நெஞ்சில் ஏற்படுகிற அசிடிட்டி வலியை தீர்க்க எளிய வழி!

Posted By:
Subscribe to Boldsky

அஜீரணம் மிகவும் சாதரண பிரச்சனை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவை தான் நமக்கு பலநேரங்களில் தொல்லை கொடுக்கும் பிரச்சனையாக இருக்கிறது. மார்பு வலி ஏற்படும் போது சில நேரங்களில் இவை அஜீரணத்தால் உண்டாகும் வலியென்று நினைத்துக் கொள்வதால் உடனடி சிகிச்சை எடுத்துக் கொள்ளாது இருந்து விடுகிறோம்.

வயிற்றில் ஏற்படுகிற கேஸ் பிரச்சனையை விட மார்பில் உண்டாகும் வலி சற்று சிக்கலானது என்பதால் அவை குறித்த விரிவான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ள்து. தொடர்ந்து தெரிந்து செயல்படுங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கார்போஹைட்ரேட் உணவுகள் :

கார்போஹைட்ரேட் உணவுகள் :

பொதுவாக கார்போஹைட்ரேட் உணவுகள் செரிமானம் ஆகாத போது அதிலிருந்து உண்டாகும் பாக்டீரியாவினால் கேஸ் பிரச்சனை உண்டாகும்.இதைத் தவிர செரிமானத்திற்கு நீண்ட நேரம் பிடிக்கும் உணவுகள் கூட இதில் அடங்கும். அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்வதால் செரிமானக்கோளாறு இருப்பவர்கள் அதனைத் தவிர்ப்பது நல்லது.

ஃபைபர் உணவுகள் :

ஃபைபர் உணவுகள் :

ஃபைபர் உணவுகள் மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது. ஆம், அவற்றில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் இந்த ஃபைபர் உணவுகள் டாக்சின்களை

நீக்க உதவிடுகிறது.

ரத்தச்சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் அளவு ஆகியவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும். நீண்ட நேரம் பசியெடுக்காமல் பார்த்துக் கொள்ளும் என்பதால் சில நேரங்களில் வயிற்றில் கேஸ் உற்பத்திக்கும் காரணமாகிடும்.

கவனம் :

கவனம் :

கேஸ் பிரச்சனையை சீரியசாக எடுத்துக் கொண்டு பயப்பட அவசியமில்லை என்றாலும் சில நேரங்களில் இவை மாரடைப்பு வலியுடன் தொடர்புபடுத்தி பார்க்கப்படுவதில் கேஸ் பிரச்சனைக்கும் மார்புவலிக்கும் இடையில் இருக்கிற சில வேறுபாடுகளை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

மார்பு வலி மட்டுமின்றி அப்பண்டிக்ஸ், கிட்னி கற்கள் போன்றவற்றையும் சரியாக அவதானிப்பதில்லை. வயிற்று வலி, அல்லது கேஸ் பிரச்சனை குறிப்பாக மார்பில் கடுமையான வலி ஏறப்பட்டால் நீங்கள் செய்ய வேண்டியவை என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

கீழே படுத்திடுங்கள் :

கீழே படுத்திடுங்கள் :

மார்பு பகுதியில் ஏதேனும் கடுமையான வலி ஏற்பட்டால்,அவை எதற்கான வலி என்று அவதானிக்க முடியவில்லை என்றால் கீழே சரிசமமான தரையில் படுத்துக் கொள்ளுங்கள்.

உடல் ஒரே மட்டத்தில் இருக்க வேண்டும். நேராக படுத்துக் கொண்டு தலையை மட்டும் சற்று உயர்த்தி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். கடுமையான வலியிருந்தால் சட்டென குறையும்.

Image Courtesy

தண்ணீர் :

தண்ணீர் :

பொதுவாக சரியான ஜீரணமாகாத உணவுகளினால் செரிமானக்கோளாறு ஏற்படுகிறது. அவற்றின் அறிகுறியாகத்தான் இந்த கேஸ் பிரச்சனை இருக்கிறது. இதனைத் தவிர்க்க திட உணவுகளைத் தவிர்த்து அதிகப்படியான தண்ணீரை அல்லது திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

இதனால் உணவு விரைந்து செரிமானமாவதுடன் மார்பு பகுதியில் சேர்ந்திருக்கும் கேஸ் விரைவில் வெளியாக உதவிடும்.

கார்பனேட்டட் டிரிங்க்ஸ் :

கார்பனேட்டட் டிரிங்க்ஸ் :

இங்கே பலரும் செய்கிற தவறுகளில் இதுவும் ஒன்று. செரிமாணக்கோளாறு இருந்தாலே உடனடியாக கேஸ் நிறைந்த கார்பனேட்டட் டிரிங்,சோடா ஆகியவற்றை குடிக்கிறார்கள்.

இதனால் உங்களுக்கு மார்பு வலி அதிகரிக்கவே செய்யும். இவற்றை தவிர்ப்பது நல்லது.

