Latest Updates
-
செஃப் தீனா ஸ்பெஷல் சிக்கன் தொக்கு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
வரலாற்றின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவரின் ஒரு பயணம் எப்படி உலக வரலாற்றை மாற்றியது தெரியுமா? -
உடல் சூட்டை டக்கென்று குறைக்கும் டாப் 3 உணவுகளை பட்டியலிட்ட சித்த மருத்துவர் - அது என்னென்னன்னு பாருங்க..! -
மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க… கோடை வெயிலிலும் பணவரவு குறையாம இருக்க ரகசியம்! -
1 வருடம் கழித்து மேஷ ராசிக்கு செல்லும் புதன்: நாளை முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
India Heatwave Alert: இந்தியாவில் வெயில் உச்சத்தில் இருக்கும் டாப் 10 நகரங்கள் என்னென்ன தெரியுமா? -
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும்
காதலா..? காமமா..? எது ஆரோக்கியமான வாழ்வை தரும்...?
உலகம் தோன்றியதில் இருந்தே அன்புதான் எல்லாவற்றையும் இயங்க செய்கிறது. எவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி அடைந்தாலும் ஒவ்வொரு உயிர்களிடத்தில் இருக்கும் அன்பே மிகவும் மகத்தானது. இந்த அன்பிற்கு அடுத்தபடியாக இருப்பது
உலகம் தோன்றியதில் இருந்தே அன்புதான் எல்லாவற்றையும் இயங்க செய்கிறது. எவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி அடைந்தாலும் ஒவ்வொரு உயிர்களிடத்தில் இருக்கும் அன்பே மிகவும் மகத்தானது. இந்த அன்பிற்கு அடுத்தபடியாக இருப்பது காதலே. "காதல்" இரு உயிரை ஓர் உயிராய் துடிக்க செய்யும். மனிதனின் வாழ்வில் காதல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பது மறுக்க முடியாத ஒன்றே.

ஆனால் காதல் எவ்வளவு முக்கிமோ அதே அளவிற்கு காமமும் முக்கியம்தான். இன்னொரு உயிரை உயிர்ப்பிக்கும் தன்மை இந்த இரண்டிற்கும் உண்டு. இருப்பினும் இவ்விரண்டில் எது ஆரோக்கியமான வாழ்வை தரும் என்பது நம்மில் பலரின் கேள்வியாக இருக்க கூடும். இது காலம் காலமாக இருந்து கொண்டிருக்கின்ற விவாதத்திற்குரிய கேள்வியே..' இதற்கு விடை தெரிய வேண்டுமா... தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

#காமம்
இரண்டு உயிர்களை ஒன்று சேர்த்து அவர்களின் மூலம் இன்னொரு உயிரை உயிர்ப்பிக்கும், அற்புத நிகழ்வு ஏற்பட காரணம் இந்த காமம்தான். ஆனால் காமம் என்பது காதலின்றியும் பிறரிடம் உடலுறவு கொள்ள முடியும் என்பதே. காமம் ஒரு சில காலம் வரையே நீடிக்க வல்லது. காமத்தை மட்டும் வைத்து கொண்டு நிம்மதியான ஆரோக்கியமான வாழ்வை வாழ இயலாது. பெரும்பாலும் வயோதிக பருவத்தில் காமத்துக்கு இடம் இல்லாமல் போய்விடும். அப்போது காதலும் அன்புமே உறுதுணையாக இருக்கும். காமம் கொடுக்கும் நன்மைகளை விட காதல் பலமடங்கு உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் எண்ணற்ற நன்மைகளை தரும்.

#காதலின்றி அணுவும் இயங்காது..!
ஆரோக்கியமான வாழ்வு வேண்டுமென்றால் முதலில் அந்த வாழ்வில் அளவற்ற காதலும், அன்பும் இருத்தல் வேண்டும். காதல் இல்லாத வாழ்க்கை வெற்று போகும். ஒரு மனிதன் தனக்கு பிடித்தமான ஒருவர் மீது காதல் கொள்ளும் போது அளவற்ற நன்மைகள் உடலுக்கும் மனதுக்கும் ஏற்படும் என்று ஆராய்ச்சிகள் சொல்கிறது. ஆழமான காதல் இருவரின் பந்தத்தை வலுப்படுத்தும். வெறும் காமம் மட்டும் கொண்ட வாழ்க்கை விரைவிலேயே மன நிம்மதி இல்லாமல் செய்துவிடும். காதல் மட்டுமே உள்ள வாழ்க்கை எப்படியேனும் வெற்றி பெறும். ஏனென்றால் அவர்கள் ஒருவர்மீது ஒருவர் வைத்துள்ள புரிதல், அன்பு, நம்பிக்கை, அளவற்ற நேசம் ஆகியவையே காரணம்.

