For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அந்த இடத்தில் உண்டாகும் அரிப்பை போக்கும் மூலிகை

நாம் சாப்பிடும் உணவில் நமக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் கருணைக்கிழங்கு, கத்தரிக்காய் போன்ற சில காய்கறிகளை, மீன், முட்டை போன்ற அசைவ உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும். சிலருக்கு எதனால் பாதிப்பு ஏற்பட்டது என்பதே

By Gnaana
|

முக்கியமான விவாதங்களில் பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென ஏற்படும் அரிப்பால், கைகளை மறைமுக இடங்களில் வைத்து, சொறியும்போது என்னவாகும்? மரியாதைக்குரிய ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, தாங்கமுடியாத அரிப்பு ஏற்பட்டு, தொடை இடுக்கு அல்லது அந்தரங்கப் பகுதிகளில் சொறியும்போது, நம் மதிப்பு அங்கே சரிந்துவிடும்.

herbals

இதுபோன்று, பல இடங்களில் நம்மை தர்ம சங்கடப்படுத்திவிடும் பாதிப்புதான், இந்த அரிப்பும், சொறியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எதனால் ஏற்படுகிறது, அரிப்பு?

எதனால் ஏற்படுகிறது, அரிப்பு?

உடலில் அரிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன, நாம் உறங்கும்போதோ, வயல்வெளிகளில் நடமாடும்போதோ விஷப்பூச்சிகள் கடிப்பதாலோ அல்லது நம்மீது படுவதாலோ ஏற்படுபவை. நாம் சாப்பிடும் உணவில் நமக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் கருணைக்கிழங்கு, கத்தரிக்காய் போன்ற சில காய்கறிகளை, மீன், முட்டை போன்ற அசைவ உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும். சிலருக்கு எதனால் பாதிப்பு ஏற்பட்டது என்பதே தெரியாமல்,. உடல் எங்கும் சிவந்து வீங்கிவிடும் இதுவும் ஒவ்வாமை பாதிப்பே.

காரணம்

காரணம்

சிலர் உடலை நன்கு தேய்த்துக் குளிக்காமல், அழுக்கு தேங்கி அதனால், பூஞ்சை ஏற்பட்டு, உடலில் தடிப்பு வரலாம். அந்தரங்க பகுதிகளை, சுத்தமாக வைத்திருக்காத பலருக்கும், இது போன்ற அரிப்பு ஏற்படும். விஷப்பூச்சிகள் கடிப்பதால், தோலில் ஏற்படும் தடிப்பில் கிருமிகளின் பரவல் காரணமாக, அரிப்பு ஏற்படும், அரிப்பைப்போக்க அனிச்சையாக சொறியும்போது, தடிப்பில் இருந்து விஷ நீர், வேறு இடங்களுக்கும் பரவுகிறது. மேலும், அழுத்தி சொறிவதால் காயம் ஏற்பட்டு, தடிப்பு புண்ணாக மாறிவிடுகிறது. அரிப்பை உடனே குணப்படுத்தாவிட்டால், அது சருமவியாதியாக மாறி, கடுமையான பாதிப்புகளை உண்டாக்கிவிடும்.

ஆண், பெண் மறைவிடங்களில் ஏன் அரிப்பு ஏற்படுகிறது?

ஆண், பெண் மறைவிடங்களில் ஏன் அரிப்பு ஏற்படுகிறது?

குளிக்கும்போது, பாலுறுப்புகளை, தொடை இடுக்குகளை நன்கு அலசி குளிக்க வேண்டும், அதைச் செய்யாதபோது, அழுக்கு சேர்க்கிறது, குளித்தபின் ஒழுங்காக துவட்டாமல், உள்ளாடைகளை அணியும்போதோ, அல்லது ஈரமான உள்ளாடைகளை அணியும்போதோ, அழுக்கில் ஈரம் பட்டு, பூஞ்சைகள் எனும் ஃபங்கஸ் உண்டாகிறது. இந்தப் பூஞ்சைகளே, மறைவிடத்தில் அரிப்பை ஏற்படுத்தி சொறிவதன் மூலம், பலரிடத்தில், அருவருப்பை ஏற்படுத்துகின்றன.

கடுமையாக அரிக்கும் இந்த பாதிப்புகளைக் களைவது எப்படி?

கடுமையாக அரிக்கும் இந்த பாதிப்புகளைக் களைவது எப்படி?

அரிப்பு தரும் சருமத்தின் தடிப்புகளை, கூடுமானவரையில் சொறியாமல் இருக்க வேண்டும். சொறிந்தபின் வரும் தண்ணீர் உடலில் பரவினால், தடிப்புகள் உடல் எங்கும் பரவி, முகத்தில், கை கால்களில் பரவி, தோற்றத்தை பாதித்துவிடும்.

