For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருமுட்டை தானம் என்ற பெயரில் சுரண்டப்படும் பெண்கள்!

|

இன்றைக்கு வளர்ந்த நகரங்களில் அதிகரித்து வருகிற ஓர் திருட்டில் மருத்துவ திருட்டு தான் அதிகளவு நடக்கின்றன. இவற்றில் வெளியில் அவ்வளவாக தெரியாது மிக ரகசியமாக நடத்தப்படுகிறது கருமுட்டை தானம். பெண்களுக்கு ஹார்மோன் ஊசி போடப்பட்டு அவர்களிடமிருந்து கருமுட்டை தானமாக பெறப்படுகிறது.

திருமணமாகி குழந்தை பெற்ற பெண்கள் குறைந்தது மூன்று முறை கொடுக்கலாம். ஒவ்வொரு முறை கொடுக்கும் போதும் குறிப்பிட்ட கால அளவு விட வேண்டும் என்று ஏகப்பட்ட விதிமுறைகள் சொன்னாலும் எதுவும் கடைபிடிப்பதில்லை ஏழ்மை நிலையில் இருக்கிற பெண்களையே இவர்கள் டார்கெட் செய்வதால் குடும்பம், குழந்தை, பசி என்று ஏதேனும் ஒரு சாக்கை வைத்துக் கொண்டு பணத்தேவையை காரணம் காட்டியே அவர்கள் உயிருடன் விளையாடுகிறார்கள். தொடர்ந்து இப்படி கருமுட்டை தானம் கொடுப்பதினால் பெண்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்படுகிறது.

இந்த பிரச்சனைகளை எல்லாம் அனுபவப் பூர்வமாக சந்தித்த சில பெண்களைப் பற்றிய அனுபவ பகிர்வு

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

அப்போது நான் எட்டாவது முறை கருமுட்டை தானம் செய்வதற்காக மருத்துவமனை சென்றிருந்தேன். தானே வில் உள்ள ஒரு மருத்துவமனையில் அதற்கான ஹார்மோன் ஊசி போடப்பட்டது. அப்போது எனக்கு 31 வயது இந்த நடைமுறை முழுவதும் வெற்றிகரமாக முடிந்தால் எனக்கு இருபத்திஎட்டாயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என்று அந்த மருத்துவமனையிலிருந்து சொல்லப்பட்டது.

அதோடு இதற்கிடையில் ஏதேனும் அலர்ஜி ஒவ்வாமை ஏற்பட்டால் அதற்கும் மருத்துவமனையிலிருந்தே இலவசமாக மருந்து கொடுத்துவிடுவோம் என்று சொன்னார்கள்.

#2

#2

ஆனால் விதி விளையாடியது. கருமுட்டையை தொடர்ந்து அடிக்கடி தானமாக கொடுக்க ஹார்மோன் ஊசி போடுவது அதற்கான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதினால் கர்பப்பையில் ஏராளமான மாற்றங்கள் இம்முறை கருப்பை வீக்கத்தை கொடுத்தது. தொடர் வயிற்று வலி மற்றும் உதிரப்போக்கு நிற்காமல் போனதால் மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பப்பை வீக்கமடைந்திருக்கிறது என்றார்கள்.

அது மட்டுமல்லாமல் இதற்கு சிகிச்சையளிக்க முடியாது என்றும் சொன்னார்கள். உங்களுக்கு ஏதேனும் அலர்ஜி ஏற்பட்டால் தான் இங்கே நாங்கள் சிகிச்சை தர முடியும் இந்த வீக்கத்திற்கு எல்லாம் நீங்கள் தான் பணம் கட்டி சிகிச்சை பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.

#3

#3

இந்த மருத்துவமனையில் கேட்ட தொகை அதிகம் என்பதால் எங்கள் பகுதியிலேயே வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டேன் அதற்கு சுமார் பத்தாயிரம் வரை செலவாகிவிட்டது. பணம் கட்டி சிகிச்சை அளிக்கும் அளவிற்கு என் குடும்பம் வசதியானது ஒன்றுமில்லை. கணவர் ஒரு கட்டிட தொழிலாளி. எனக்கு மூன்று குழந்தைகள். என் உடல்நலம் சற்றே தேறி வரும் நிலையில் எங்கள் குடும்பத்தில் அடுத்த பேரிடி விழுந்தது.

கணவருக்கு வாய் புற்றுநோய். பாக்கு போடும் பழக்கம் கொண்ட அவருக்கு வாய்ப்புற்றுநோய் ஏற்பட்டது ஒன்றும் ஆச்சரியமில்லை தான்.

#4

#4

அதற்காக அப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா? அங்கேயிங்கே என்று கடனைப் புரட்டி கணவருக்கு வைத்தியம் பார்த்தேன். கணவர் வேலைக்குச் செல்லாததால் வீட்டில் கடுமையான வறுமை.

பள்ளிச் சென்று கொண்டிருந்த மூன்று குழந்தைகளும் ஒரு வேளை உணவின்றி கிடந்தார்கள் தொடர்ந்து இரண்டு நாட்கள் வரை சாப்பிட வழியில்லாமல் கிடந்தோம். இனியும் தாமதித்தால் வேலைக்கு ஆகாது என்று நினைத்துக் கொண்டு என்ன ஆனாலும் சரி என் குடும்பத்திற்காகத்தானே ஒரு தாயாக என் குழந்தைகளின் பசியை ஆற்ற வேண்டும் என்று மனதில் சொல்லிக் கொண்டு அடுத்த முறை கருமுட்டை தானம் செய்வதற்கு முன் வந்தேன்.

#5

#5

முதன் முதலாக கருமுட்டை தானம் செய்ய முன் வந்த போத போது இதனால் உடல்நலம் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்று பயந்தேன். இதில் பயப்பட ஒன்றுமில்லை உன்னைப் போல ஏராளமான பெண்கள் இப்படி கருமுட்டை தானம் கொடுக்கிறார்கள் என்று சொன்னார்கள் மருத்துவர்கள். அதோடு என்ன நடைமுறையில் கருமுட்டை எடுக்கப்படுகிறது எதற்காக நம்முடைய கருமுட்டையை வாங்குகிறார்கள் என்று நிறைய தகவல்களைச் சொன்னார்கள்.

மாதவிடாய் ஆரம்பித்த இரண்டாம் நாளிலிருந்து உங்களுக்கு ஹார்மோன் ஊசி போடப்படும். இதனால் ஒரே நேரத்தில் அதிகப்படியான கருமுட்டைகளை நாம் எடுக்க முடியும். ஹார்மோன் ஊசி போடவில்லை என்றால் ஒரேயொரு கருமுட்டை தான் உருவாகும் அபூர்வமாக இரண்டு கருமுட்டைகளை உருவாகிடும்.

#6

#6

இந்த ஹார்மோன் ஊசி தொடர்ந்து போடுவதால் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு பெண்கள் ஏராளமான உடல்நல பாதிப்புகளை சந்திக்கிறார்கள். இந்த பாதிப்பினால் உயிரிழப்பு கூட ஏற்படுவதுண்டு. மேலும் இவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கு கூட அதிக சதவீத வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் இவற்றை எல்லாம் மருத்துவர்கள் மறைத்து விடுகிறார்கள்.

ஹார்மோன் ஊசி கொடுப்பதுடன் வேலை முடிந்து விடாது , அதன் பிறகு ஏகப்பட்ட ரத்தப் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எல்லாம் எடுக்கப்பட்டு கருமுட்டை வளர்ச்சி இருக்கிறதா என்று தொடர்ந்து கண்காணிக்கப்படும். அதில் முழுதாக வளர்ச்சியடைந்த கருமுட்டைகள் எத்தனை பாதி வளர்ந்த நிலையில் இருப்பது எத்தனை என்று கண்காணிக்கப்படும்.

#7

#7

ஒரு பெண்ணிடமிருந்து குறைந்தது பதினைந்து கருமுட்டைகள் வரை எடுக்க திட்டமிடுவார்கள். முழுதாக வளர்ந்தவுடன் கருமுட்டை எடுக்கப்படும். கர்பப்பையில் வளரும் கருமுட்டையை எடுக்க முதலில் அந்தப் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பிறப்புறுப்பு வழியாக நீடில் செலுத்தி கருமுட்டை எடுப்பார்கள். சில நேரங்கள் இவை எடுக்கும் போது சிதைந்து விடவும் வாய்ப்புண்டு. ஆக பதினைந்து என்று கணக்கு வைத்து வளர்த்தால் கைக்கு ஏழு முதல் பத்து கருமுட்டைகள் தான் கிடைக்கும்.

இந்த நடைமுறை முப்பது நிமிடங்களுக்கும் குறைவாக தான் எடுத்துக் கொள்ளும். அந்தப் பெண் அன்றைய தினமே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.

#8

#8

இப்படி அடிக்கடி ஹார்மோன் ஊசி போட்டுக் கொண்டு கருமுட்டையை தானமாக வழங்கும் பெண்களுக்கு ovarian hyperstimulation syndrome என்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு, அப்படியென்றால் சிலருக்கு கர்ப்பப்பை வீக்கம் ஏற்படும். இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு கடுமையான வயிற்று வலி இருக்கும், சிலருக்கு உதிரப்போக்கு, சிலருக்கு மூச்சுத் திணறல் கூட ஏற்படும்.

இதனை தவிர்க்க கருமுட்டை எடுத்த பிறகு 48 மணி நேரம் கழித்து இன்னொரு ஸ்கேன் எடுத்து கர்பப்பையின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஆனால் பலரும் தொடர் கண்காணிப்பிற்கு வருவதில்லை சில இடங்களில் மருத்துவமனை நிர்வாகமும் இந்த நடைமுறைகளை எல்லாம் பின்பற்றுவதில்லை.

அதோடு இந்த சிகிச்சையளிக்கும் நடைமுறையிலும் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிப்பதில்லை.

#9

#9

மருத்துவமனையில் வைத்து தானே செய்கிறார்கள் நன்றாக படித்த மருத்துவர்கள் தானே செய்கிறார்கள் என்ற நம்பிக்கையில் பெண்கள் இந்த சிகிச்சை முறை குறித்து கேள்வியெழுப்ப மறுத்துவிடுகிறார்கள். இந்த பெண்களுக்கு கர்பப்பையில் மட்டும் பிரச்சனை ஏற்படுவதில்லை இவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கும் அதிகம் வாய்ப்புண்டு.

21வயதிலிருந்து 35வயதுக்கு உட்பட்ட பெண்கள் மட்டுமே இந்த தானம் வழங்க வேண்டும். ஆனால் பதினெட்டு வயது கூட நிரம்பாத இளம்பெண்கள் பலரும் இந்த கருமுட்டை தானத்திற்கு முன் வருகிறார்கள் என்பது அதிர்ச்சிகரமான தகவல்.

#10

#10

இது குறித்த விழிப்புணர்வு இல்லை ஒரு பக்கம்.இன்னொரு பக்கம், இது மருத்துவ நடைமுறை தான் என்று விவரம் தெரியாததால் கருமுட்டை தானம் என்று சொன்னவுடன் வேறு ஒரு ஆடவருடன் உறவு கொண்டு தான் இந்த நடைமுறை நடப்பதாக சந்தேகம் கொள்கிறார்கள். இதனாலேயே இந்த தானம் செய்கிறேன் என்று யாரும் சொல்ல முன் வருவதில்லை.

அதோடு மருத்துவர்களே நீங்கள் மூன்று முறை தானம் கொடுத்துவிட்டீர்கள் இனிமேல் தானம் செய்ய வேண்டும் உங்களுக்கு ஆபத்து என்று சொன்னால் கூட தங்களுக்கு பணத்தேவை இருப்பதினால் இந்த மருத்துவர் இல்லையென்றால் வேறு மருத்துவமனையை தேடிச் சென்று விடுகிறார்கள். இது மறைமுகமாக நடக்கும் நடைமுறை என்பதால் உரிய இன்சூரன்ஸ்,மருத்துவ பாதுகாப்பு எதுவுமே இவர்களுக்கு கிடைப்பதில்லை.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Issues Facing By Women Who Donate Their Eggs

Health Issues Facing By Women Who Donate Their Eggs
Story first published: Tuesday, June 26, 2018, 12:39 [IST]