பொசிசன் :

பொசிசன் :

நீங்கள் நீண்ட நேரம் உட்காரும் பொசிசன் அல்லது தூங்கும் பொசிசன் கூட மார்பில் வலி அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்திடும். சரிசமமான தரையில் அமர்ந்து முட்டியை வயிற்றை அழுத்துமாறு உட்காருங்கள். அல்லது கால் முட்டிகளுக்கு இடையில் தலையை வைத்திடுங்கள்.

அப்படி உட்கார முடியவில்லையெனில் எதாவது ஒரு பக்கம் திரும்ப படுத்துக் கொள்ளுங்கள்.

சமையலில் :

சமையலில் :

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களில் எல்லாம் கேஸ் பிரச்சனையை தீர்க்கக்கூடும். சீரகம்,இஞ்சி,மஞ்சள்,ஏலக்காய் ஆகியவை பயன்படுத்தி கேஸ் பிரச்சனையை தீர்க்கலாம். இவை செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகிறது.

சூடான பானங்கள் :

சூடான பானங்கள் :

மற்றதை விட சூடான பானங்கள் கேஸ் பிரச்சனையை எளிதாக தீர்க்கிறது.சூடான காபி மற்றும் டீ போன்ற பானங்களை குடிக்கலாம். அதற்காக இதனை அடிக்கடி குடிக்க வேண்டாம்.

இதைத் தவிர சூடான சூப் கூட குடிக்கலாம். இது உணவை செரிக்க வைக்க உதவுவதுடன் கேஸ் பிரச்சனையையும் தீர்த்திடும்.

மூச்சுப் பயிற்சி :

மூச்சுப் பயிற்சி :

ஆம், மூச்சுப் பயிற்சி மூலமாக கூட கேஸ் பிரச்சனையை தவிர்க்க முடியும். முதுகை தரையில் படுமாறு நேராக படுத்துக் கொள்ளுங்கள். கால் முட்டியை இறுக்கமாக பிடித்துக் கொண்டு வயிற்றினை அழுத்திக் கொண்டே மூச்சை இழுங்கள், காலை நகர்த்திக் கொண்டே மூச்சை விடுங்கள்.

அமைதியாக முழு மூச்சையும் இழுத்து அதனை விட வேண்டும். இப்படி சில நிமிடங்கள் தொடர வேண்டும்.

பப்பாளிப்பழம் :

பப்பாளிப்பழம் :

அசிடிட்டி பிரச்சனை அதிகமிருப்பதாக நீங்கள் உணர்ந்தால் உணவு எடுத்துக் கொள்வதை குறைத்துக் கொள்ளுங்கள். ஏற்கனவே சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாமல் இருக்கும் போது மேலும் மேலும் உணவு சாப்பிடுவதால் சிக்கலையே ஏற்படுத்தும்.

அதோடு சில பழங்கள் கூட அஜீரணத்தை சரியாக்கிடும். மார்பில் ஏற்படுகிற வலி அஜீரணத்தின் வலி என்று நீங்கள் உணர்ந்தால் அதனை போக்க ஒரு கப் பப்பாளிப்பழம் சாப்பிடலாம்

இஞ்சி :

இஞ்சி :

பொதுவாகவே இஞ்சி செரிமானக்கோளாறுகளை சரி செய்யும் என்று பார்த்திருக்கிறோம். இங்கே இஞ்சி டீ தயாரித்து குடித்திடுங்கள். இது செரிமானக் கோளாறை சரி செய்வதுடன் சாப்பிட்ட உணவை செரிக்க வைத்திடும்.

இதைத் தவிர சூடான நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து குடிக்கலாம்.

உடல் உழைப்பு :

உடல் உழைப்பு :

உடல் உழைப்பு ஏதும் இல்லாதது கூட மார்பு பகுதியில் கேஸ் சேர காரணமாகிடும் என்பதால் தொடர்ந்து நீண்ட நேரமாக ஒரேயிடத்தில் உட்கார்ந்திருக்காமல் வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய பயிற்சிகளை முயற்சி செய்திடுங்கள்.

தினமும் நடைப்பயிற்சிக்கு செல்லுங்கள். உடல் ஆரோக்கியத்திற்கு பிசிக்கல் ஆக்டிவிட்டி என்பது மிகவும் முக்கியமானதாகும்.

உணவில் கவனம் :

உணவில் கவனம் :

உங்களுக்கு அடிக்கடி இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது என்றால் எந்த உணவு சாப்பிடும் போதெல்லாம் இப்படியான அஜீரணக் கோளாறு ஏற்படுகிறது என்று பாருங்கள்.

பொதுவாக இது போன்ற செரிமானக்கோளாறுகள் குளூட்டான் நிறைந்த உணவுகள் உட்கொள்வதாலோ அல்லது பால் மற்றும் பால்சார்ந்த பொருட்களை எடுத்துக் கொள்வதாலோ ஏற்படுவதுண்டு.

சரியான காரணத்தை கண்டுபிடித்து அந்த குறிப்பிட்ட உணவு எடுத்துக் கொள்வதை தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies for gas pain in Chest

Home Remedies for gas pain in Chest
Story first published: Thursday, January 11, 2018, 16:46 [IST]