#ஆக்சிடாக்சின் (oxytocin)
"காதல் ஹார்மோன்" என்றே உளவியலாளர்களால் அழைக்கப்படும் ஆக்சிடாக்சின் பல நன்மைகளை உடலுக்கு தரவல்லது. ஒருவர் காதலில் விழுந்துவிட்டால் அவரின் உடலில் அதிக அளவில் இந்த ஹார்மோன் சுரந்து எண்ணற்ற மாற்றங்களை ஏற்படுத்தும். காதலில் இருக்கும் ஆண்களை விட பெண்களுக்கே ஆக்சிடாக்சின் அதிகம் சுரக்கும். இதனால் இயல்பாகவே அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள்.

#புற்று நோயை தடுக்கும்
காதல் செய்பவர்களுக்கு புற்று நோய் அதிகம் ஏற்படுவதில்லை என்று சில புள்ளி விவரங்கள் சொல்கிறது. காதலில் வயப்பட்ட தம்பதியினரின் ரத்த வெள்ளை அணுக்கள் மிகவும் ஆற்றல் பெற்றதாக மாறும். இதனால் புற்று நோய் செல்களை எதிர்த்து போராடும் தன்மை அதிகரிக்கும். எனவே காதல் செய்பவர்களுக்கு புற்று நோய் வரும் வாய்ப்பு மிக குறைவே.

#மன அழுத்தம்
பொதுவாக காதலில் இருப்பவர்கள் ஏதோ ஆகாயத்தில் பறப்பது போலவே உணர்வார்கள். இதற்கு காரணம் ஆக்சிடாக்சின்தான். ஒருவருக்கொருவர் அதிக அன்பை பரிமாறி கொள்ளும்போது அவர்களின் மனநிலை மிகவும் சீராக இருக்கும். மன அழுத்தம், மன கசப்புகள் இன்றி நிம்மதியான வாழ்வை பெறுவார்கள். அத்துடன் ரத்த ஓட்டமும் சமநிலையில் இருக்கும்.

#உடல் எடை கூடாது
இயல்பாக அதிகம் காதல் செய்பவர்களுக்கு உடல் எடை கூடாது. ஏனென்றால் உடலில் அட்ரினலின் (adrenaline) ஹார்மோனை அதிகம் சுரக்க செய்து அடிக்கடி பசிப்பதை தடுக்கும். இதனால் கண்ட நேரத்தில் நொறுக்கு தீனி கொறிப்பதால் ஏற்படும் உடல் பருமனில் இருந்து தப்பிக்கலாம். மேலும் காதல் வயப்பட்டவரின் எதிர்ப்பு சக்தி மண்டலம் பலமாகும்.

#என்றும் இளமை
நீங்கள் காதலில் வயப்பட்டுள்ளீர்கள் என்பதை தெரிந்து கொள்வது மிக சுலபமே. பொதுவாக காதல் செய்பவர்கள் பார்ப்பதற்கு மிகவும் இளமையாக தெரிவார்கள். அதுவும் 7 மடங்கு வயது குறைந்து தெரிவார்கள் என ஆராய்ச்சிகள் விவரிக்கிறது. மேலும் சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து எப்போதும் மினுமினுப்புடன் காட்சியளிக்கும். முகத்தின் செல்கள், அதிக ஊட்டமும் இதனால் பெறமுடியும். மேலும் காதல் செய்பவர்கள் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழவும் முடியும்.

#வலி நிவாரணி
ஒரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால், காதலில் இருப்பவர்களுக்கு வலி அதிகம் உணர முடியாது என்பதே. ஒருவர் மீது ஒருவர் அதிகம் காதல் வைப்பதால் அவர்களுக்கு வலி தெரிவதில்லை. மேலும் இருவரும் ஒன்றாக இருக்குபோது மின்சாரத்தில் பாயும் மின்னூட்டத்தின் அளவுகூட கம்மியாகத்தான் அவர்களால் உணர முடியும் என உளவியல் மருத்துவர்கள் சொல்கின்றனர்.

#ஆதலால் காதல் செய்வீர்
இவ்வளவு ஆரோக்கியமான நன்மைகளை தனக்குள்ளே கொண்டுள்ள இந்த காதல் மிகவும் மத்தானதுதான். காதல் மட்டுமே உள்ள வாழ்க்கையும் சில சமயங்களில் வெறுத்து போக கூடும். அதே போல காமம் மட்டும் இருக்கும் வாழ்வும் அப்படிதான். எனவே காதலும் காமமும் சேர்ந்த வாழ்வு இன்பத்தையே தரும். இவற்றில் காதலால் நீண்ட நாட்கள் வாழ முடியும். ஆனால் காமத்தால் அப்படி இயலாது. பாரதி பாடியது போலவே "ஆதலால், காதல் செய்வீர் உலகத்தினரே"..!



Click it and Unblock the Notifications