For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேகமாய் பரவி வரும் புதிய வகை எலி காய்ச்சல்..! இது தமிழகத்தை தாக்குமா..?

By Haripriya
|

பொதுவாக பல வகையான நோய்கள் எல்லா கால சூழல்களிலும் பரவ தொடங்கும். மழை காலங்களில் ஒரு சில வகையான நோய்கள் பரவுகிறதென்றால், வெயில் காலங்களில் வேறு சில வகையான நோய்கள் பரவுவது இயல்பான ஒன்றாக மாறி வருகிறது. ஒவ்வொரு நோய்க்கும் ஒரு வித தன்மை இருக்கும். சில நோய்கள் சாதாரண காய்ச்சலை தரும். சிலது எதிர்ப்பு சக்தியை முற்றிலுமாக குறைத்து உயிரை கூட எடுத்து விடும்.

Leptospirosis: Cause, Symptoms, Treatment, Prevention

அந்த வகையில் கேரளாவில் சில நாட்களுக்கு முன் வந்த வெள்ள பெருக்கின் தாக்கத்தால் தற்போது எலி காய்ச்சல் என்ற நோய் பரவி வருகிறது. இது எத்தகைய வகையான நோய், இதனை வராமல் தடுப்பது எப்படி, தமிழகத்திற்குள் இந்த நோய் வருமா... போன்ற எண்ணற்ற தகவல்களை பற்றி நாம் இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் நோய்கள் வருகிறது..?

ஏன் நோய்கள் வருகிறது..?

பெரும்பாலும் எந்த ஒரு நோயும் சாதாரண சூழலில் உருவாவது கிடையாது. எந்த ஒரு நோயாக இருந்தாலும் அவை இருக்கும் சூழலை பொருத்தே உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக நோய் கிருமிகள் தான் நோய்களை உருவாக்குகிறது. அவை பெரிதும் ஈரப்பதமான அசுத்தமான இடத்திலே பெருக கூடும். மேலும் அவற்றின் வளர்ச்சியும் இது போன்ற நிலைகளில் தான் அதிகரிக்கும்.

எலிக்காய்ச்சலா..?

எலிக்காய்ச்சலா..?

எலி காய்ச்சல் என்பது நாம் நினைப்பது போன்று சாதாரண காய்ச்சல் கிடையாது. இது சற்றே பயங்கரமான காய்ச்சல் என்றே ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பெரும்பாலும் எங்கெல்லாம் எலிகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் இந்த காய்ச்சல் பரவ தொடங்கும். இதனை ஆங்கிலத்தில் Leptospirosis என்று கூறுகின்றனர். இந்த எலி காய்ச்சல் Leptospira என்ற நுண்ணுயிர் கிருமிகளால் பரவுகிறது.

தற்போது எங்குள்ளது..?

தற்போது எங்குள்ளது..?

இந்த எலி காய்ச்சல் அசுத்தமான இடத்தில் உருவாக கூடியது. தற்போது கேரளாவில் வந்த வெள்ள பெருக்கினால், பல வித சுகாதார கேடுகள் அங்கு ஏற்பட்டுள்ளது. இதனால் டெங்கு, மலேரியா, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற பல வகையான நோய்கள் மக்களை தாக்க தொடங்கியுள்ளது. இதில் புதிதாக ஒரு நோயும் சேர்ந்துள்ளது. அதுதான் "எலி காய்ச்சல்". இது கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கி உள்ளதாம்.

எவ்வாறு இது பரவும்..?

எவ்வாறு இது பரவும்..?

எலிகள் இருக்கும் இடத்தில் இந்த எலி காய்ச்சல் உருவாகிறது. அசுத்தமான நீரில் Leptospira என்ற நோய் கிருமி இருக்கும். இவற்றை எலிகள் குடிக்கும் போதோ, அவற்றின் மேல் படும்போதோ இந்த நுண்ணுயிர் எலிகளின் மேல் ஒட்டி கொள்ளும். பின் இவற்றின் முடிகளோ, எச்சிலோ, கழிவுகளோ மனிதர்கள் பயன்படுத்தும் ஏதேனும் ஒன்றின் மேல் பட்டாலே Leptospira கிருமி மனிதர்களின் மேலும் பரவ தொடங்கும்.

மழை கால நோயா...?

மழை கால நோயா...?

அதிக படியான நோய் கிருமிகள் மழை காலங்களிலே உருவாகி, பரவுகிறது. தெருக்களில் நீர் தேங்கி இருந்தாலோ, அல்லது நம் வீட்டின் நீரில் எலிகளின் எச்சில், கழிவுகள் சிறிது அதில் கலந்தாலே, எலிக்காய்ச்சலை உருவாக்கி விடுமாம். மேலும், இவை ஒரு வகை கொடிய நோயாகவே கருதப்படுகிறது.

செருப்பு அணியுங்கள் நண்பர்களே..!

செருப்பு அணியுங்கள் நண்பர்களே..!

தெருக்களில் செருப்பில்லாமல் நடந்தால் அவை நோய்களை பரப்பும். எலிகளின் தொற்றுகள் இந்த நீரில் கலந்திருந்து, அவை நம் வெறுங்காலில் படும்போது எலிக்காய்ச்சல் வருவதற்கு வாய்ப்புண்டு. மேலும், பாதத்தில் ஏதேனும் காயங்களோ அல்லது சிறிய கீறல்களோ இருந்தால் இந்த கிருமிகள் அவற்றின் வழியே உடலில் ஊடுருவ செய்யும்.

அறிகுறிகள் என்னென்ன..?