அரிப்பு கடுமையாக இருந்தால், அந்த இடத்தில் தண்ணீர் ஊற்றி, மென்மையாகத் துடைக்கவேண்டும். தேங்காய் எண்ணையை இதமாகத் தடவிவரலாம். அரிப்பு உள்ள தடிப்புகளில், குளிக்கும்போது, சோப்பை தேய்த்து சுத்தம் செய்யக்கூடாது, சோப்பில் உள்ள கெமிக்கல், அரிப்பை இன்னும் அதிகப்படுத்திவிடும். சீயக்காய் அல்லது பயத்தமாவு கலவையைக் கலந்து குளிப்பது நலம் தரும். இதன்பிறகும், அரிப்பு நிற்கவில்லையெனில், மூலிகைகளை உபயோகித்து, நிவாரணம் பெறலாம்.

சொறி, அரிப்பு போக்கும் தேள்கொடுக்கு மூலிகை.

சொறி, அரிப்பு போக்கும் தேள்கொடுக்கு மூலிகை.

தேள்கொடுக்கு செடி, பெயரைப்போலவே செடியும், தேள்கொடுக்கு போல இருக்கும், இதர அரிய மூலிகைகளைப் போல, தேள்கொடுக்கு மூலிகையும் கிராமங்களின் ஒதுக்குப்புறமான திடல்கள், சாலையோரங்களில் காணப்படும் ஒரு செடியாகும்.

தேள்கொடுக்கு மூலிகையின் இலைகள், விஷக்கடி, சொறி, அரிப்பு போன்ற சரும பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாகின்றன. இலைகளில் காணப்படும் அரிய வேதிப்பொருட்கள் மற்றும் தாதுக்கள், விஷக்கடி மற்றும் சரும ஒவ்வாமை பாதிப்புகளை சீர்செய்யும் ஆற்றல் மிக்கவை. சாப்பிடும் மருந்தாகவும், வெளிப் பிரயோக மருந்தாகவும், இரு விதங்களிலும் தீர்வு தரும் வகையில் செயலாற்றும்.

தேள்கொடுக்கு மூலிகை குடிநீர்.

தேள்கொடுக்கு மூலிகை குடிநீர்.

தேள்கொடுக்கு இலைகள் மற்றும் மலர்களைச் சேகரித்து அவற்றை நிழலில் உலர்த்தி, சூரணமாக செய்து வைத்துக்கொண்டு, அதில் இரு தேக்கரண்டி அளவு எடுத்து, இரண்டு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து, நீர் முக்கால் டம்ளராக சுண்டியதும், ஆறவைத்து, தினமும் இருவேளை பருகிவர, அரிப்பு, சொறி போன்ற பாதிப்புகள் தீரும். தேள் கொட்டிய இடத்தில், மூலிகைச்சாறை பிழிய, தேள்கடி விஷம் முறிந்து, கடிபட்ட இடத்தில் ஏற்பட்ட வலியும் நீங்கும். மேலும், தேள்கொடுக்கு இலைகளின் சாறை, அரிப்பு உள்ள இடங்களில் தடவிவர, விஷக்கடி, சரும பாதிப்புகள் விரைவில் குணமாகிவிடும். தொடை இடுக்குகள் மறைவிடங்களில் ஏற்படும் அரிப்பைப் போக்கும் தேள் கொடுக்கு மூலிகை எண்ணெய்.

பொது இடங்களில் சங்கடம்

பொது இடங்களில் சங்கடம்

மறைவிடங்களை நன்கு சுத்தம் செய்யாமல் குளிப்பதாலும், நீண்ட நாட்களுக்கு உள்ளாடைகளை மாற்றாமல் பயன்படுத்தி வருவதாலும், சிலருக்கு தொடை இடுக்குகளில் மறைவிடங்களில், பூஞ்சை காளான்கள் மற்றும் நுண்கிருமிகள் பரவி, சருமம் தடித்து, கடுமையான அரிப்பு ஏற்படும். அரிப்பெடுக்கும் சமயங்களில் சொறியும்போது ஏற்படும் சுகத்தில், மேலும் சொறிய, தடிப்புகள் புண்களாக மாறி, கடும் எரிச்சலைக் கொடுக்கும். நேரம் காலம் பார்க்காமல் ஏற்படும் இதுபோன்ற அரிப்பால், பொது இடங்களில் சொறிய நேர்ந்து, மற்றவர்முன், தலைகுனிய நேரிடும்.

இந்த பாதிப்புகளுக்கு நல்ல தீர்வாகிறது, தேள்கொடுக்கு மூலிகை எண்ணெய். உடலில் விஷக்கடி, ஒவ்வாமை மற்றும் பூஞ்சைத் தொற்றால் ஏற்படும் அரிப்புகளைப் போக்கி, சருமத்தை இயல்பாக்கும் தன்மைமிக்கது.

