For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் மூளை சரியாக செயல்பட இன்றே இந்த உணவுகள் சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்

மூளையை ஆரோக்கியமாக பராமரிக்க சில உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம், அதேசமயம் சில உணவுகளை தவிர்க்க வேண்டியதும் அவசியம்.

|

நமது உடலின் ஒட்டுமொத்த செயல்பாடுகளுக்கும் மையமாக செயல்படுவது நமது மூளைதான். உடலில் உள்ள அனைத்து உடலுறுப்புகளையும் கட்டுப்படுத்துவது முதல் அவற்றின் இயக்கங்கள் வரை அனைத்திற்கும் பொறுப்பு மூளைதான். உங்கள் மற்ற உடலுறுப்புகளை போலவே மூளையையும் ஆரோக்கியமாக பரமரிக்க வேண்டியது அவசியம், சொல்லப்போனால் மூளைக்கு மற்ற உறுப்புகளை விட அதிக கவனம் தேவை.

list of foods which affect the brain function

மூளையை ஆரோக்கியமாக பராமரிக்க சில உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம், அதேசமயம் சில உணவுகளை தவிர்க்க வேண்டியதும் அவசியம். ஏனெனில் அதுபோன்ற உணவுகள் உங்கள் நினைவாற்றல், மனநிலை, மூளையின் ஆரோக்கியம் போன்றவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த பதிவில் உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்

சர்க்கரை என்பது சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுக்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். பதப்படுத்தப்பட்ட தானியங்களின் மாவுகளிலும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளில் க்ளெசமிக் இன்டெக்ஸின் அளவு அதிகம் உள்ளது. இந்த கார்போஹைட்ரேட்டுகள் எளிதில் செரிமானம் அடைந்து உங்கள் இரத்தத்தில் சர்க்கரை மற்றும் இன்சுலினின் அளவை அதிகரிக்கிறது. க்ளெசமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது உங்கள் மூளையின் செயல்திறனை பாதிக்கும். இதற்கு பதிலாக முழுதானியங்கள், காய்கறிகள் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

ஆல்கஹாலால் ஏற்படும் பக்கவிளைவுகள் எண்ணிலடங்காதவை. அதிகளவு மது குடிப்பது உங்கள் மூளையில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும். தொடர்ச்சியாக மது அருந்துவது உங்கள் உடலில் வளர்ச்சிதை மாற்றங்களை பாதிக்கும், மேலும் நரம்பியல்கடத்திகளின் செயல்பாடுகளை சீர்குலைக்கும். இந்த நரம்பியல் கடத்திகள்தான் உங்கள் மூளை மற்ற உடலுறுப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. மேலும் தொடர்ச்சியாக மது குடிப்பவர்களுக்கு வைட்டமின் பி1 குறைபாடு ஏற்படும். இதனால் மூளை தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்படலாம்.

சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள்

சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள்

சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களான செயற்கை பழச்சாறுகள், சோடா மற்றும் ஆற்றல் வழங்கும் குளிர்பானங்கள் உங்கள் மூலையில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பானங்கள் உங்கள் எடை அதிகரிப்பிற்கு மட்டும் காரணமாக இல்லாமல் மூளை தொடர்பான நோய்களான அல்சைமர், டிமென்ஷியா போன்ற பிரச்சினைள் ஏற்படவும் காரணமாகிறது. சர்க்கரை பானங்களில் உள்ள ப்ரெக்டொஸ் என்னும் பொருள் உடல் பருமன் மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனை அதிகமாக குடிக்கும்போது சர்க்கரை நோய் கூட ஏற்படலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகளவு சர்க்கரை, கொழுப்புகள் மற்றும் உப்பு உள்ளது. நீங்கள் கடைகளில் சாப்பிடும் துரித உணவுகள் அனைத்தும் இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை சேர்ந்தவைதான். இவற்றில் கலோரிகளின் எண்ணிக்கை மட்டும் அதிகமாக இல்லை ஊட்டச்சத்துக்களும் மிகக்குறைவாகவே உள்ளது. இவை எடை அதிகரிப்பிற்கு வழிவகுப்பதுடன் உங்கள் மூளை ஆரோக்கியத்தை தடுப்பதிலும் முக்கியபங்கு வகிக்கிறது.

