Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் 12 அற்புத காய்கனிகள் இதுவே..!
உடலில் எல்லாவற்றை காட்டிலும் ரத்தமே மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ரத்தம், மற்ற உறுப்புகளுக்கு ஒரு பாலமாக உள்ளது. இதன் அளவு உடலில் குறைந்தால் மரணம் கூட நமக்கு ஏற்படலாம். இத்தகைய மகத்துவம் பெற்ற ரத்தத்தை நாம் நிச்சயம் பாதுக்காக்க வேண்டும். ரத்தத்தின் அளவு குறைந்தாலோ அல்லது அவற்றின் அளவு அதிகரித்தாலோ ஒரு சில பக்க விளைவுகள் வர கூடும். குறிப்பாக ரத்த அழுத்தம் மிக முக்கிய பங்கு இதில் வகிக்கிறது.

இன்று பலருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகவே இருக்கிறது. இதனால், மாரடைப்பு போன்ற பிரச்சினைகள் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்க பல்வேறு மருந்துகளை நம் உட்கொள்வோம். ஆனால், இதனை இயல்பாகவே தடுக்கும் தன்மை இந்த பதிவில் கூறும் உணவுகளுக்கு உள்ளது. அவை என்னென்ன உணவுகள் என்பதை இனி தெரிந்து கொள்வோம்.

ஏன் ரத்த அழுத்தம் ஏற்படுகிது..?
பொதுவாக ரத்த அழுத்தத்தில் இரு வகை உண்டு. ஒன்று உயர் ரத்த அழுத்தம். இன்னொன்று குறைந்த ரத்த அழுத்தம். இதயத்தில் இருந்து ரத்தத்தை மற்ற பாகங்களுக்கு அனுப்ப அதிக சிரமப்பட்டால் அது உயர் ரத்தமாக கருதப்படும். இது மிகவும் மோசமான நிலையாகும். அதே போன்று இந்த செயல்பாடு தாமதமானால் குறைந்த ரத்த அழுத்தமாம்.

உணவும் ரத்த அழுத்தமும்...
இந்த ரத்த அழுத்தமானது 120/80 அளவில் இருக்க வேண்டும். இதன் அளவு உயர்ந்தாலோ அல்லது குறைந்தாலோ உடல் நிலை சீராக இல்லையென அர்த்தம். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உணவுகளாலும் முடியும். ஏனெனில் நாம் உண்ணும் உணவு தான் ரத்தத்தை நமக்கு சீராக உற்பத்தி செய்ய உதவுகிறது.

வாழைப்பழம்
ஒரு வாழைப்பழத்தில் 450 mg அளவு பொட்டாசியம் இருக்கிறது. மேலும், வைட்டமின் எ, பி1, சி போன்றவை இவற்றில் அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது. வாழைப்பழத்தில் உள்ள Bromelain என்ற நொதி இதய நோய்கள், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படாமல் காக்கும். எனவே, தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வாருங்கள்.

திராட்சை
இதில் உள்ள அதிக படியான பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும், இயற்கையாகவே பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும். அத்துடன் ரத்த நாளங்களை எந்த வித அழுத்தமும் இன்றி செய்லபட செய்யும்.

பூண்டு
கொலஸ்டரோலை கட்டுக்குள் வைக்கும் தன்மை பூண்டிற்கு உள்ளது. இதில் அல்லிசின்(allicin) எனப்படும் முக்கிய மூல பொருள் உள்ளது. இவை ரத்த அழுத்தத்தை சமமான அளவில் வைக்க பெரிதும் உதவும். தினமும் 2 பல் பூண்டை தேனில் கலந்து சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியம் கூடும்.

தர்பூசணி
Arginine மற்றும் citrulline என்ற அமினோ அமிலங்கள் இந்த தர்பூசணியில் அதிகம் நிறைந்துள்ளது. இவை ரத்த நாளங்களின் செயல்பாட்டை அதிகரிக்க செய்து, ரத்தத்தை இதயத்திற்கு சீரான முறையில் அனுப்ப செய்யும். மேலும், இவற்றை சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தம் குறையுமாம்.

இளநீர்
இளநீர் மிகவும் ருசியான மற்றும் அற்புத பானமாகும். இதில் ஏரளமான ஊட்டசத்துகள் உள்ளன. குறிப்பாக பொட்டாசியம், வைட்டமின் சி, கால்சியம், சோடியம் போன்றவை ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து கொள்ளும். உயர் ரத்தம் கொண்டவர்கள் இளநீரை குடித்து வந்தால் ரத்த அழுத்தம் குறையும்.

மாதுளை
இதயத்தின் நலனை அக்கறையுடன் பார்த்து கொள்ள மாதுளை ஒன்றே போதும்.இவை ரத்த ஓட்டத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிக அளவில் இதில் இருப்பதால் எதிர்ப்பு சக்தியை கூட்டி மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.

கொத்தமல்லி
நாம் சமையலில் கடைசியாக சேர்கின்ற இந்த கொத்தமல்லி அதிக மகத்துவம் பெற்றது. இவற்றின் பல வகையான மருத்துவ குணங்கள் ஒளிந்து கொண்டுள்ளன. ரத்தத்தில் உள்ள சரக்கரையின் அளவை குறைக்கவும், உயர் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும், கொலெஸ்ட்டிரோலின் அளவை கட்டுக்குள் கொண்டு வரவும் இந்த கொத்தமல்லி பயன்படுகிறது.

எலுமிச்சை
வைட்டமின் சி அதிகம் கொண்டுள்ள இந்த எலுமிச்சை ரத்த தந்துகிகளை பலப்படுத்துகிறது. இதனால், ரத்த அழுத்தம் கூடுவதை இவை பெரிதும் தவிர்க்கிறது. மேலும், இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது.

தக்காளி
உணவில் பெரும்பாலும் நாம் சேர்த்து கொள்ளும் இந்த தக்காளியில் உள்ள lycopene என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் ரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. குறிப்பாக மாரடைப்பு ஏற்படுவதை இது தடுக்கும். தொடர்ந்து தக்காளி ஜுஸை குடித்து வந்தால் உடல் நலம் நன்றாக இருக்கும்.

செலரி
இது ஒரு வகையான கீரையாகும். இதனை உணவில் சேர்த்து கொண்டால் பல்வேறு நலன்கள் நமக்கு கிடைக்கும். குறிப்பாக இந்த செலரி ரத்தத்தின் போக்கை செம்மைப்படுத்த உதவும். மேலும், இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் குறைக்கிறதாம்.

புதினா
வாசனைக்காக நாம் சமையலில் சேர்த்து கொள்ளும் இந்த புதினாவின் மகத்துவம் அதிகம். இவை தமனியில் ஏற்படுகின்ற நோய்களில் இருந்து நம்மை காக்கும். எனவே, ரத்தத்தை மற்ற உறுப்புகளுக்கு அனுப்புவதில் எந்த வித அழுத்தமும் ஏற்படாமல் சீராக செல்லும்.
இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications