Latest Updates
-
August 2026 Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
காரசாரமான பன்னீர் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
தலைமுடி வறண்டு பிரஷ் மாதிரி இருக்கா? அப்ப இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
ஆகஸ்ட் மாதம் நிகழும் ஆண்டின் 2-வது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்!
முன்கூட்டியே விந்து வெளியேறுவதைத் தடுப்பது எப்படி?
இங்கு முன்கூட்டியே விந்து வெளியேறுவதைத் தடுக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தற்போது பல ஆண்கள் சந்திக்கும் ஓர் பாலியல் பிரச்சனை தான் முன்கூட்டியே விந்து வெளியேறுவது. இப்பிரச்சனை உள்ள ஆண்கள் துணையுடன் உறவில் ஈடுபடும் போது, துணையை திருப்திப்படுத்த முடியாமல் மிகுந்த வேதனைக்கு உள்ளாவார்கள். நிறைய ஆண்கள் இந்த பிரச்சனையாலேயே மன அழுத்தத்தினால் கஷ்டப்படுவார்கள்.
முன்கூட்டியே விந்து வெளியேறுவது என்பது, உறவில் ஈடுபட்ட ஒரு நிமிடத்திற்கு முன்பே விந்து வெளியேறுவதாகும். இந்த பிரச்சனை ஒரு ஆணுக்கு இருந்தால், அது அந்த ஆணின் தன்னம்பிப்கையைக் குறைப்பதோடு, மனநல பிரச்சனைகளான பதற்றம் மற்றும் மன இறுக்கம் போன்றவற்றிற்கு உள்ளாக்கும். ஆராய்ச்சி ஒன்றில், குறைந்தது 29 சதவீத ஆண்கள் தங்கள் வாழ்வில் இப்பிரச்சனையால் கஷ்டப்படுவதாக தெரிய வந்துள்ளது.

சரி, முன்கூட்டியே விந்து வெளியேறுவதைத் தடுப்பது எப்படி என்று கேட்கலாம். இக்கட்டுரையில் முன்கூட்டியே விந்து வெளியேறுவதைத் தடுக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி, முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையில் இருந்து மீளுங்கள்.

அஸ்வகந்தா
அஸ்வகந்தா மருத்துவ குணம் நிறைந்த மூலிகைப் பொருள். ஆயுர்வேத மருத்துவத்தில் ஆண்களின் பாலியல் பிரச்சனைகளை சரிசெய்ய இந்த அஸ்வகந்தா தான் பயன்படுத்தப்படுகிறது. அஸ்வகந்தா ஆணுறுப்பின் வலிமையை அதிகரிப்பதோடு, உடலின் ஸ்டாமினாவையும் அதிகரிக்கும்.
* முதலில் 1/2 டீஸ்பூன் அஸ்வகந்தா பவுடரை எடுத்துக் கொள்ளுங்கள்.
* பின் 1 டம்ளர் வெதுவெதுப்பான ஆட்டுப் பாலில், அந்த பவுடரைப் போட்டு கலந்து கொள்ளுங்கள்.
* இந்த பாலை தினமும் 2 முறை குடியுங்கள்.
குறிப்பு: மாட்டுப் பாலை விட ஆட்டுப் பால் தான் மிகச்சிறந்த பலனைத் தரும்.

குங்குமப்பூ மற்றும் பாதாம்
குங்குமப்பூவில் பாலுணர்ச்சியைத் தூண்டும் பண்புகள் நிறைந்துள்ளது என்பது தெரியுமா? பாதாமில் உள்ள செலினியம், ஜிங்க், வைட்டமின் ஈ போன்ற முக்கிய சத்துக்கள், பாலியல் ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்க மண்டத்திற்கு அவசியமானதாகும். செலினியம் என்னும் அத்தியாவசியமான கனிமச்சத்து கருவள பிரச்சனைகளைப் போக்கும் மற்றும் ஜிங்க் என்னும் சத்து, ஆண் செக்ஸ் ஹார்மோன்களின் உற்பத்திக்கு உதவி, பாலுணர்ச்சியை மேம்படுத்தும்.
* பிளெண்டரில் 10 பாதாம் மற்றும் 1 கப் பால், 1 சிட்டிகை இஞ்சி பொடி, ஏலக்காய் பொடி மற்றும் குங்குமப்பூ போன்றவற்றில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
* இந்த பானத்தை தினமும் இரவில் படுக்கும் முன் குடியுங்கள்.

