For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம் முன்னோர்கள் ஆண்மை குறைவிற்கு பயன்படுத்திய உட்டியாணா பந்தா பயிற்சியை பற்றி தெரியுமா..?

By Haripriya
|

நமது உடல் நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நல்ல உணவு, தினம்தோறும் உடற்பயிற்சி, நிம்மதியான மன நலம் போன்றவை மிகவும் அவசியமானது. இன்று பலரும் அவதிப்படும் பெரிய பிரச்சினை உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும்தான். இதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்வியலே. ஒவ்வொருவரும் அன்றாடம் பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர். இதன் எண்ணிக்கை உயர்கிறதே தவிர குறைய செய்யவில்லை. குறிப்பாக இன்று பல ஆண்களை ஆட்டி படைக்கும் ஒன்று இந்த ஆண்மை குறைபாடே.

Uddiyana Asana To Improve Masculinity & Give Benefits

இதற்கு எண்ணற்ற வழிகளை தினம்தினமும் கண்டுபிடித்தாலும் அவற்றில் பல அவ்வளவும் வேலை செய்வதில்லை. காரணம் சீரான ஆய்வுகள் இன்றி அவை வெளிவருகின்றன. ஆனால் இந்த உட்டியாணா பந்தா அப்படி கிடையாது. நம் முன்னோர்கள் இந்த பந்தாவை பயன்படுத்திதான் நல்ல ஆரோக்கியமான உடல் நலத்துடனும், ஆண்மை பலத்துடனும் இருந்தார்கள். இந்த பயிற்சியை பின்பற்றி நீங்களும் உங்கள் இல்லற வாழ்வில் இன்பத்தை அடையுங்கள். உட்டியாணா பந்தாவை பற்றிய முழு தகவல்களையும் இந்த பதிவில் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பந்தாவின் விளக்கம்...

பந்தாவின் விளக்கம்...

"பந்தா" என்ற வார்த்தைக்கு உடலில் உள்ள அடைப்புகளை நீக்குவது என்பது பொருள். நமது உடலில் எண்ணற்ற அடைப்புகள் ஏற்பட கூடும். அவற்றையெல்லாம் இந்த வகையான பந்தாக்களை வைத்து சரி செய்து விடலாம். இது ஒரு வகையான ஆசன பயிற்சி முறை. நம் முன்னோர்கள் இது போன்ற பலவற்றை பின்பற்றி வந்தனர். அதனால்தான் அவர்களால் பல குழந்தைகளை பெற்றெடுக்க முடிந்தது. அவர்களின் வலிமையான உடலுக்கு இது போன்ற ஆசனங்களும் ஒரு முக்கிய இடத்தில் இருந்தது.

உட்டியாணா பந்தா...

உட்டியாணா பந்தா...

பந்தாவில் பல வகை உண்டு. அதில் ஒன்றுதான் இந்த உட்டியாணா பந்தா. இதனை "மூல பந்தா" என்றும் சொல்வார்கள். உடலில் ஏற்பட்டுள்ள பல அடைப்புகளை சரி செய்ய இந்த உட்டியாணா பந்தா நன்கு உதவுமாம். குறிப்பாக வயிற்று பகுதியில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்து பல நன்மைகளை தரும். இந்த ஆசன முறை ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்ல உடல் நலத்தை தரும்.

எப்படி செய்வது...? #1

எப்படி செய்வது...? #1

PC : Youtube

முதலில் கால்களை இடைவெளி விட்டு விரித்து நிற்கவும். பிறகு சம்மணம் இட்டு உற்கார்ந்து கொள்ளவும். 2 முறை மூச்சை உள்ளே மற்றும் வெளியில் மெதுவாக விட்டு உடலை சீரான மன நிலையில் வைத்து கொள்ளவும். பின் இடுப்புக்கு மேல் உள்ள உடல் பகுதியை மட்டும் முன் பக்கமாக சிறிது குனியும் படி வளைக்கவும். இந்த நிலையில் உடலில் வயிற்று பகுதியில் இறுக்கம் இல்லாதவாறு வைத்து கொள்ள வேண்டும்.

செய்முறை #2...

செய்முறை #2...

இவ்வாறு வயிற்று பகுதியில் மூச்சை குபீரென்று இழுத்து 5 நொடிகளுக்கு பிறகு வெளியில் மெல்ல விடவும். இதனை செய்யும் போது ஒரு கையை வயிற்றில் வைத்து வயிறு உள்ளெ செல்கிறதா என்று பார்த்து கொள்ளலாம். பிறகு நிமிர்ந்து, சாதாரணமாக மூச்சை இரண்டு மூன்று முறை இழுத்து விட்டு இந்த பயிற்சியை தினமும் 10 தடவை செய்யலாம். ஆரம்பத்தில் செய்யும்போது 5 முறை செய்தாலே போதுமானது.

 உட்டியாணா பந்தாவில் இவ்வளவு நன்மைகளா..!

உட்டியாணா பந்தாவில் இவ்வளவு நன்மைகளா..!

இந்த பந்தா உடலின் செயல்பாட்டை மிக சீராக வைக்கும். இதனை ஆண்கள் தொடர்ந்து செய்தால் அவர்களின் ஆண்மை குறைவு பிரச்சினை விரைவில் குணமடைந்து இல்லற வாழ்வில் இன்பமாக இருக்கலாம். அத்துடன் இனவிருத்திக் கோளாறுகள், தாதுப்பை உறுப்புகள் பலவீனம் போன்றவை குணமாகும். மாதவிடாய் பிரச்சினைகள் கொண்ட பெண்கள் இதை செய்து வந்தால் மாதவிடாய் சார்ந்த நோய்கள் விரைவில் சரியாகும். இது மலசிக்கல், அஜீரணம், பலவீனம், வாய் துர்நாற்றம், இடுப்பு வலி, ஆஸ்துமா போன்றவற்றிற்கு முற்றிலுமாக தீர்வு தரும்.

ஆரோக்கியமான வாழ்வு தரும் பந்தா..!

ஆரோக்கியமான வாழ்வு தரும் பந்தா..!

எந்த ஒரு பயிற்சியாக இருந்தாலும் ஆரம்பத்தில் அது சற்றே கடினமாகத்தான் இருக்க கூடும். ஆனால் அதுவே பல நாள் பயிற்சிக்கு பிறகு பழகி விடும். ஆரம்ப நிலையில் சிறிது கடினமாக இருக்கிறது என்று இதை செய்யாமல் விட்டுவிட்டால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள் கிடைக்காமல் போய்விடும். அத்துடன் சீரான ஆரோக்கியத்தை இந்த உட்டியாணா பந்தா தருவதை இழந்து விடுவீர்கள்.

யாரெல்லாம் உட்டியாணாவை செய்ய கூடாது..?

யாரெல்லாம் உட்டியாணாவை செய்ய கூடாது..?

- கர்ப்பிணிகள் இந்த பந்தாவை செய்ய கூடாது.

- மாதவிடாய் காலங்களில் பெண்கள் இந்த உட்டியாணா பந்தாவை தவிர்க்க வேண்டும்.

- 14 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் இதனை செய்ய கூடாது.

- இதய நோயாளிகள், வயிற்றில் அறுவை சிகிச்சை, வயிற்றில் புண் இருப்பவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Uddiyana Asana To Improve Masculinity & Give Benefits

A lock, or bandha, in hatha yoga, is a gesture in which a segment of the body is sealed, isolated, or constricted in some manner. One of the most powerful locks is uddiyana bandha—the upward flying lock or abdominal lift, in which you suck your abdominal wall in and up at the end of an exhalation, while restraining the breath.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more