For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாம் பயந்து நடுங்கும் இந்த விஷயங்கள் எல்லாம் எப்படிப்பட்டவைனு தெரியுமா..?

|

எதற்கெடுத்தாலும் பயந்து பயந்தே வாழ்பவர்கள் இன்று எண்ணிக்கையில் அதிகரித்துள்ளனர். பயம் என்பது இயல்பான ஒன்று தான் . என்றாலும், எதற்கெடுத்தாலும் பயப்படுவது மிக மோசமான ஒரு பழக்கமாகும். சிறிது காய்ச்சல் வந்தாலே உயிரே போகும் அளவுக்கு பலர் பயந்து விடுவார்கள்.

நாம் பயந்து நடுங்கும் இந்த விஷயங்கள் எல்லாம் எப்படிப்பட்டவைனு தெரியுமா.?

முன்னெச்சரிக்கை என்பது வேறு, பயம் என்பது வேறு. இரண்டையும் நாம் குழப்பி கொள்ள கூடாது. நாம் தேவையில்லாமல் பயந்து நடுங்கும் விஷயங்கள் எப்படிப்பட்டது என நீங்களே இனி அறிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பயம் என்றும் கொடியது..!

பயம் என்றும் கொடியது..!

"பயம்" இந்த 3 எழுத்து உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் நம்மை பல வகையில் பாதிக்கிறது. தேவையற்ற பயம் உயிருக்கே ஆபத்தை தந்து விடும். பயம் நம்மையும், நம்மை சுற்றி உள்ளவரையும் பாதிக்க செய்து விடும். நீங்கள் தேவையற்ற பயம் கொண்டால், உடலின் மெட்டபாலிசம் மாற கூடும்.

இரத்த ஓட்டமே நின்றுவிட்டதோ..?

இரத்த ஓட்டமே நின்றுவிட்டதோ..?

சிலருக்கு கையில் ரத்த ஓட்டம் நின்று விட்டது போன்ற உணர்வு ஏற்பட கூடும். இதை பார்த்தவுடனே நாம் நமது உடலில் 2 லிட்டர் ரத்தம் குறைந்தது போன்ற எண்ணம் கொள்வோம். ஆனால், உண்மை வேற ஒன்றாக இருக்கும். கைகளில் அல்லது கால்களில் இது போன்று இருந்தால் பயம் கொள்ளாமல் இருக்குங்கள். கைக்கு அதிக வேலை கொடுத்திருப்பதால் கூட இது ஏற்பட்டிருக்கலாம்.

நெஞ்சு வலி

நெஞ்சு வலி

உடலில் மிக முக்கிய உறுப்பு இதயம் தான். இதன் செயல்பாடு நின்றுவிட்டால் நமது உயிர் பிரிந்து விடும். பலர் நெஞ்சு வலி லேசாக இருந்தாலே மாரடைப்பு வந்து விட்டது போன்று பயந்து கொண்டு, உண்மையில் மாரடைப்பை வரவழைத்து விடுவார்கள் போலும். தேவையற்ற பயம் தான் உங்களுக்கு உண்மையில் இதய பாதிப்பை தரும். எனவே, நெஞ்சு வலி ஏற்பட்டால் பயம் கொள்ளாமல் மருத்துவரை அணுகுங்கள்.

உடலில் சிறு கருப்பா..!

உடலில் சிறு கருப்பா..!

சின்னதாக கூட நமது உடலில் சிறிய மாற்றம் ஏற்பட கூடாது என எண்ணுவோம். அதனை மீறி ஏதேனும் சிறிய மச்சம் போன்று ஏற்பட்டால் புற்றுநோய் வந்து விட்டதாக நாம் கருதுவோம். இது உண்மையில் நமது வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்ட வடு, அல்லது இறந்து போன செல்களாக கூட இருக்கலாம்.

MOST READ: மருத்துவமனைகள் உங்களிடம் சொல்லாமல் மறைக்கும் அந்த 10 ரகசியங்கள் இதோ..!