மூலிகை எண்ணெய்

மூலிகை எண்ணெய்

ஒரு மண் சட்டியில் அரை லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி, அதில் இரு கை நிறைய சுத்தம் செய்த தேள்கொடுக்கு இலைகளை இட்டு, எண்ணை தைலப்பதமாக வரும்வரை, மிதமான சூட்டில் காய்ச்சி அத்துடன் மஞ்சள் தூளை சிறிதளவு சேர்த்து வைத்துக் கொண்டு, பூஞ்சை பாதிப்பு ஏற்பட்ட மறைவிடங்களில், இரவு படுக்கும்முன் தடவிவர, விரைவில் குணமாகிவிடும். இந்த தைலம், அரிப்பு, சொறி மட்டுமன்றி, விஷக்கடி, காயங்கள் போன்றவற்றையும் குணப்படுத்தும் தன்மைவாய்ந்தது.

பூஞ்சை பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க.

பூஞ்சை பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க.

மறைவிடங்களில் ஏற்படும் சரும பாதிப்புகளுக்கு பூஞ்சைத் தொற்றுக்கு காரணம், சுகாதாரமின்மை மற்றும் நெடுநாள் பயன்படுத்தும் உள்ளாடைகள். உள்ளாடைகளை அவை நைந்து, கந்தலாகும்வரை பயன்படுத்தாமல், ஆறு மாதத்திற்கொரு முறை மாற்றவேண்டும். அதன்மூலம், பூஞ்சைத்தொற்று ஏற்படாமல், தொடை மறைவிடங்களில் அரிப்பு சொறி தொற்று ஏற்படாமல், தடுக்கமுடியும்.

உள்ளங்கை உள்ளங்கால்களில் ஏற்படும் அரிப்பு நீங்க.

உள்ளங்கை உள்ளங்கால்களில் ஏற்படும் அரிப்பு நீங்க.

சிலருக்கு அரிப்பு, வித்தியாசமாக உள்ளங்கை, உள்ளங்கால்களில் ஏற்படும், இதை சரிசெய்ய, புங்கன் எண்ணையை உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் தடவிவர, அரிப்பு நீங்கும். குளிக்கும்போது, முகத்திற்கு பலமுறை சோப்பு போட்டு, முக அழகை பராமரிப்பதுபோல, மறைவிடத்தையும் அழுக்கு நீக்கி, சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

வியர்வை

வியர்வை

சிலருக்கு, வியர்வையின் காரணமாக, வியர்க்குரு போன்ற சரும பாதிப்புகள் ஏற்படும். அவற்றை முறையாக அலசிக் குளிக்காத காரணத்தால், அவை சருமபாதிப்புகளாக மாறி, உடலில் அரிப்பு மற்றும் அலர்ஜி பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். இதைப்போக்க அரசமர இலைகள் உதவி செய்யும்.

அரச மரத்தின் துளிர் இலைகளைச் சேகரித்து, சுத்தம் செய்து, மையாக அரைத்து, அவற்றை நீரிலிட்டு கொதிக்கவைத்து, ஆறியபின் அந்த நீரை, உடலில் அலர்ஜி, தடிப்பு, அரிப்பு உள்ள இடங்களில் நன்கு தடவி, சற்றுநேரம் கழித்து, குளித்துவர, சரும பாதிப்புகள் நீங்கி, சருமம் இயல்பாகி, உடல்நலமாகும்.

மற்ற மூலிகைகள்

மற்ற மூலிகைகள்

தேங்காய் எண்ணையில் மாந்தளிர்களைக் கொண்டும் தைலம் தயாரித்து, பயன்படுத்த, அரிப்பு, பூஞ்சைத் தொற்று பாதிப்புகள் நீங்கிவிடும். குப்பைமேனி இலைகளை விளக்கெண்ணையில் இட்டு காய்ச்சிய தைலத்தை அரிப்பில் தடவி வந்தாலும், அரிப்பு, பூஞ்சைத்தொற்று பாதிப்புகள் மறைந்து விடும். எலுமிச்சை சாறை அரிப்பு உள்ள இடங்களில் தடவிவர, அரிப்பு மறையும். சீமை அகத்திச்செடியின் இலைகளை சுத்தம்செய்து, விளக்கெண்ணையில் இட்டு காய்ச்சி, அரிப்பு உள்ள இடங்களில் தடவி வர, பாதிப்புகள் நீங்கி, சருமம் வளம் பெறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

herbal for itching and fungal infections

If you notice a whitish discharge, a fishy smell, and some irritation and discomfort down south, it is a clear indication that you have developed a vaginal yeast infection.
Desktop Bottom Promotion