For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிறரை விட இவர்களுக்கு விட்டமின் சி வேகமாக குறையும்!

விட்டமின் சி அதிகமாக இருக்கும் காய்கறி மற்றும் பழங்கள்

|

நம் உடலுக்கு அவசியமாய் இருக்கிற சத்துக்களில் முதன்மையானது விட்டமின்ஸ். உடல் உறுப்புகள் சீராக வேலை செய்ய விட்டமின் சி அவசியமாகும். எலும்புகளுக்கும்,ரத்த நாளங்களுக்கு, சருமத்திற்கு விட்டமின் சி முக்கியமானதாகும். இயற்கையாகவே இது சில உணவுப் பொருட்களில் கிடைக்கிறது. உணவுப் பொருட்களில் இருப்பதை எடுத்துக் கொள்வதற்கு முன்னால் இந்த விட்டமின் சி எதற்கு தேவை என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம்.

விட்டமின்ஸ் குறிப்பாக விட்டமின் சி என்பது ஓர் ஆர்கானிக் காம்பவுண்டாகும். இதில் காபன் மற்றும் ஆக்ஸிஜன் கலந்தே இருக்கும். அதோடு விட்டமின் சி தண்ணீரில் கரையக்கூடியது, அதனால் இந்த சத்தை உடலில் சேமித்து வைத்திருக்க முடியாது. இதனால் நீங்கள் தொடர்ந்து விட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். விட்டமின் சி நம் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு பெரிதும் உதவிடுகிறது. இதைத் தவிர இது மிகச்சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்டாக செயல்படும். விட்டமின் சி என்றாலே நாம் எலும்புகளுக்கும், பற்களுக்கு நல்லது என்பதோடு நிறுத்திக் கொள்கிறோம். அதையும் தாண்டி விட்டமின் சி எவ்வளவு அத்தியவசியமான செயல்களை செய்கிறது தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செயல்கள் :

செயல்கள் :

சருமத்தில் கொலாஜன் சின்தசிஸ் ஏற்படுத்துகிறது. இதனால் சருமம் ஆரோக்கியத்துடன் காணப்படும். வெளிப்புற சருமம் மட்டுமின்றி எலும்பு, ரத்த நாளங்கள் என உள் உறுப்புகளையும் மேம்படுத்த விட்டமின் சி உதவிடுகிறது, செல்களைச் சுற்றி பேஸ்மெண்ட் மெம்ப்ரைன் இருக்கும் அவற்றிற்கு வலுவூட்டுகிறது.

செல்களுக்கு ஊக்கமளிக்க ஃபேட்டி ஆசிட்டை மிட்டோச்சோண்ட்ரியாவாக மாற்றி உதவிடுகிறது. நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்களாக உதவிடுகிறது. இவை உடலில் நியூரான்களுக்கும் நரம்பு செல்களுக்கும் புத்துணர்வு ஊட்ட வைத்திடும். இதைத் தவிர பிறசத்துக்களை கிரகித்துக் கொள்ளவும் உதவிடுகிறது. இவ்வளவு நன்மைகள் அடங்கிய விட்டமின் சி தொடர்ந்து நம் உடலுக்கு கிடைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

ஆரஞ்சு :

ஆரஞ்சு :

விட்டமின் சி என்றதுமே சிட்ரஸ் அமிலம் நிரம்பிய பழங்கள் குறிப்பாக ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை தான் விட்டமின் சி நிறைந்த பழம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இவற்றையும் தாண்டி நாம் சாப்பிடுகிற பலவற்றிலும் விட்டமின் சி இருக்கிறது. அவை என்னென்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

அன்றாட உணவுப் பொருளில் விட்டமின் சி நிறைந்த பொருளை சாப்பிடுவதை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.

ப்ரோக்கோலி :

ப்ரோக்கோலி :

முட்டைகோஸ் வகையைச் சார்ந்த இது சாலட்களாக நீங்கள் சாப்பிடலாம். இவற்றில் அதிகப்படியாக விட்டமின் சி மற்றும் விட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. 100 கிராம் ப்ரோக்கோலியிலிருந்து 89 மில்லி கிராம் விட்டமின் சி உங்களுக்கு கிடைத்திடும்.

இவைத் தவிர ப்ரோக்கோலியில் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அதிகம். இவற்றுடன் பிற விட்டமின்ஸ் சேரும் பட்சத்தில் அவை நம் உடல் நலனுக்கு மிகவும் நல்லது.

 பப்பாளி :

பப்பாளி :

பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் இருக்கிறது குறிப்பாக 100 கிராம் பப்பாளியில் 90 மில்லி கிராம் விட்டமின் சி கிடைத்திடும். இதைத் தவிர விட்டமின் ஏ, டி,பி-12 மற்றும் இரும்புச் சத்து ஆகியவை இருக்கிறது.