டிக்..டிக்..டிக்..!

டிக்..டிக்..டிக்..!

மனிதனின் சராசரியான இதய துடிப்பு 65 தான். இதை மீறி ஒரு சில புள்ளிகள் அதிகரித்தாலும் நாம் உலகமே அழிந்து விட்டது போன்று உணர்வோம். சற்று மன அழுத்தம் அதிகரித்தாலோ அல்லது அதிக வேலை பளு இருந்தாலோ இது போன்ற நிலை ஏற்படும். இதே நிலை தொடர்ந்தால் மட்டுமே மருத்துவரை அணுகலாம்.

வறட்சியாக உள்ளதா..?

வறட்சியாக உள்ளதா..?

சில சமயங்களில் நக்கு வறட்சியாக இருக்கும். அந்த சமயங்களில் நாம் அதை பெரிய நோயாக எடுத்து கொள்ளாமல் இருக்க வேண்டும். நாக்கு வறட்சி, குரல் மாற்றம் ஆகியவை தொற்றுகளால் ஏற்பட்டிருக்க கூடும். எனவே, இது போன்று ஏற்பட்டிருக்கும். இதற்காக புற்றுநோய் அளவில் யோசிக்காதீர்கள்.

தினமும் தும்பலா..?

தினமும் தும்பலா..?

சிலருக்கு காலையில் எழுந்தவுடனே தும்பல் ஏற்பட கூடும். இதை பன்றி காய்ச்சல் அளவுக்கு மனதில் எண்ணம் கொள்வார்கள். இது முற்றிலும் தவறான கருத்தாகும். மூக்கு மிகவும் மென்மையாக இருப்பவர்களுக்கு இது போன்ற பிரச்சினைகள் ஏற்பட கூடும். ஆதலால், அதிக அளவில் பாதிப்புகள் இருந்தால் மட்டும் சிகிச்சை பெறலாம்.

மாதவிடாய் பயம்கள்..!

மாதவிடாய் பயம்கள்..!

பெண்களின் பெரிய பயமே இந்த மாதவிடாய் தான். மாதம் மாதம் சரியான தேதிக்கு தான் மாதவிடாய் வர வேண்டும் என்று எண்ணி கொள்வார்கள். இதில் ஒரு நாள் தவறினால் கூட அவ்வளவு தான். கால மாற்றங்கள், உடல் மாற்றங்கள், உளவியல் மாற்றங்கள் ஆகியவற்றினால் கூட இந்த நிலை ஏற்பட கூடும்.

MOST READ: இவற்றையெல்லாம் இன்றே நிறுத்தி கொள்ளுங்கள்..! இல்லையென்றால், உங்களுக்கு மரணம் கூட நேரலாம்..!

அதிக உஷ்னமா..?

அதிக உஷ்னமா..?

உடல் வெப்பத்தின் சராசரி அளவு 96.9°F இருந்து 98.9°F வரை இருக்கும். இதன் அளவு சற்று உயர்ந்தால், காய்ச்சல் என்றோ அல்லது வேறு ஏதேனும் நோய் என்றோ மருந்துகள் எடுத்து கொள்ளாதீர்கள். உடலின் வெப்பம் அதிகமாக இருந்தால் உடனே பயம் கொள்ளாமல் இருந்தாலே போதும்.

இனி பயம் வேண்டாம்..!

இனி பயம் வேண்டாம்..!

இனி எதற்கெடுத்தாலும் பயம் கொள்ளும் எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள். மேலும், சிறிய அறிகுறிகள் இருந்தால் அவை பெரிய நோயாக தான் இருக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். இதே அறிகுறிகள் தொடர்ந்தால் அப்போது கட்டாயம் மருத்துவரை அணுகுங்கள்.

இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Scary Symptoms We Don’t Need to Worry About

Scary Medical Symptoms You Don't Need to Worry About
Desktop Bottom Promotion