MOST READ: உங்கள் பாதங்களை வைத்தே உங்க உடம்புல உள்ள 10 வகை நோயை கண்டுபிடிச்சிடலாம்... எப்படினு பாருங்க...

ஐஸ்க்ரீம்

ஐஸ்க்ரீம்

ஐஸ்க்ரீம் என்பது அனைவரும் விரும்பும் ஒரு பொருளாகும். இதன் குளிர்ச்சிக்காகவும், சுவைக்காகவும் இதனை விரும்பாதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். ஆனால் இது அதிக ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு கப் ஐஸ்க்ரீமில் 20 கிராம் நிறைவுற்ற கொழுப்புகளும், 19 கிராம் சர்க்கரையும் உள்ளது. ஆய்வுகளின் படி நிறைவுற்ற கொழுப்புகளும், சர்க்கரையும் அறிவாற்றல் மற்றும் நினைவகத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

வறுத்த உணவுகள்

வறுத்த உணவுகள்

உங்கள் மூளையை பாதிக்கும் உணவுகளில் மிகவும் முக்கியமான ஒரு பொருள் என்னவென்றால் வறுத்த உணவுகள், குறிப்பாக பிரெஞ்சு ப்ரைஸ் என்னும் உருளைக்கிழங்கு வறுவல். சமீபத்தில் நரம்பியல் துறையில் நடத்திய ஆய்வுகளின் படி அதிகளவு கொழுப்பு மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிடுவது அல்சைமர் நோய் ஏற்படும் வாய்ப்பை இருமடங்காக்குகிறது. மேலும் இதனால் உங்கள் மூளையின் செயல்திறன் பாதியாக குறையும்.

சில மாத்திரைகள்

சில மாத்திரைகள்

நீங்கள் சாப்பிடும் சில மாத்திரைகள் கூட உங்கள் மூளையின் செயல்திறனை பாதிக்கும். குறிப்பாக காப்பர் மற்றும் இரும்புசத்து மாத்திரைகள் சாப்பிடும்போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். இந்த மாத்திரைகளை உங்களை பரிசோதித்த பிறகு மருத்துவர்கள் பரிந்துரைத்த பின் மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த மாத்திரைகள் நன்மைகளை வழங்கினாலும், அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது அவை பீட்டா- அமிலாய்டில் பாதிப்பை ஏற்படுத்தும், இதனால் உங்கள் மூளையால் சில உறுப்புகளுடன் தொடர்பு கொள்ள இயலாது.

டிரான்ஸ் கொழுப்புள்ள உணவுகள்

டிரான்ஸ் கொழுப்புள்ள உணவுகள்

ட்ரான்ஸ் கொழுப்பு என்பது நிறைவுற கொழுப்புகளை சேர்ந்த உணவாகும். இது உங்கள் மூளையின் ஆரோக்யத்தின் மீது மோசமான விளைவுகளை உண்டாக்கும். அடைக்கப்பட்ட பிஸ்கட், கேக் போன்ற பொருட்களில் காணப்படும் இந்த நிறைவுறா கொழுப்புகள் உங்கள் நினைவாற்றல் மீது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். நிறைவுறா கொழுப்பு உள்ள உணவுகள் உங்கள் மூளையை மட்டுமின்றி உங்கள் இதயத்திலும் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

MOST READ: இந்த ராசிகளில் பிறந்த பெண்களை திருமணம் செய்துகொள்வது கொஞ்சம் ரிஸ்க்கான விஷயம்தான்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

list of foods which affect the brain function

The functioning of your lungs, heart, and limbs among others, are all dependent on the functioning of your brain.
Desktop Bottom Promotion