Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
நீங்கள் ஆரோக்கியம் என நினைக்கும் இந்த டயட்தான் உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கிறது
சிலசமயம் நீங்கள் ஆரோக்கியமென நினைத்து பின்பற்றும் சில பழக்கவழக்கங்கள்தான் உங்கள் ஆரோக்கியத்தையே சிதைக்ககூடும் என்பதுதான் அதிர்ச்சிகரமான தகவல்.
ஆரோக்கியாமான உணவுமுறை என்பது உங்கள் ஆரோக்கியத்திற்கும், வாழ்நாள் அதிகரிப்பிற்கும் அவசியமான ஒன்றாகும். உங்கள் நல்வாழ்விற்கு அடிப்படை தேவையும் இதுதான். ஆனால் சிலசமயம் நீங்கள் ஆரோக்கியமென நினைத்து பின்பற்றும் சில பழக்கவழக்கங்கள்தான் உங்கள் ஆரோக்கியத்தையே சிதைக்ககூடும் என்பதுதான் அதிர்ச்சிகரமான தகவல்.

உண்மைதான், நீங்கள் நண்பர்கள் கூறினார்கள், மருத்துவர்கள் கூறினார்கள் என்று நீங்கள் தவறான ஆரோக்கிய உணவுமுறைகளை பின்பற்றுவது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். நீங்கள் செய்யும் சில ஆரோக்கிய செயல்கள் உங்கள் வாழ்நாளை குறைக்கக்கூடும், அவை என்னென்ன செயல்கள் என்பதை இங்கு பார்க்கலாம்.

குறைவான உப்பு
உணவில் உப்பு குறைவாக சாப்பிடுவது பலரும் பின்பற்றும் ஒரு உணவுமுறையாகும். சமீபத்தில் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் குறைந்தளவு சோடியம் எடுத்துக்கொள்வது இரத்த அழுத்தத்தை குறைப்பதை தவிர வேறு எந்த நன்மையும் செய்வதில்லை. இந்த ஆய்வின்படி சோடியம் குறைவாக உள்ளவர்களுக்கு இதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பச்சை உணவுகளை சாப்பிடுதல்
பச்சை காய்கறிகள் மற்றும் உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியம் என நாம் கேள்விப்பட்டிருப்போம். காய்கறிகளை சமைப்பது அதில் உள்ள ஊட்டச்சத்துக்களை குறைக்கும் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அது முழுவதும் உண்மையல்ல. ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி உணவுகளை வேகவைப்பது அவற்றை எளிதில் செரிக்க வைக்கிறது. சமைத்த உணவுகள் உணவால் நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. நீங்கள் உணவை வேகவைக்காமல் சாப்பிடும்போது உங்கள் எடை மிகவும் குறைவாகும் அபாயம் உள்ளது.

பதப்படுத்தப்பட்ட ஆரோக்கிய உணவுகள்
பதப்படுத்தப்பட்ட ஆரோக்கிய உணவுகள் உங்களை அதிகம் சாப்பிட தூண்டும், ஆனால் உண்மை என்னவெனில் இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடும்போது அது சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். கொழுப்பை குறைப்பதற்காக இதுபோன்ற உணவுகளில் அதிகளவு சர்க்கரை சேர்க்கப்படுகிறது இது அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இந்த அடைக்கப்பட்ட டயட் உணவுகளில் உள்ள அதிகளவு சோடியம் உங்களுக்கு பல தீமைகளை ஏற்படுத்தும்.

இயற்கை இனிப்புகள்
இயற்கை இனிப்பூட்டிகள் சர்க்கரையை விட ஆபத்தானவை. உண்மையில் இயற்கை இனிப்பூட்டிகளில் சர்க்கரையை விட அதிக கலோரிகள் உள்ளது. இயற்கை இனிப்புகளில் இருக்கும் பிரக்ட்டோஸ் மனித உடலுக்கு ஏற்றதல்ல. அஸ்பார்டேம் புற்றுநோயை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.பெண்கள் தினமும் 6 ஸ்பூன் சர்க்கரையும் ஆண்கள் 9 ஸ்பூன் சர்க்கரையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்று ஆய்வுகள் கூறுகிறது.

பாலை தவிர்த்தல்
பால் பொருட்கள் மிகவும் முக்கியமானவை. மனித உடலை கட்டமைப்பதில் பாலின் பங்கு முக்கியமானது. ஆய்வுகளின் படி கொழுப்பு குறைவாக உள்ள பால் உடலுக்கு ஆரோக்கியமானது. இது இரத்த அழுத்தத்தை குறைத்தல் மற்றும் எடை குறைப்பிற்கு உதவுகிறது.

கொழுப்பை தவிர்ப்பது
ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி பால் கொழுப்புகளை தவிர மற்ற கொழுப்புகள் அனைத்தும் மிதமான அளவில் எடுத்துக்கொள்ளப்படும் போது அது ஆரோக்யமானதுதான். பாதாம், அவோகேடா போன்ற உணவுகளில் உள்ள நிறைவுறா கொழுப்புகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவுவதோடு வீக்கத்தையும் குறைக்க உதவுகிறது. எனவே ஆரோக்கியமென நினைத்து கொழுப்புகளை தவிர்க்காதீர்கள்.

பாதாம் மற்றும் மற்ற பாலை குடிப்பது
பாலிற்கு பதிலாக மற்ற பாலை குடிப்பது தவறில்லைதான். ஆனால் பாலில் இருந்து கிடைக்கும் சத்துக்கள் போல மற்ற பாலில் இருந்து கிடைக்காது. ஒரு டம்ளர் பாதாம் பாலில் 2 கிராம் புரோட்டின்கள் உள்ளது அதேசமயம் ஒரு டம்ளர் பாலில் 8 கிராம் புரோட்டின் உள்ளது. எனவே பால் குடிப்பதை தவிர்க்காதீர்கள்.

உணவில் உள்ள கொழுப்பை நினைத்து கவலைப்படுவது
கொழுப்பு நிறைந்த உணவுகள் உங்கள் இரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் அளவை குறைக்கும் என்று நீங்கள் அவற்றை தவிர்த்தால் அது மிகவும் தவறான ஒன்றாகும். குறைவான அளவில் கொழுப்பு உணவுகளை சாப்பிடும்போது அவை எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்த போவதில்லை. முட்டை மஞ்சள் கருவில் டயட் கொழுப்புகள் உள்ளது, அதேசமயம் இதில் வைட்டமின் ஈ மற்றும் கரோட்டினாய்டுகள் உள்ளது. இவை உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதுபோன்ற நல்ல கொழுப்புக்களை எப்பொழுதும் தவிர்க்காதீர்கள்



Click it and Unblock the Notifications