For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இத படிச்சிட்டு வெளில போனா எந்த அக்னி வெயிலும் உங்க கிட்டயே நெருங்காது... 100 சதவீதம் உண்மை

  By Gnaana
  |

  அக்னி நட்சத்திரம் எனும் கோடையின் உக்கிரம் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இப்போதே, கோடையின் வெப்பம், நம்மைத் தவிக்கவைக்கிறது. இந்த வருடம், வெயிலின் கடுமை, தீவிரமாக இருக்கும் என்ற வானிலை அறிக்கைகள் வேறு மக்களை பீதியடைய வைக்கின்றன.

  health

  சாலைகளில் கானல் நீர் கண்களை கலங்க வைக்கிறது. குடிநீர் பைப்புகளில், வெறும் காத்து தான் வருது, அளவு கடந்த தாகம் வாட்டுகிறது, வியர்வையின் வேகம் தணிய, எத்தனை முறை குளித்தாலும் உடனே, வியர்க்கிறது. இப்போதே இப்படியென்றால், மே மாதம் முழுதும், வறுத்தெடுக்கப்போகும் அக்னி நட்சத்திர வெயிலின் கொடுமையை, நாம் எதிர்கொள்வது எப்படி?

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
   கொளுத்தும் கோடை

  கொளுத்தும் கோடை

  கோடையா? நான் அப்போதெல்லாம், சிம்லா, ஊட்டியில் தங்கிவிடுவேன், கோடை கழிந்தபின்னேதான் தமிழ்நாட்டுக்கே வருவேன், இல்லையில்லை, நான் கோடையில், சுவிஸ்ஸில் ஜாலியாக விடுமுறையைக் கழிப்பேன் என்பவர்கள், இந்தக் கட்டுரையை தயவுசெய்து, பாஸ் செய்துவிடலாம். இல்லையென்றால், நாம் எக்கச்சக்க செலவு செய்து கோடையை கடக்கும்போது, இவர்கள், இத்தனை குறைந்த செலவில், நிம்மதியாகக் கோடைக்காலத்தை, கழித்துவிட்டார்களே, என்ற பொறாமை ஏற்படக்கூடும்.

  பாதிப்புகள்

  பாதிப்புகள்

  ஜோதிடர்கள் சொல்வார்கள், அனுபவிக்க வேண்டிய விளைவுகளைத் தவிர்க்க முடியாவிட்டாலும், அதன் பாதிப்புகளை பரிகாரங்கள் மூலம், குறைத்துக்கொள்ளலாம் என்று. கடும் வெயிலில் செல்லவேண்டுமென்ற நிலையிருந்தால், காலுக்கு நல்ல இதமான சூட்டைத்தாங்கும் காலணிகள் அணியலாம், தலைக்கு தொப்பி வைத்துக்கொள்ளலாம், கண்களை சூரிய வெப்பம் தாக்காமல் இருக்க, குளிர் கண்ணாடிகளை அணியலாம். வசதியிருந்தால், அதையும்விட மேலாக, குளிர்சாதன வசதிகொண்ட கார்களில், வெயில் சுட்டெரிக்கும் சாலைகளைக்கடக்கலாம். நாம் வெயிலில் செல்லவேண்டியநிலை இருந்தாலும், அதன் பாதிப்புகளை, எளிதாகக் கடக்கமுடியும்தானே!

  கோடைவெயிலை நாம் தவிர்க்க முடியாவிட்டாலும், சில முன்னெச்சரிக்கை செயல்களின் மூலம், சூட்டின் கடுமையை, தணித்துக்கொள்ளமுடியும், அவற்றை இனி நாம் பார்க்கலாம்.

  நீர்ச்சத்து

  நீர்ச்சத்து

  உடலுக்கு உயிர்ச்சத்து, நீர்ச்சத்தாக அமைகிறது. கோடையில் நாம் கவனிக்க வேண்டியது, உடலில் நீர்ச்சத்து, அது எப்போதும் நிறைவாக இருப்பதை, உறுதிசெய்யவேண்டும். அவ்வப்போது, தண்ணீரைக்குடித்துக் கொண்டேயிருக்க வேண்டும். தாகமென்று செயற்கை கார்பனேடட் குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்க்கணும். அவை, தொண்டைக்கு இதமாக இருந்தாலும், உடல்நீரை வற்றச்செய்பவை.

  என்ன குடிக்கலாம்?

  என்ன குடிக்கலாம்?

  பழச்சாறுகள், பானங்கள் மற்றும் தண்ணீரை அதிககுளிர்ச்சியில், குடிப்பதைத்தவிர்க்க வேண்டும். குளுமை தொண்டைக்கு இதமளித்தாலும், உடலுக்கு நன்மையளிக்காது. தாகமும் தீராது. குடித்த சில நிமிடங்களில் மீண்டும் தாகமெடுக்கும்.

