For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கைரேகை பார்க்கும்போது ஆணுக்கு வலது கையும் பெண்ணுக்கு இடது கையும் ஏன் பார்க்கறாங்க தெரியுமா?

பெண்கள் மூக்குத்தி அணிவதில் மறைந்திருக்கின்ற ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே விளக்கமாகக் காணலாம்.

|

மூக்கு குத்துவது, காது குத்துவது போன்றவை உடலில் உள்ள தேவையில்லாத வாயுக்களை வெளியேற்றுவதற்கு தான். பொதுவாக ஆண்களின் உடலில் வலப்புறமும் பெண்கிளன் உடலில் இடப்புறமும் தான் வலுவான பகுதிகள். அதனால் தான் கை ரேகை பார்க்கும்பொழுது கூட, ஆண்களுக்கு வலது உள்ளங்கையிலும் பெண்களுக்கு இடது உள்ளங்கையிலும் பார்க்கிறார்கள்.

hidden health benefits of nose rings

அதேபோல ஞான ரிஷிகள் தியானம் செய்கின்ற பொழுது வலது காலை மடக்கி இடது தொடையின் மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்குக் காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்ய ஆரம்பித்தால் சுவாசம் வலது மூக்கின் வழியாக வெளியேற ஆரம்பிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வலது

வலது

வலது என்றால் தமிழில் வெற்றி என்பது பொருள். வலது பக்கமாகச் சுவாசம் செல்லுகின்ற பொழுது, தியானம் மற்றும் பிரார்த்தனைகள் வெற்றியைக் கொடுக்கும். கண்டிப்பாக பலன் தரும். அதனால் நம்முடைய நாடியை அடக்க வேண்டுமென்றால் சுவாசத்தை வலது பக்கத்திற்கு மாற்ற வேண்டும். இதே முறையைப் பின்பற்றும் ஒரு விஷயம் தான் பெண்கள் அணிகின்ற மூக்குத்தி.

மூளை

மூளை

நம்முடைய மூளையில் ஹைப்போதாளமஸ் என்ற பகுதி ஒன்று இருக்கிறது. நம்முடைய நரம்பு மண்டலங்களைக் கட்டுப்படுத்தக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்த பகுதிகளில் சின்ன சின்ன உணர்ச்சிப் பிரவாகங்கள் இருக்கின்றன. இந்த பகுதிகளைச் செயல்படுத்துவதற்கு இந்த ஹைப்போதாலமஸ் துணையாக இருக்கிறது.

காதலனையே வெட்டி கூறுபோட்டு பிரியாணி சமைத்து பரிமாறிய கொடூரம்... இப்படியுமா நடக்கும்?

மூக்குத்தி

மூக்குத்தி

சுவாசத்தை வலது பக்கத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். இதே முறையைப் பின்பற்றும் ஒரு விஷயம் தான் பெண்கள் அணிகின்ற மூக்குத்தி. இந்த ஹைப்போதாலமஸ் பகுதியை அதிகமாகச் செயல்படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் மூக்குத்தி வலது பக்க மூளையை நன்றாகச் செயல்பட வைக்கும். இடது பக்கத்தில் மூளை அடைப்பு என்றால் வலது புறத்தில் நன்கு சிறப்பாக வேலை செய்யும். அதுவே வலது ப்ககம் அடைத்தால் இடது பக்க மூளை அதிகமாக இயங்கும்.

எது பலம்?

எது பலம்?

நம்முடைய மனித வாழ்க்கை முறைக்கு அதிகமாக இடது பக்க மூளையை அடைத்து வலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே இடது கை, கால்களை விடவும் பலமாக உள்ளது.

காலையில சரியா சாப்பிடற பழக்கமே இல்லையா? அப்போ உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்குமே?

