Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
உடலுறவுக்குப் பின் பெண்ணறுப்பில் அரிப்பு,எரிச்சல் உண்டாகக் காரணம் என்ன? எப்படி சரிசெய்யலாம்?
இங்கே உடலுறவு பற்றியும் அதற்குப் பிறகு உண்டாகும் சில சின்ன சின்ன பிரச்னைகள் பற்றியும் பேசப்பட்டுள்ளன.
பெரும்பாலான நபர்கள் உடலுறவுக்கு பின் சில உணர்வுகளை பெறுகின்றனர். பெண்கள் என்றால் மார்போடு அணைத்துக் கொண்டு இருப்பது, ஆண்கள் என்றால் உடனே சிறுநீர் கழிக்க முற்படுவது போன்ற எண்ணங்கள் தோன்றுகின்றன.

ஆனால் சில சமயங்களில் பெண்ணுறுப்புப் பகுதியில் வேதனை, அரிப்பு மற்றும் மியூக்கஸ் திரவம் வெளியேற்றம் போன்ற அசெளகரியத்தையும் அவர்கள் சந்திக்கின்றனர். இந்த மாதிரியான மாற்றங்கள் ஏன் ஏற்படுகிறது என்பதை பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண உள்ளோம்.

வேதனை
செக்ஸ் என்பது ஆண், பெண் இருவருக்கும் இன்பமான விஷயமாக இருந்தாலும் சில சமயங்களில் வேதனையை ஏற்படுத்தி விடும். இந்த வேதனை சில காரணங்களால் ஏற்படுகிறது. பெண்ணுறுப்பு பகுதியில் ஏற்படும் எண்டோமெட்ரியோசிஸ் என்ற பாதிப்பால் இது நிகழ்கிறது. கருப்பையின் வெளிப்புற பகுதியில் எண்டோமெட்ரியல் திசுக்கள் வளர்ந்து காணப்படும். இதனால் செக்ஸிற்கு பிறகு வேதனை ஏற்படுகிறது. செக்ஸிற்கு பிறகு கருப்பை சுருங்குதல் ஒரு இயல்பான விஷயம். இது செக்ஸின் போது வெளிப்படும் ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோனால் உண்டாகிறது.
என்ன செய்ய வேண்டும்
நீங்கள் ஒவ்வொரு முறை செக்ஸில் ஈடுபடும் போதும் இந்த மாதிரியான வேதனையை வலியை சந்தித்தால் உடனே மகப்பேறு மருத்துவரை சந்திப்பது நல்லது. ஏனெனில் இது நார்த்திசு கட்டிகள் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் வளர்ச்சியாகக் கூட இருக்கலாம்.

எரிச்சல் உணர்வு
உடலுறவிற்கு பிறகு சிறுநீர் கழிக்கும் போது ஒரு விதமான எரிச்சல் உணர்வை சந்திப்பீர்கள். இது தற்காலிகமான விஷயமே. இந்த உணர்வே நீண்ட நேரம் நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
என்ன செய்ய வேண்டும்
செக்ஸின் போது இந்த மாதிரியான அசெளகரியங்கள் ஏற்படாமல் இருக்க உங்கள் உடம்பை ஈரப்பதத்தோடு வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கைகள் மற்றும் வாய் இரண்டையும் சுத்தப்படுத்தி கொள்ளுங்கள்.

இரத்தம் படுதல்
சில சமயங்களில் உடலுறுவின் போது ஏற்படும் கருப்பை வாய் அழற்சியால் லேசாக இரத்தம் படுதல் ஏற்படலாம். முரட்டுத்தனமான உடலுறவால் யோனி பகுதியில் கிளிசல், இரத்தம் படுதல் உண்டாகலாம். சில சமயங்களில் இந்த இரத்தம் அடர்ந்த நிறமாக இருந்தால் அது உங்கள் கருப்பையில் உள்ள பழைய இரத்தம் என்பதை காட்டுகிறது.
என்ன செய்ய வேண்டும்
உடலுறவிற்கு பிறகு இந்த மாதிரியான இரத்தம் படுதல் அடிக்கடி ஏற்பட்டால் உடனே மகப்பேறு மருத்துவரை சந்தியுங்கள்.

அரிப்பு
உடலுறவிற்கு பிறகு சில சமயங்களில் அரிப்பு ஏற்படும். இது ஆணுறை போன்றவற்றால் ஏற்படும் அழற்சியாக கூட இருக்கலாம். எனவே அதையும் கண்டறியுங்கள்.
என்ன செய்ய வேண்டும்
எனவே உடலுறவின் போது காண்டம் பயன்படுத்துவதற்கு முன் அதில் சேர்க்கப்பட்ட பொருட்களை நன்கு வாசித்து கொள்ளுங்கள்

சிறுநீர் பாதை தொற்று
உடலுறவின் பாக்டீரியா தொற்று ஏற்பட காரணமாகிறது. இந்த பாக்டீரியாக்கள் மலவாய் வழியாக பெண்ணுறுப்புப் பகுதிக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தலாம்.
என்ன செய்ய வேண்டும்
உடலுறவிற்குப் பின்பு சிறுநீர் கழித்து சிறுநீர் பையை காலியாக்கி கொள்ளுங்கள். ஏனெனில் உடலுறவின் போது உள் நுழைந்த பாக்டீரியாக்கள் எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேற்றப்பட்டு விடும். இதனால் சிறுநீர் பாதை தொற்று தடுக்கப்படும்.



Click it and Unblock the Notifications