  இதனைத்தவிர்க்க, சாதாரண நீரைக் குடித்துப் பழக வேண்டும். இதன்மூலம், தாகம் தீருவதுடன், தொண்டையில் பாதிப்பும் ஏற்படாது. சுகாதாரமில்லாத குளிர்பானங்கள் தொண்டையில் ஒவ்வாமையை ஏற்படுத்தி, சளி, ஜலதோஷம் போன்ற சுவாச பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

  செயற்கைபானங்களைக் குடிப்பதைவிட, இளநீர் மற்றும் நுங்கு போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கைபானங்களைப் பருகிவர, நீர்ச்சத்துடன், உடலை வலுவாக்கும் மினரல்கள் மற்றும் வைட்டமின்களும் கிடைக்கும். நன்கு நீராக்கப்பட்ட உப்பு மோரும் நன்மைதரும்.

  ஜூஸ்கள்

  ஜூஸ்கள்

  எலுமிச்சைசாறு, சாத்துக்குடி, ஆரஞ்சு, மாம்பழச்சாறுகள், உடலை தெம்பாக்கும், பதநீர் பருகலாம். வெள்ளரிச்சாறு, வெள்ளரிபழம் இவையெல்லாம், உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும் பழங்களாகும்.

  அசைவ உணவு

  அசைவ உணவு

  கோடையில் அசைவத்தைத் தவிர்ப்பது, உடல் நீர்ச்சத்தை சீராக வைக்கும், தொற்று நோய்களையும் தவிர்க்கும். நொறுக்குத்தீனிகளை விலக்குவது, நீர்ச்சத்து குறைபாடு, வயிற்றுப்போக்கு போன்ற, உடல் சீர்கேட்டிலிருந்து, காக்கும். அசைவ உணவு சாப்பிடுவதன் மூலம் உடலில் வெப்பநிலை மிக வேகமாக அதிகரிக்கும். அதனால் தான் கோடையில் நீர்ச்சத்துக்கள் நிறைந்த சைவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது நல்லது.

  தலைக்கு தொப்பி

  தலைக்கு தொப்பி

  சூரியனின் வெப்பக்கதிர்கள், நேரடியாகத் தலையைத்தாக்கும்போது, நீர்ச்சத்து வற்றி, அதிக சோர்வும், தாகமும் ஏற்பட்டு, சமயத்தில் கண்கள் இருண்டு, மயக்கமடைய நேரிடும்.

  இதைத் தவிர்க்க, தலைக்கு பருத்தித்துணியாலான தொப்பிகள், பனையோலைகளில் வேயப்பட்ட தொப்பிகளை அணிய, சூரியவெப்பத்தை விலக்கி, பாதிப்பிலிருந்து காக்கும் தன்மை மிக்கவை.

  கண்டிப்பாக சிந்தடிக் தொப்பிகள், பளபளப்பான நிறங்கள் மற்றும் கருப்புநிற தொப்பிகள் மற்றும் எலாஸ்டிக் தன்மையுள்ள தொப்பிகளைப் பயன்படுத்தக்கூடாது. அவை பாதிப்பை, கடுமையாக்கிவிடும் தன்மைமிக்கவை.

  முகத்துக்கு மேக்கப்

  முகத்துக்கு மேக்கப்

  பெண்களிடம், ஆண்களும் மேக்கப் விசயத்தில் போட்டியிட்டு, முகத்துக்கு, உடலுக்கு பல்வேறு கிரீம்கள் மற்றும் லோஷன்களைத்தடவிக்கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் கோடையில் முற்றிலும் தடைசெய்து, எந்த அழகுசாதனப்பொருட்களையும் உபயோகிக்காமல், அவ்வப்போது, முகத்தைக் கழுவிவந்தாலே, சரும பாதிப்புகள் நீங்கி, முகம் பொலிவாகும்.

  காலணிகள்

  காலணிகள்

  கால்களுக்கு இதமான இரப்பர் செருப்புகளை அணிவது நல்லது. காலணிகளில் ஏராளவகைகள் இருந்தாலும், செயற்கை பிளாஸ்டிக் மற்றும் சிந்தடிக் வகைகளில் அதிகம் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை அணிந்து கோடைக்காலங்களில் நடக்கும்போது, கால்களில் சூடேறி, உடலில் நீர்ச்சத்து வற்றக்காரணமாகிவிடுகின்றன. அத்துடன், கால்களில் வியர்வை ஏற்பட்டு, பாதவெடிப்புகள் போன்ற பாதிப்புகள் ஏற்படவும் காரணமாகிவிடுகின்றன.

  சாதாரண இரப்பர் செருப்புகள், மேற்கண்ட பாதிப்புகளிலிருந்து நம்மைக்காக்கும். சூட்டை கால்களுக்குக் கடத்தாமல், உடலின் நீர்ச்சத்தைக்காக்கும், கால்களில் வியர்வை ஏற்படாமல் தடுக்கவல்லவை. இரப்பர் செருப்புகள், கோடை பாதிப்புகளைத் தடுக்கும்.

  கோடையில், ஷூக்களை தவிர்த்தல் நலம், இல்லையெனில், காட்டன் காலுறைகளை உபயோகித்து, கால்களை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், வெளியில் எடுத்துக்கொள்வது, உடல்சூட்டைத் தணிக்கும்.

