Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
உங்களின் காதலி (அ) மனைவிக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் நீங்கள் இதைதான் முதலில் செய்ய வேண்டும்...!
இன்று பலருக்கும் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல பிரச்சினைகளும் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதை சரி செய்வதற்கு என்னென்னமோ செய்கிறோம். ஆனால், இவற்றை காட்டிலும் சில முக்கியமான விஷயங்கள் எப்போதும் தேவைப்படுகிறது. பலருக்கு இதனை இந்த சூழலை கையாள தெரியாமல் சோக வாழ்வில் மூழ்கியும் உள்ளனர்.

பொதுவாக நமது அன்பிற்குரிய காதலியோ அல்லது மனைவியோ உடல் சார்ந்தோ அல்லது உளவியல் சார்ந்தோ ஏதேனும் பிரச்சினைகளை கொண்டிருந்தால் அதை நாம் அணுகும் முறையிலே பாதி நோயை நாம் குணப்படுத்தி விடலாம். எவ்வாறு என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம் நண்பர்களே...

அன்பே அழியாத ஆயுதம்..!
பலருக்கு இது எதோ விளையாட்டாக இருக்கலாம். ஆனால், உண்மையில் அன்பை கொண்டு நோயிற்கான மருந்தை நம்மால் கொடுக்க முடியும் என்பதே உண்மை. உங்களின் அன்பிற்குரியவர்கள் மன உளைச்சலால் இருந்தால் மாத்திரைகளை விட உங்களின் அன்பு வார்த்தைகள் முதன்மையான வலிமை கொண்டது என மனோ தத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

எது கொடியது..?
ஒரு சிலருக்கு உடல் அளவில் நோய்கள் இருக்க கூடும். வேறு சிலருக்கு உளவியல் ரீதியான பிரச்சினை அதிகமாக இருக்க கூடும். பொதுவாக உடல் அளவிலான பிரச்சினைகளை காட்டிலும் உளவியல் சார்ந்த கோளாறுகள் அதிக ஆற்றல் பெற்றது. உளவியல் கோளாறுகள் ஒருவரின் உயிரையே பறித்து விட கூடும்.

நம்பிக்கை கொடுங்கள்..!
உங்களின் காதலி மன உளைச்சலால் அவதிப்பட்டால் நீங்கள் முதன்முதலில் அவர்களுக்கு கொடுக்க வேண்டியது நம்பிக்கை தான். " எந்த சூழலிலும், எது நடந்தாலும் நான் உன் கூடவே இருந்து, உனக்கு மிக பெரிய உறுதுணையாக இருப்பேன்" என்ற நம்பிக்கை வார்த்தைகளை அடிக்கடி சொல்ல வேண்டும்.

எடுத்து சொல்லுங்கள்..!
உடல் வியாதியோ அல்லது மன வியாதியோ, எதுவாக இருந்தாலும் அதனை பற்றிய புரிதலை முதலில் அவர்களுக்கு கொடுங்கள். மருத்துவர் செய்யும் மருத்துவத்தை விட நீங்கள் அவர்களுக்கு இந்த பிரச்சினையை பற்றி தெளிவாக ஆறுதலுடன் எடுத்து சொல்ல வேண்டும். இது ஒரு சாதாரண நோய் தான், எளிதில் குணப்படுத்தி விடலாம் என்கிற நம்பிக்கையை அவர்களின் மனதில் விதைக்க வேண்டும்.

தவறாதீர்கள்..!
உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு கொடுக்கும் மாத்திரைகளை தவறாது கொடுத்து வாருங்கள். சரியான நேரத்தில் உணவை சாப்பிட சொல்லுங்கள். மாதம் ஒரு முறை அல்லது வாரம் ஒரு முறை மருத்துவரின் பரிசோதிக்க அழைத்து செல்லுங்கள். சீரான மருத்துவ முறை உங்கள் இணையை நிச்சயம் அந்த நோயின் பிடியில் இருந்து காப்பாற்றி விடும்.

வாக்கு வாதம் வேண்டாமே..!
ஏற்கனவே பிரச்சினையில் உங்கள் அன்பிற்குரியவர்கள் இருக்கும் போது அவர்களுடன் வாக்கு வாதமோ, சண்டையோ போடுவதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில், இது மேலும் அவர்களுக்கு அதிக காயத்தையும், தவறான எண்ணத்தையும் உங்கள் மீது வரவழைத்து விடும்.

மனசு விட்டு பேச சொல்லுங்கள்..!
எதுவாக இருந்தாலும் மனசு விட்டு உங்களிடம் எல்லாவற்றையும் வெளிப்படையாக பேச சொல்லுங்கள். "அது எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் நான் பார்த்து கொள்கிறேன்" என்ற வார்த்தையை கண்டிப்பாக பயன்படுத்துங்கள். அவர்கள் நினைப்பது உங்களுக்கு புரிந்தால் மட்டுமே உங்களால் அடுத்த படியை எடுத்து வைக்க முடியும். இல்லையெனில் எது செய்தாலும் தவறாகவே செல்லும்.

பட்சாதாபம் வேண்டாமே..!
நோயினால் அவதிப்படும் உங்களின் அன்பிற்குரியவர்கள் முன் யாரையும் பாவமாக பேசும் படி வைத்து கொள்ளாதீர்கள். நீங்களும் எப்போதும் பரிதாபம்' காட்டுவது போன்று நடந்து கொள்ளாதீர்கள். உங்களின் அன்பும் அரவணைப்பும் மட்டுமே அவர்களுக்கு இப்போது தேவைப்படுகின்ற ஒன்றாகும்.

ஊக்கமளியுங்கள்..!
இதை போன்ற நோய்கள் கொண்டோர் இங்கு அதிக பேர் உள்ளனர். இதனை எளிதில் கடந்து விடலாம் என்கிற பேச்சுக்களை எப்போதும் ஊக்கமாக கொடுங்கள். மேலும், இது போன்ற நோய்களில் இருந்து நிஜ வாழ்க்கையில் கடந்து வந்த பலரின் வாழ்க்கை வரலாற்றையும், சாதனைகளையும் எடுத்து சொல்லலாம்.

மோசமான நிலையா..?
உங்களின் அன்பிற்குரியர்கள் மிக மோசமான நிலையில் இருந்தாலும் உங்களின் நம்பிக்கையையும், அவர்களின் நம்பிக்கையையும் இழக்கமும் படி இருக்காதீர்கள். உங்களின் ஒவ்வொரு பாசிட்டிவ் எண்ணங்களும் அவரை இன்னும் அதிக காலம் வாழ வைக்கும்.

உங்களை மறந்து விடாதீர்கள்..!
நோய் வாய்பட்டு இருக்கும் உங்கள் அன்பிற்குரியவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உங்களை ஆரோக்கியமாக வைத்து கொள்ளாமல் இருந்து விடாதீர்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே அவரை விரைவில் காப்பாற்ற முடியும். எனவே, நம்பிக்கையுடனும், உறுதியுடனும் உங்கள் அன்பிற்குரியவர்களை பார்த்து கொள்ளுங்கள். வெற்றி உங்களுக்கே..!



Click it and Unblock the Notifications