Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
இந்த 8 பரிசோதனைகளை வீட்டிலிருந்தே செய்து, உடலில் என்ன நோய் உள்ளது என தெரிஞ்சிக்கோங்க...!
அறிவியல் வளர்ச்சி அடைந்து விட்ட இன்றைய காலகட்டத்தில், பல வகையான மருத்துவ பரிசோதனைகளை நாம் வீட்டிலிருந்தே செய்து கொள்ளும் அளவிற்கு உள்ளதாம். இந்த நிலையை மருத்துவ துறை அடைவதற்கு பல ஆயிரம் வருடங்கள் தேவைப்பட்டது. எல்லா வகையான உடல் மாற்றங்களையும் நம்மால் பரிசோதித்து கொள்ள இயலாது.

என்றாலும், ஒரு சில எளிய பரிசோதனைகளை நம்மால் வீட்டிலிருந்தே செய்து கொள்ள முடியும். இந்த உடனடி டெஸ்டுகளின் மூலம் நமக்கு உள்ள நோய்களோ, பிரச்சினைகளோ என்ன என்பது தெரிய வரும். இந்த பரிசோதனை முறைகளை பற்றி இனி அறிவோம்.

இதய துடிப்பு எவ்வளவு..?
உங்களுக்கு இதயம் சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் இந்த பரிசோதனை உதவும். அதற்கு நான்காவது மாடிக்கு ஒரு முறை நிதானமாக போயிட்டு மறுபடியும் கீழே வாருங்கள். பிறகு உங்களின் இதய துடிப்பை கணித்து பாருங்கள். ஒரு நிமிடத்திற்கு 120 துடிப்புகள் இருந்தால் உங்களுக்கு இதயம் சார்ந்த பிரச்சினைகள் இல்லை. இதற்கு மேல் இருந்தால் இதய நோய்கள் இருக்க கூடும்.

சர்க்கரை நோயா..?
சர்க்கரை நோய் உங்களுக்கு உள்ளதா என்பதை கீழ்கண்ட 6 கேள்வியின் மூலம் வீட்டிலிருந்த அறியலாம்.
1. உங்களின் வயது ? 40க்கு கீழ் இருந்தால் 0 புள்ளி போடவும், 40-49: 1 புள்ளிகள், 50-59 : 2 புள்ளிகள், 60க்கு மேல் இருந்தால் 3 புள்ளிகள் போட்டு கொள்ளவும்.
2. நீங்கள் ஆணா, பெண்ணா..? ஆண்- 1, பெண்- 0
3. உங்கள் குடும்பத்தில் ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளதா..? ஆம்- 1, இல்லை- 0

4,5,6...
4. உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதா..? ஆம்- 1, இல்லை- 0
5. உடல் பருமன் உள்ளதா..? சாதாரண எடை என்றால்- 0, அதிக எடைக்கு- 1, மிக பருமன்- 2, மிக மிக அதிக எடை- 3
6. நீங்கள் உடல் ரீதியாக செயல்திறனுடன் இருக்கிறீர்களா..? ஆம்- 1, இல்லை- 0

விடை என்ன..?
இந்த 6 முறைகளுக்கும் பதிலை ஒரு தாளில் எழுதி வைத்து கொள்ளுங்கள். இதன் முடிவு 4 அல்லது அதற்கு மேல் வந்தால், உங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதன் முடிவு 5 அல்லது அதற்கு மேல் வந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு அதிகம் உள்ளது என அர்த்தமாம்.

மூச்சு பரிசோதனை
உங்களின் நுரையீரல் ஆபத்தில் உள்ளதா..? இல்லையா..? என்பதை அறிய இந்த பயிற்சி நன்கு உதவும். அதற்கு முதலில் மூச்சை நன்கு இழுத்து வெளியே விட்டு கொள்ளவும். பிறகு மூச்சை இழுத்த நிலையில் இருக்க வேண்டும். இப்போது நொடி கடிகாரத்தை பயன்படுத்தி எவ்வளவு நிமிடங்கள் இந்த நிலையில் நீங்கள் உள்ளீர்கள் என்பதை அறிய வேண்டும். 40 முதல் 30 நிமிடம் வரை இருந்தால் சுவாச பிரச்சினை இல்லை என அர்த்தம். இதற்கு குறையாக இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.

கழுத்து எப்படி உள்ளது..?
உங்களின் கழுத்து எந்த நிலையில் உள்ளது என்பதை பொறுத்து நாம் எளிமையாக உடலில் உள்ள பிரச்சினைகளை அறிந்து விட முடியும். நேராக நின்று ஒரு பக்கமாக புகைப்படம் எடுத்து, அதில் உங்களின் கழுத்தும், தோள்பட்டையும் ஒரே கோட்டில் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும். நேராக இல்லையென்றால் கழுத்து சார்ந்தும், எலும்பு சார்ந்தும் பிரச்சினைகள் ஏற்பட கூடும்.

முதுகு தண்டு
பலருக்கு முதுகு மிகவும் வளைந்த நிலையில் இருக்கும். இந்த நிலை பல வித பாதிப்புகளை ஏற்படுத்தும். உங்களின் முதுகும் உடம்பும் நேராக இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை என அர்த்தம். அப்படி இல்லாமல் வளைந்து காணப்பட்டால் முதுகு தண்டு பாதிக்கப்பட்டுள்ளது என அர்த்தமாம்.

எங்கு வலி உள்ளது..?
தலையில் வலி ஏற்படும் இடத்தை வைத்து பாதிப்பை கண்டறிய முடியும். குறிப்பாக உங்களின் முன் தலை பகுதியில் வலி ஏற்பட்டால் சரியாக தூக்கமில்லை என அர்த்தம். பின்னந்தலையில் வலி இருந்தால் அதிக மன அழுத்தம் உள்ளது என அர்த்தமாம். தலையில் அதிக வலி இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும்.

மார்பக பரிசோதனை
மார்பக புற்றுநோயிற்கான அறிகுறிகள் தென்படுவதன் மூலம் இதனை கண்டறியலாம். குறிப்பாக மார்பக அளவு மாறுபடுதல் மூலம் இதனை நன்கு அறியலாம். உங்களின் மார்பகங்களில் இது போன்ற பிரச்சினை அல்லது கட்டிகள் ஏற்பட்டால் கட்டாயம் மருத்துவரை அணுகுங்கள்.

ஜாக்கிரதை..!
மேற்சொன்ன முறைகள் ஒரு முன்னெச்சரிக்கை பரிசோதனைகள். இவற்றை முதல் கட்டமான பரிசோதனை என்றும் கூறலாம். இந்த பரிசோதனைகளில் நோயிற்கான அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரிடம் முறைப்படி எல்லா வித பரிசோதனைகளையும் மேற்கொள்ளங்கள் நண்பர்களே.



Click it and Unblock the Notifications