  ஆடை பாதி, கோடை மீதி

  ஆடை பாதி, கோடை மீதி

  மனிதனுக்கு கண்ணியத்தையும், அழகையும் தரும் பருத்தி ஆடைகள், கோடைக்காலத்தில் ஏற்படும், நீர்ச்சத்து குறைபாடு, உடலில் பரவும் தொற்றுவியாதிகளைத் தடுப்பதில், முக்கியமாக விளங்குகின்றன, என்பதை நாமறிவோமா?

  கோடைவெப்பத்தைத் தணிக்க நாம் பல்வேறு முறைகளில் முயன்றுவந்தாலும், அவற்றைவிட, நமதுஉடைகளே, கோடையின் பாதிப்புகளைத் தீர்ப்பதில், முக்கிய பங்காற்றுகின்றன.

  கோடைக்காலங்களில், உடலை டைட்டாக இறுக்கும் ஆடைகளை, சுத்தமாக விலக்கிவிட வேண்டும். இடுப்பிலிருந்து கால்கள் வரை, உடலை அளவெடுக்கும் லெக்கின்ஸ் போன்ற மேலைநாட்டு உடைகளை, கோடைக்காலத்திலாவது, தவிர்க்கலாமே! இடுப்பை நெரிக்கும் ஜீன்ஸ், டைட்டாக அணியும் சட்டைகள், மற்றும் ஆடைகளை, கோடைக்காலத்தில் அணியாமல் இருந்தாலே, கோடைக்கால வெப்பம், வியர்வை, வியர்க்குரு போன்ற பாதிப்புகளை, விலக்கிவிட முடியும்.

  பாலிஸ்டர், டெர்லின், போன்ற செயற்கை இழை சட்டை மற்றும் பேண்ட்களை அணிய வேண்டாம்.

  கைத்தறி, காட்டன் ஆடைகள்

  கைத்தறி, காட்டன் ஆடைகள்

  கோடையில் குளுகுளுவென உடல் ஏசி மாதிரி இருக்க வேண்டும் என்றால்,

  கோடைக்காலத்தில், உடலுக்கு தீமைசெய்யாத, வியர்வையை உறிஞ்சும் பருத்தி மற்றும் கைத்தறி ஆடைகளை அணிய, உடலை சூட்டிலிருந்து காத்து, வியர்வையை உறிஞ்சி, உடலின் நீர்ச்சத்தைக் காக்கும். கோடை வியாதிகளைத் தடுக்கும்.

  கண்களை உறுத்தாத நிறங்களிலுள்ள வெண்ணிற, இளநிற ஆடைகளை அணிய, அவை சூரிய வெப்பத்தை உடலினுள் செலுத்தாமல், வெளியேற்றும் தன்மைமிக்கது.

  பருத்தி பனியன்கள் வியர்வையை உறிஞ்சி, வியர்வை உடலில் தங்காமல் செய்து, வியர்க்குரு, சரும வியாதித் தொற்றுக்களின் பாதிப்புகளைத் தவிர்க்கிறது.

  பழைய உள்ளாடைகளை வீசிவிட்டு, எலாஸ்டிக் இல்லாத புதிய உள்ளாடைகளை, பருத்தி ஆடைகளாகவே கோடைக் காலங்களில், அணிய வேண்டும்,

  ஆண்கள் கதர்வேட்டி,சட்டை அணிந்தால், கோடையின் பாதிப்பிலிருந்து, எளிதில் தப்ப முடியும்.

  பெண்கள் உடலை இறுக்கும் ஜீன்ஸ் போன்ற ஆடைகளைத்தவிர்த்து, தளர்வான உடைகளான பருத்தியில் நெய்த சல்வார் கமீஸ், லூசான பேண்ட்களை அணியலாம். காட்டன் புடவைகள், உடலின் வியர்வையை, உறிஞ்சும் தன்மைமிக்கது.

  சுத்தம்

  சுத்தம்

  வியர்வையை உறிஞ்சி, சரும பாதிப்புகளிலிருந்து காக்கும் காட்டன், கதர் ஆடைகளானாலும், அவற்றை தினமும் துவைத்த பின்னரே, அணிய வேண்டும். ஒரே ஆடையை, பலநாட்கள் அணிந்தால், அவை பருத்தி ஆடைகளாகவே இருந்தாலும் உடலில் சரும பாதிப்புகள் ஏற்படவே, செய்யும்.

  முன்னெச்சரிக்கையாக இருந்தாலும், வெப்ப அலை அதிகரித்திருக்கும் உச்சிப்பகல் பொழுதில், வெளியில் செல்லாமலிருப்பதே, உத்தமம், அவசியமெனில், அதிகமாக நீரை அருந்திவிட்டு, காட்டன் தொப்பி, குளிர் கண்ணாடியுடன் வெளியில் செல்ல, பாதிப்புகளைத் தவிர்க்க முடியும். குறிப்பாக, கோடை காலத்தில் தினமும் இரண்டு மூன்று முறையாவது குறைந்தபட்சம் குளியுங்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Summer Dress and activities to avoid - summer illness.

  Summer is hot sunny and dry season. It brings vacation for children and also carries numbers of summer disease to us.
  Story first published: Wednesday, April 25, 2018, 11:20 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more