Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
உங்களின் ஒவ்வொரு உணர்வும் ஒவ்வொரு உடலுறுப்பை பாதிக்கும் தெரியுமா?
நம் மனதில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் நம் உடல் உறுப்புகளில் எதிரொலிக்கும் என்பது நிரூபிக்கப்படாத அதேசமயம் அனைவரும் நம்பும் ஒரு நம்பிக்கையாகும்.
நம் உடலுக்கும் மனதிற்கும் உள்ள தொடர்பு என்பது மிகவும் அற்புதமானது. நம் மனதில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் நம் உடல் உறுப்புகளில் எதிரொலிக்கும் என்பது நிரூபிக்கப்படாத அதேசமயம் அனைவரும் நம்பும் ஒரு நம்பிக்கையாகும். நமது சமூகத்தில் நாம் தினமும் சந்திக்கும் நிலை இது சோகமாக இருந்தால் பசிக்காது, கோபமாக இருந்தால் தலைவலிக்கும் போன்ற வற்றை நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம்.

இது முழுவதும் உண்மை இல்லை என்றாலும் இதனை முற்றிலுமாக மறுக்கமுடியாது. ஏனெனில் ஆராய்ச்சியாளர்கள் நம் உணர்வுகளுக்கும், உடல் உறுப்புகளுக்கும் தொடர்பு உள்ளது உண்மை என்று கூறிவருகின்றனர். இந்த பதிவில் உங்களின் எந்த உணர்ச்சி எந்த உறுப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.

மனஅழுத்தம்
உங்கள் மனஅழுத்தம் அதிகரிக்கும்போது அது கார்டிசோல் என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. உங்கள் இதயத்துடிப்பு அதிகரிக்கும், உங்கள் நுரையீரலுக்கு ஆக்சிஜன் அதிகம் செல்லும், இரத்த ஓட்டம் அதிகரிக்கும், இதனால் உங்கள் நோய்தெர்ப்பு மண்டலம் தற்காலிகமாக செயல்படாது. தொடர்ந்து மனஅழுத்தம் நீடிக்கும் போது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் முற்றிலுமாக செயல்படுவதை நிறுத்திவிடும்.

கோபம்
கோபம் உங்களின் நுரையீரலுடன் தொடர்புடையது. கோபம் வரும்போது ஆற்றல் அதிகரிக்கிறது அதனால்தான் முகமும், கண்களும் சிவக்கிறது. இதனால் தலைவலி, மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கோபம் நுரையீரலின் ஆற்றலில் பாதிப்பை ஏற்படுத்தி பசியின்மை, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதேசமயம் கோபத்தை அடக்கி வைப்பது மனசோர்வு மற்றும் மாதவிடாய் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.

மகிழ்ச்சி
மகிழ்ச்சி என்னும் உணர்வானது இதயத்துடன் தொடர்புடையது. மகிழ்ச்சியாக இருப்பது ஆரோக்கிய கோளாறை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு குழப்பமாக இருக்கலாம். ஏனெனில் மக்கள் வாழும்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமோ அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென விரும்புவார்கள். இந்த உணர்வால் ஏற்படும் பிரச்சினைகள் மகிழ்ச்சியால் ஏற்படுவதில்லை, மாறாக உங்கள் உடலில் திடீரென ஏற்படும் உற்சாகம் மொத்த மண்டலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். மனஅழுத்தம் திடீரென அதிகரிப்பது, திடீரென குறைவது இரண்டுமே ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அதீத மகிழ்ச்சி ஆபத்தை உண்டாக்கும்
நெருங்கியவரின் மரணமும், பிரிவும் ஏற்படுத்தும் சோகம் எப்படி உங்கள் மனஅழுத்தத்தை அதிகரிக்குமோ அதேபோல பதவி உயர்வு, திருமணம் போன்றவற்றால் ஏற்படும் மகிழ்ச்சியும் மனஅழுத்தத்தை பாதிக்கும். ஒருவர் தொடர்ச்சியாக வெளியில் செல்வது, மகிழ்ச்சியாக இருப்பது என்று இருந்தால் அது அவர்களின் இதயத்தில் சமநிலையின்மையை ஏற்படுத்தும். இதனால் அதீத பதட்டம், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். தொடர்ச்சியாக இதயம் சமநிலையின்மையில் இருக்கும்போது அது மாரடைப்பை உண்டாக்கும் வாய்ப்புள்ளது.

கவலை
நாம் அதிகம் சந்திக்கும் ஒரு பொதுவான உணர்வு என்னவெனில் அது கவலைதான். இதனால் செரிமான பிரச்சினைகள் மற்றும் நாள்பட்ட சோர்வு ஏற்படலாம். அதிக கவலைப்படுபவர்கள் இந்த உலகத்தையே தங்கள் தோள்களில் சுமப்பது போல உணருவார்கள்.

மறதி
இந்த உணர்வு அதிகம் உள்ளவர்களுக்கு அதிக பசியின்மை ஏற்படும், மேலும் சாப்பிட்டவுடன் வயிற்றில் வீக்கம் ஏற்படுவது போல உணருவார்கள். இது தொடரும்போது உங்களுக்கு ஆற்றல் இழப்பு ஏற்படலாம். இதனால் இதய பாதிப்புகள் கூட ஏற்படலாம். இந்த பிரச்சினை பெரும்பாலும் மாணவர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

பயம்
பய உணர்வானது சிறுநீரத்துடன் தொடர்புடையது. கடுமையான பயம் ஏற்படும்போது உங்களுக்கு அதிக சிறுநீர் கழிக்கும் பழக்கம் ஏற்படும். குழதைகளுக்கு இந்த பிரச்சினை ஏற்படும்போது அவர்கள் படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிடுவார்கள். இதற்கு காரணம் அவர்களுக்கு ஏற்படும் பாதுகாப்பற்ற உணர்வு மற்றும் பதட்டம் ஆகும். தொடர்ந்து சிறுநீரகம் பாதிக்கப்படும்போது அது நிலையான பலவீனத்திற்கு வழிவகுக்கும்.

அதிர்ச்சி
அதிர்ச்சி என்னும் உணர்வு சிறுநீரகம் மற்றும் இதயத்துடன் தொடர்புடையது. இதனால் அட்ரினலின் ஹார்மோனின் உற்பத்தி அதிகரிப்பதால் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் இதயக்கோளாறுகள், பதட்டம், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம் . திடீரென ஏற்படும் அதிர்ச்சி உங்கள் ஒட்டுமொத்த உடலமைப்பையும் பாதிக்கும்.



Click it and Unblock the Notifications