அறிகுறிகள் என்னென்ன..?

எலி காய்ச்சல் உங்கள் உடலில் இருக்கிறதா, என்பதற்கான அறிகுறிகளை முதலில் நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.

- குளிர் கைவிகள்

- மோசமான தலைவலி

- வயிற்று வலி

- உடல் வலி

- வயிற்று போக்கு

- வாந்தி

- மயக்கம்

- எதை சாப்பிட்டாலும் குமட்டல்

மேற்சொன்ன அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவா..?

நோய் எதிர்ப்பு சக்தி குறைவா..?

உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை அதிகமாக இருப்பவரின் உடலில் எந்த வித பெரிய பாதிப்பும் ஏற்படாது. ஆனால், இவை குறைவாக இருந்தால் அவ்வளவுதான். இந்த எலி காய்ச்சலும் அப்படிதான். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், எலி காய்ச்சல் 2 நாட்கள் முதல் 25 நாட்களுக்குள் நோயின் தாக்கம் அதிகரிக்கும். பின், ஒவ்வொரு உறுப்பாக செயல் இழக்க செய்து, கடைசியில் உயிர் இழப்பு கூட நேரலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பாதிக்கும் தன்மை...

பாதிக்கும் தன்மை...

எலி காய்ச்சல் மற்ற காய்ச்சலை போன்று கிடையாது. இவை சற்றே வித்தியாசமானது. உங்களுக்கு காய்ச்சல் இருந்தால் அவற்றை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் அவ்வளவுதான். இது முதலில் மூளை, நுரையீரல், கல்லீரல் போன்ற உறுப்புகளை பாதிக்கும். அடுத்து, உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் ரத்த கசிவை ஏற்படுத்தும். இவ்வாறு ஒவ்வொரு தாக்குதலாக நடந்து, கடைசியில் மரணம் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளதாம்.

பரிசோதனை முறை என்ன..?

பரிசோதனை முறை என்ன..?

எந்த ஒரு நோயாக இருந்தாலும் அவற்றிற்கென சில பரிசோதனை முறைகள் இருக்கும். இதே போன்று, இந்த நோயை பரிசோதிக்க ஐ.ஜி.எம் எலிசா ரேபிட் டெஸ்ட்' (IgM ELISA Rapid Test), இணைய அணுக்கள் பரிசோதனை போன்றவை இவற்றை கண்டறிய உதவும். எந்த அளவு இதன் தாக்குதல் உடலில் ஏற்பட்டுள்ளது என்பதை பொருத்தே, சிகிச்சை அளிக்கப்படும்.

மனிதர்களிடம் இருந்து இவை பரவுமா...?

மனிதர்களிடம் இருந்து இவை பரவுமா...?

ஒரு சில வகையான நோய்களே மனிதர்களின் எச்சில், தொடுதல் மூலமாக, முடிகள் போன்றவற்றினால் பரவும். ஆனால், இந்த எலிக்காய்ச்சல் எலிகளிடம் இருந்து உருவாவதால் மனிதர்களின் மூலம் பரவாதாம். மேலும், சுகாதாரம் இல்லாதவர்களை இது எளிதில் தாக்க கூடும்.

எவ்வாறு தடுப்பது..?

எவ்வாறு தடுப்பது..?

- சுத்தம் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். நாம் இருக்கும் இடத்தையும், நம்மை சுற்றி இருக்கும் சூழலையும் சுத்தமாக வைத்து கொண்டாலே இது போன்ற நோய் கிருமிகளை உருவாக்காமல் தடுக்கலாம்.

- "உணவே மருந்து" என்பதுதான் இவற்றிற்கு சிறந்த தீர்வாகும். அதிக எதிர்ப்பு சக்தி தரும் உணவு பொருட்களை உண்டு வந்தால் இது போன்ற நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.

சுத்தம் சோறு போடும்..!

சுத்தம் சோறு போடும்..!

- சுத்தமான நீர், உணவு, சூழல் இவை இருந்தாலே எந்த ஒரு நோயயையும் எளிதில் தடுத்து விடலாம். மேலும் செருப்பில்லாமல் நடப்பதை தவிர்த்து விடுங்கள்.

- வளர்க்கும் செல்ல பிராணிகளையும் மிகவும் சுத்தமாக பார்த்து கொள்ளுங்கள். இல்லையேல், அவற்றிடம் இருந்தும் இது போன்ற நோய்கள் உருவாக தொடங்கும்.

தமிழகம் தப்பிக்குமா..?

தமிழகம் தப்பிக்குமா..?

இது போன்ற பல வகையான நோய் பாதிப்புகளை இதற்கு முன்பே தமிழகம் சந்தித்துள்ளது. ஆனால், பல உயிர் இழப்புகளும் இது போன்ற நோய்களால் ஏற்பட்டுள்ளது. இந்த எலி காய்ச்சலில் இருந்து தமிழகம் தப்பிக்க வேண்டும் என்றால் அது நம் ஒவ்வொருவரின் கைகளிலும் தான் இருக்கிறது. நம் வீட்டையும், நமது வீதிகளையும், நாம் இருக்கும் மொத்த சூழலையும் மிகவும் சுகாதாரமாக பாதுகாக்க வேண்டியது அவசியம் நண்பர்களே.

இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Leptospirosis: Cause, Symptoms, Treatment, Prevention

Leptospirosis is an infection caused by Leptospira. Signs and symptoms can range from none to mild such as headaches, muscle pains, and fevers; to severe with bleeding from the lungs or meningitis.
Desktop Bottom Promotion