இதனை தொடர்ந்து சாப்பிடுவதினால் மாரடைப்பு தொடர்பான பிரச்சனைகள்,சர்க்கரை நோய்,பாக்டீரியா தாக்குதல், முடி கொட்டுதல், ஆகிய பிரச்சனைகளை எல்லாம் தவிர்க்க இது உதவிடும்.

ஸ்ட்ராபெர்ரீஸ் :

ஸ்ட்ராபெர்ரீஸ் :

ஒரு கப் ஸ்ட்ராபெர்ரீயில் 84.5 மில்லி கிராம் விட்டமின் சி உங்களுக்கு கிடைத்திடும். இதைத் தவிர பிளாக் பெர்ரீ,ப்ளூ பெர்ரீ ஆகியவற்றையும் சாப்பிடலாம். அன்றாடம் சமையலில் பயன்படுத்தக்கூடிய மிளகாயிலும் விட்டமின் சி இருக்கிறது.

100 கிராம் மிளகாயிலிருந்து 106 மில்லி கிராம் விட்டமின் சி வரை கிடைத்திடும்.

காலி ஃப்ளவர் :

காலி ஃப்ளவர் :

இந்த காலி ஃப்ளவரில் விட்டமின்ஸ், கால்சியம், பாஸ்பேட், இரும்புச்சத்து, மக்னீசியம், ஒமேகா 3 ஆகியவை இருக்கிறது. இதில் விட்டமின் சி அதிகம் இருக்கிறது. இவற்றை நன்றாக சமைத்து சாப்பிடலாம். ஒரு நாளைக்கு 100 கிராம் காலிஃப்ளவர் எடுத்துக் கொள்வதினால் ஒரு நாளைக்கு தேவையான விட்டமின் சி உங்களுக்கு கிடைத்திடும்.

அன்னாசிப் பழம் :

அன்னாசிப் பழம் :

இதில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருகிறது.குறிப்பாக அன்னாசிப்பழத்தில் விட்டமின் சி அதிகம். ஒரு நாளைக்கு ஒரு கப் அன்னாசிப் பழத்தை சாப்பிடுவதினால் 88 மில்லி கிராம் விட்டமின் சி வரை உங்களுக்கு கிடைத்திடும்.

இதனை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும், கெட்ட கொழுப்பு கரைந்திடும்.

மாம்பழம் :

மாம்பழம் :

மாம்பழத்தில் விட்டமின் சி மற்றும் விட்டமின் ஏ அதிகமாக இருக்கிறது. இவற்றில் 75 சதவீதம் விட்டமின் சி இருக்கிறது. இவை எடுப்பதினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதோடு செல்களுக்கு வலுவூட்டும் இதனால் புற்றுநோய் பாதிப்புகளிலிருந்து நீங்கள் தப்பிக்கலாம்.

உடலில் சர்க்கரை அளவை சரியான அளவில் வைத்திருக்க உதவிடும்.

கொய்யா :

கொய்யா :

கொய்யாப் பழத்தினை சூப்பர் ஃப்ரூட் என்று தான் வழங்குகிறார்கள். இதற்கு காரணம் இதிலிருக்கும் ஏரளமான சத்துக்கள் தான். ஆரஞ்சுப் பழத்தில் இருப்பதை விட ஐந்து மடங்கு அதிகளவு விட்டமின் சி இருக்கிறது. விட்டமின் சி தவிர கொய்யாப்பழத்தில் விட்டமின் ஏ மற்றும் டயட்டரி ஃபைபர் ஆகியவை இருக்கின்றன.

இவை உடலில் இருக்கும் செல்களுக்கு வலுவூட்டும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.அதோடு இதில் குறைவான கலோரியே இருக்கிறது என்பதால் இதனை நீங்கள் தாரளமாக சாப்பிடலாம்.

யாருக்கு :

யாருக்கு :

பிறரை விட சிலருக்கு விட்டமின் சி சத்து வேகமாக குறைந்திடும். அவர்கள் யார் யார் என்று பார்க்கலாம். போதைப் பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் , கண்டிப்பான முறையில் டயட் பின்பற்றுபவர்கள், சரியாக காய்கறி மற்றும் பழங்களை எடுத்துக் கொள்ளாதவர்கள், செரிமானக் கோளாறு இருப்பவர்கள்,புகைப்பழக்கம் உள்ளவர்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஆகியோருக்கு விட்டமின் சி அதிகம் குறைய வாய்ப்புகள் உண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fruits And Vegetables Having Vitamin C

Fruits And Vegetables Having Vitamin C
Story first published: Monday, April 30, 2018, 17:17 [IST]
Desktop Bottom Promotion