இஞ்சி மற்றும் தேன்
இஞ்சி மற்றும் தேன் கலவையும் முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனைக்கு தீர்வளிக்கும். இதில் உள்ள இஞ்சி ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, விந்து வெளியேறுவதைக் கட்டுப்படுத்த உதவி புரியும். மறுபுறம் தேன், பாலுணர்ச்சியை வலிமையாக வைத்துக் கொள்ளும். எனவே தினமும் இரவில் படுக்கும் முன் 1/2 டீஸ்பூன் இஞ்சி சாறு மற்றும் 1/2 டீஸ்பூன் தேனை ஒன்றாக கலந்து உட்கொள்ளுங்கள்.

பூண்டு
முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையில் இருந்து மீள்வது எப்படி? இதற்கு பூண்டு பெரிதும் உதவியாக இருக்கும். இது ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, உடலில் வெப்பத்தையும் அதிகரிக்க உதவும்.
* ஒரு வாணலியில் சுத்தமான நெய் ஊற்றி, சிறிது பூண்டு பற்களை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதை தினமும் உட்கொள்ள வேண்டும்.
* இப்படி தினமும் 3-4 பற்கள் சாப்பிட்டு வந்தால், முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையைக் குறைக்கலாம்.

வெங்காய விதைகள்
வெங்காய விதைகள் முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையைத் தடுக்கும் மற்றொரு வழியாகும். வெங்காய விதைகளில் இருக்கும் பாலியல் பண்புகள், பாலியல் பிரச்சனைகளைத் தடுக்க உதவும். பொதுவாக வெங்காயத்தை சாப்பிட்டாலே, அது உடலின் பாலியல் ஸ்டாமினாவை மேம்படுத்துவதோடு, விரைவில் விந்து வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும்.
* வெங்காய விதைகளை நன்கு தட்டி, நீரில் போட்டு கலந்து கொள்ளுங்கள்.
* பின் இதை தினமும் மூன்று வேளையும் உணவு உண்பதற்கு முன் குடியுங்கள்.

வெண்டைக்காய் மற்றும் பனங்கற்கண்டு
வெண்டைக்காய் முன்கூட்டியே விந்து வெளியேறுவதை சரிசெய்யும். ஏனெனில் இதில் குறிப்பிட்ட சக்தி வாய்ந்த பண்புகள் உள்ளன. ஆகவே இப்பிரச்சனை இருந்தால், 10 கிராம் வெண்டைக்காய் வேர் பொடியை 1 டம்ளர் பாலில் போட்டு கலந்து, அத்துடன் 2 டீஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலந்து தினமும் குடியுங்கள்.

கேரட், முட்டை மற்றும் தேன்
முட்டை, கேரட் மற்றும் தேன் என்னும் மூன்று பொருட்களும் முன்கூட்டியே விந்து வெளியேறுவதைத் தடுக்கும். அதில் தேன் பாலுணர்ச்சியைத் தூண்டும் உணவுப் பொருள், கேரட் உடலுறவின் போது இனப்பெருக்க உறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால் முன்கூட்டியே விந்து வெளியேறுவது குறையும். முட்டையின் மஞ்சள் கரு ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை மேம்படுத்தும்.
* முட்டையை வேக வைத்து, அதன் மேல் கேரட்டைத் துருவித் தூவுங்கள்.
* பின் அதன் மேல் 3 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து, தினமும் உட்கொள்ளுங்கள்.
* இப்படி மூன்று மாதம் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், முன்கூட்டியே விந்து வெளியேறுவது குறையும்.

அஸ்பாரகஸ்
அஸ்பாரகஸ் வேரில் பாலுணர்ச்சி பண்புகள் உள்ளதால், இது ஆண்கள் சந்திக்கும் முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையைக் குறைக்க உதவும். அஸ்பாரகஸில் உள்ள ஃபோலேட், பி வைட்டமின்கள், பாலுணர்ச்சி தூண்டுதலுக்குத் தேவையான ஹிஸ்டமைன் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.
* 3-4 டேபிள் ஸ்பூன் அஸ்பாரகஸ் பவுடரை ஒரு டம்ளர் பாலில் கலந்து கொள்ள வேண்டும்.
* இந்த பானத்தை தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், உடல் வலிமை அதிகரிப்பதோடு, முன்கூட்டியே விந்து வெளியேறுவது தடுக்கப்படும்.



Click it and Unblock the Notifications