நெற்றிப்பகுதி

நெற்றிப்பகுதி

பெண்கள் மூக்குத்தி அணிகின்ற பொழுது, நெற்றிப்பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போன்று சின்ன சின்ன நரம்புகள் நாசி துவாரங்களில் இறங்கி, கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும் சிறிய ஜவ்வு போன்று மெல்லிய துவாரங்களாக இருக்கும்.

கெட்ட வாயுக்கள்

கெட்ட வாயுக்கள்

ஆலம் விழுது போல் சிறு நம்புத் தொடர்களைக் கொண்டிருக்கிற இந்த மூக்குப் பகுதியில் ஒரு சிறு துவாரத்தை ஏற்படுத்தி, அந்த துவாரத்திற்குள் தங்க மூக்குத்தி அணிந்து கொண்டால், அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தைக் கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமின்றி, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன்மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயுவானது அகலும்.

பிரியாணி இலைல டீ போட்டு குடிச்சா ஒரே வாரத்துல 8 முதல் 10 கிலோ குறையுதாம்.. எப்படி செய்யறது?

சிறுமிகள்

சிறுமிகள்

சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுக்குத் தான் மூக்குத்தி அணிவிக்கப்படுகிறது. பருவம் எய்திய பெண்களுக்குக் கபால பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சில விதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டுவருவதற்கு ஏற்படுத்தப்பட்டது தான் இந்த மூக்குத்தி குத்தும் மரபு.

உடல் நோய்கள் தீர

உடல் நோய்கள் தீர

மூக்கு குத்துவதன் மூலம் பெண்களுக்கு ஏற்படக் கூடிய சளித் தொல்லை, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள் ஆகியவை சரிசெய்யப்படுகின்றன. இன்றைக்கு நாகரீகம் வளர்ந்து விட்ட காரணத்தினால் சில பெண்கள் வலதுப்பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனா்ல சரியான சாஸ்திர ரீதியாக இடது பக்கம் தான் பெண்கள் மூக்குத்தி அணிய வேண்டும்.

மரண ரகசியம் பற்றி எமனே தன்வாயால் என்ன சொல்லிருக்காரு தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க...

இடதுபுறம் குத்துதல்

இடதுபுறம் குத்துதல்

சாஸ்திர முறைப்படி இடது பக்கம் தான் பெண்கள் மூக்குத்தி அணிய வேண்டும். இடது பக்கம் குத்துவதினால் சில மாற்றங்கள் உண்டாகும். உங்களுடைய சிந்தனை ஆற்றலை ஒருமுகப்படுத்தும். மனதை அமைதிப்படுத்தும். தியானம் மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுபட உதவுகின்றது.

மனத் தடுமாற்றம் ஏற்படாமல் இருக்கும் என்று ஞானிகளும் ரிஷிகளும் குறிப்பிட்டுள்ளனர்.

தங்கத்தின் ஆற்றல்

தங்கத்தின் ஆற்றல்

நம்முடைய உடலில் உள்ள வெப்பத்தைக் கிரகித்துக் கொண்டு, நீண்ட நேரம் தங்களுக்குள்ளே வைத்திருக்கக் கூடிய ஆற்றல் தங்கத்திற்கு உண்டு.

தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் நம்முடைய உடலில் ஏற்படுகின்ற அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதில் இருந்து தடைபட்டுக் கொண்டே போகும்.

உணர்ச்சிவசப் படுதல் தடுக்கப்பட்டு உடல் வெப்பம் சமநிலை அடைவதால் நெறி பிறழாமல் கட்டுப்படுத்தப்படும் என்கின்றனர் பெரியோர்கள்.

எந்தெந்த பூக்களை எவ்வளவு நேரம் தலையில் வைத்திருக்க வேண்டும்? அதற்குமேல் வைத்தால் என்னவாகும்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

hidden health benefits of nose rings

here we are giving some intresting hidden health benefits about wearing nose rings.
Story first published: Friday, November 23, 2018, 18:20 [IST]
Desktop Bottom Promotion