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. இப்படி வயது அதிகரிக்கும் போது தலைமுடி உதிர்வதற்கு காரணம், உடலில் தலைமுடியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி குறைவாக இருப்பது தான்.

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்
டெஸ்டோஸ்டிரோன் எலும்பு திசுக்களை உற்பத்தி செய்ய உதவுவதோடு, எலும்புகளின் அடர்த்தியைப் பராமரிக்கவும் உதவியாக உள்ளது. ஆனால் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைவாக இருந்தால், எலும்புகளின் அடர்த்தி குறைந்து, பல்வேறு எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.

சிறிய அளவு விரை விதை
ஒரு ஆணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஆண் செக்ஸ் ஹார்மோனின் அளவு குறைவாக இருந்தால், அவர்களது விரை விதையின் அளவு சுருங்கி சிறியதாக காணப்படும். அதுமட்டுமின்றி, விரை விதை வழக்கத்திற்கு மாறாக மிகவும் மென்மையாக இருக்கும்.

விந்தணு குறைபாடு
விந்தணு என்பது ஒரு திரவம். இது ஆண்கள் உச்சக்கட்ட இன்பத்தை அடையும் போது வெளிவரும் ஒரு திரவம். டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஆண் செக்ஸ் ஹார்மோன் விந்தணுவின் உற்பத்தியைத் தூண்ட உதவும். ஆனால் இந்த டெஸ்டோஸ்டிரோன் ஒரு ஆணின் உடலில் குறைவாக இருந்தால், அந்த ஆணுக்கு விந்தணு குறைவான அளவில் இருக்கும். விந்தணு குறைவாக இருந்தால், அந்த ஆணின் மூலம் குழந்தை பிறப்பது கடினமாகிவிடும்.

தூங்குவதில் சிரமம்
டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருக்கும் ஆண்கள், தூங்க முடியாமல் அவஸ்தைப்படுவார்கள். குறைவான டெஸ்டோஸ்டிரோன் கொண்ட பல ஆண்களுக்கு தூக்கத்தின் போது அதிக சப்தத்துடன் குறட்டை விடுவார்கள். இன்னும் தீவிரமான நிலையில் தூக்கத்தின் போது சரியாக மூச்சு விட முடியாமல் திணரக்கூடும்.

பாலுணர்ச்சி குறைபாடு
ஆணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருந்தால், அந்த ஆணுக்கு பாலுறவில் உள்ள நாட்டம் மிகவும் குறைவாக இருக்கும். இந்த ஆண்களால் உறவில் ஈடுபட வேண்டிய எண்ணமே தோன்றாது. இதனால் இவர்களது பாலியல் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகும்.

தசைகளின் அடர்த்தி குறைவு
டெஸ்டோஸ்டிரோன் தசைகளின் அடர்த்தியில் முக்கிய பங்கை வகிக்கிறது. எப்போது ஒரு ஆணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளதோ, அந்த ஆணின் தசைகளின் அடர்த்தி குறைவாக இருக்கும். எனவே இதை வைத்தும் ஒரு ஆணின் உடலில் இருக்கும் டெஸ்டோஸ்டிரோன் அளவைத் தெரிந்து கொள்ளலாம்.

வெப்ப உணர்வு
பெண்கள் இறுதி மாதவிடாயை நெருங்கும் காலத்தில் உடலில் ஈஸ்ட்ரோஜென்களின் அளவில் ஏற்படும் ஏற்றத்தாழ்வினாலும், டெஸ்டோஸ்டிரோன் அளவு மிகவும் குறைவாக இருப்பதனாலும், மிகுதியான வெப்ப உணர்வைப் பெறுவார்கள். இதை வைத்தும் டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆற்றல் குறைபாடு
டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருந்தால், அதனால் உடலின் ஆற்றல் குறைந்து, மிகுதியான களைப்பை உணர வேண்டியிருக்கும். அதுவும் ஒருவர் போதுமான ஓய்வை எடுத்தும், எவ்வித கடுமையான உடலுழைப்பில் ஈடுபடாமலும், மிகுந்த களைப்பை உணர்ந்தால், அவர்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

அதிகளவு உடல் கொழுப்பு
ஒருவரது உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருந்தால், அவர்களது உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகமாக இருக்கும். சில சமயங்களில் ஆண்களுக்கு பெண்களைப் போன்று மார்பகங்கள் வருவதற்கு, டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடும் ஓர் முக்கிய காரணமாக இருக்கலாம்.

மனநிலையில் ஏற்ற இறக்கம்
சில ஆய்வுகளில் டெஸ்டோஸ்டிரோன் என்னும் செக்ஸ் ஹார்மோன் குறைவாக கொண்ட ஆண்களால் எதிலும் நாட்டம் மற்றும் ஆர்வம் செலுத்த முடியாமல் அவஸ்தைப்படுவதோடு, அதிகமாக எரிச்சலுணர்வைப் பெறுவதாகவும், மன இறுக்கத்தால் கஷ்டப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
எனவே ஆண்களே, உங்கள் உடலில் உள்ள முக்கிய செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருப்பதை மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளைக் கொண்டு தெரிந்து உஷாராகிக் கொள்ளுங்கள். பெண்களுக்கும் டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஆண் ஹார்மோன் குறைவான அளவில் இருக்க வேண்டியது அவசியம். ஒருவேளை ஒரு பெண்ணின் உடலில் தேவையான அளவு டெஸ்டோஸ்டிரோன் இல்லாவிட்டால், மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications