Latest Updates
-
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம்
அட..! தம்பதிகள் இப்படி குளிச்சீங்கனா உங்களுக்கு நோயே வராதாம்..! புதுவித குளியல்..!
"இப்படியெல்லமா குளிப்பாங்கனு... கேக்குற அளவுக்கு பலவித குளியல்கள் இங்குள்ளது. இந்த வெந்நீர் குளியல் கேள்விப்பட்டிருப்போம், சன் பாத் கூட கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்த புதுவித மணல் குளியலை பற்றி நாம் இதுவரை கேட்டிருக்கவே மாட்டோம். இந்த குளியலை தம்பதியர் இருவருமே சேர்ந்து குளித்தால் பலவித நன்மைகள் கிடைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

இந்த குளியலுக்கென்று ஒரு அருமையான பாரம்பரியமும் வரலாறும் உள்ளதாம். நீங்கள் இந்த குளியலை எடுக்கும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் ஏராளம். இது இன்றோ நேற்றோ வந்த குளியல் முறை கிடையாது. பல ஆயிரம் வருடமாக இந்த குளியல் முறையை கடைபிடித்து வருகின்றனர். ஆனால், நமக்கு தான் இந்த குளியலின் மகத்துவம் பின்னாளிலே தெரிய வந்துள்ளது. அப்படி என்னதான் இந்த குளியலில் உள்ளது என்பதை இனி தெரிந்து கொள்ளலாம்.

கழிவும் குளியலும்..!
நமது உடலில் உள்ள அழுக்குகளே நமக்கு நோய்களை தருகிறது. இவை உடலில் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ இருந்தால் இது போன்ற பாதிப்புகளை தரவல்லது. இது போன்று உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை நீக்குவதற்காகவே ஒரு சில குளியல் முறைகள் உள்ளன. இவை அனைத்துமே நமது உடலில் நோய்கள் அண்டாமல் பார்த்து கொள்ளும்.

பூர்வீகம் எது..?
இந்த மணல் குளியலுக்கென்று அற்புதமான பூர்வீகமும் சிறந்த வரலாறும் உள்ளது. இந்த மணல் குளியல் முதன்முதலில் சஹாரா பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் தான் மேற்கொண்டு வந்தனர் என ஆய்வுகள் சொல்கிறது. இவற்றை எகிப்தியர்களும், கிரேக்கர்களும் கடைபிடித்து வந்தார்களாம். மிக இதமான குளியல் என்றே கருதப்படுகிறது.

அது என்ன மண் குளியல்..!?
பெரும்பாலும் இந்த குளியலை நாம் பல படங்களில் விளையாட்டுத்தனமாக பார்த்திருப்போம். ஆனால், இதன் மகத்துவம் நாம் இந்த குளியலை மேற்கொள்ளும் போதுதான் நமக்கு தெரியும். பாத வீக்கம், உடலில் நீர்சத்து சம அளவு, அழுக்குகள் வெளியேற்றம் போன்றவை இதனால் பலனாக கிடைக்கும்.

என்ன செய்யணும்..?
கடல் அல்லது ஆறுகள் இருக்கும் பகுதியில் ஆறடி நீளம்,மூன்றடி அகலம், ஓரடி ஆழம் என்கிரா அளவில் மணலை தோண்டி கொண்டு அதில் கால் நீட்டி படுத்து கொள்ளவும். பிறகு உடலுக்கு மேல் பகுதியில் அரை அடி வரை மணலை சமமாக பரப்பி கொள்ள வேண்டும். இந்த நிலையில் தலை பகுதியை துணியால் கட்டி கொள்ளலாம். ஏனெனில் மணலானது காது, கண் போன்ற பகுதிகளில் போகாதவாறு இருக்க வேண்டும்.

எந்த நிலை..?
நீங்கள் இந்த மணல் குளியலை மேற்கொள்ளும் போது வெறும் வயிற்றில் இருக்க வேண்டும். மேலும், அதிக வெயில் அடிக்கும் நேரத்தில் இந்த குளியலை மேற்கொள்ள கூடாது. மாறாக இளம் வெயிலில் குளிப்பது நல்லது. குறிப்பாக காலை அல்லது மாலை வேளையில் இந்த குளியலை செய்யலாம். ஆரம்பத்தில் லேசாக மூச்சி முட்டுவது போன்ற உணர்வு உண்டாகும். அதன் பின் எந்த பிரச்சினையும் இருக்காது.

புதுவித குளியல்..!
மணல் குளியல் எப்படி உங்களுக்கு உடலில் உள்ள நோய்களை விரட்டுகிறதோ, இதே போன்று இந்த குளியலும் உதவும். இதற்கு பெயர், முதுகு தண்டு குளியல். இது மணல் குளியலை விட மிக சுலபமானதும் கூட. வெறும் 1 டப் தண்ணீர் இருந்தால் போதுமானது.

எப்படி குளிக்கலாம்..?
இந்த குளியலை செய்ய முதலில் ஒரு டப்பில்(தொட்டி) முதுகுத்தண்டு மற்றும் வயிற்று பகுதி மூழ்கும் படி தண்ணீரை நிரப்பி கொள்ள வேண்டும். அதாவது முகத்தை தவிர்த்து மற்ற உறுப்புகள் நீரில் மூழ்கியபடி இருத்தல் வேண்டும். நீங்கள் சாதாரண தண்ணீர் அல்லது மிதமான சுடு தண்ணீரையும் பயன்படுத்தலாம்.

தம்பதியரின் குளியல்..!
இந்த இரு குளியலையும் தம்பதியர்கள் இருவரும் சேர்ந்து தனி தனி முறையில் மேற்கொள்வது சிறந்தது. மேலும், இவ்வாறு செய்வதன் மூலம் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமாக கூடும். முன் காலத்திலெல்லாம் இது போன்ற முறையில் தான் குளியல் செய்து வந்தனர்.

பயன்கள் ஏராளம்..!
இந்த ம்,முதுகு தண்டு குளியல் உங்களுக்கு பலவித பயன்களை தருகிறது. குறிப்பாக உடலில் உள்ள அழுக்குகள் வெப்பம் ஆகியவை வெளியேறி விடும். அத்துடன் உடல் முழுவதும் உள்ள வலிகளும் பறந்து போய் விடும். இந்த குளியலை வாரத்திற்கு 1 அல்லது 2முறை செலுத்த வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

குளியல் முக்கியமே..!
நாம் நினைப்பது போன்று குளியல் மிக சாதாரண ஒன்று அல்ல. தூங்கி எழுந்தவுடன் குளியலை மேற்கொள்வதற்கு காரணமே உடலில் உள்ள அழுக்குகளும் உஷ்ணமும் குறைவதற்கே. ஆதலால், அன்றாடம் குளிப்பது மிக சிறந்த பழக்கமாகும். இதனால் தோலில் உள்ள பலவித நோய்களும் குணமாக கூடும் நண்பர்களே.



Click it and Unblock the Notifications