Latest Updates
-
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும்
ஆண்களே, இந்த 10 உணவு பொருட்கள்தான் உங்கள் விறைப்பு தன்மைக்கு காரணமாம்..!
பொதுவாக ஆண்கள் என்றாலே பல விதங்களிலும் பிரச்சினைகள் ஏற்பட கூடும். அவை வீட்டில் ஏற்பட கூடிய சண்டையாக இருக்கலாம், உடல் நல குறைபாடாக இருக்கலாம், இணையுடன் உறவு முறிதலாக இருக்கலாம்... இப்படி பல வகைகளிலும் அவர்களின் பிரச்சினைகள் வர வாய்ப்புகள் அதிகமுண்டு.

இதில் குறிப்பாக ஆண்களுக்கு என்றே மிகவும் முதன்மையான பிரச்சினையாக பார்க்கபடுவது ஆண்மை குறைபாடுதான். இது பல ஆண்களையும் மன அழுத்த நிலைக்கு கொண்டு செல்கிறது. இவற்றில் குறிப்பாக சொல்ல போனால் விறைப்பு தன்மை பெரும்பாடாக இருக்கின்றது. இந்த பதிவில் ஆண்கள் உட்கொள்ளும் எந்தெந்த உணவுகள் விறைப்பு தன்மை ஏற்பட முக்கிய காரணியாக இருக்கிறது என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.

விறைப்பு தன்மை VS உணவு..!
எந்த ஒரு ஜீவ ராசிக்கும் உணவு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். உணவே ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை முற்றிலுமாக சார்ந்து இருக்கின்றது. அந்த வகையில் நாம் சாப்பிடும் பல உணவுகள் நமக்கு தீமையே தருகின்றன. உட்கொள்ளும் உணவின் தன்மையை முதலில் நாம் நன்கு அறிய வேண்டும். இல்லையேல் அது விறைப்பு தன்மை கோளாறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்
நாம் இன்று சாப்பிடும் பல உணவகங்களிலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இது ஒருவரின் முழு ஆரோக்கியத்தையும் உரு குலைத்து விடும். அதாவது, இவற்றின் தன்மை மாறுபட்டு நிறையறாத கொழுப்புக்கள் உடலில் அதிகம் சேர்ந்து விடும். எனவே இது ஆண்களின் பிறப்புறுப்பில் அதிகம் விறைப்பு தன்மை கொடுக்கும்.

சோயா
ஆண்கள் உணவில் சோயாவை அதிகமாக சேர்த்து கொண்டால் இது பல்வேறு கோளாறுகளை இவர்களுக்கு ஏற்படுத்தும். கிட்டத்தட்ட இது 40 சதவீதம் விந்தணுக்களை பாதிக்க செய்து விடுமாம். இது டெஸ்டோஸ்டெரோன் அளவை குறைத்து, விறைப்பு தன்மையை ஏற்படுத்தும்.

வெள்ளை பிரட்
நாம் இன்று அரிசியையோ, பருப்புகளையோ அதிகம் உணவில் சேர்த்து கொள்வதில்லை. மாறாக இந்த பிரட் வகை உணவு பொருட்களையே அதிகம் உட்கொள்ளகின்றோம். இது உடல் எடையை கூட செய்து டெஸ்டோஸ்டெரோன் அளவை குறைத்து விடும். எனவே ஆண்களுக்கு விறைப்பு தன்மை ஏற்பட மிக முக்கிய காரணமாக இவை கருதப்படுகின்றன.

கேன்னில் அடைக்கபட்டவை
எந்த ஒரு உணவு பொருளையும் அழகாக பேக் செய்து விற்றால் நாம் அதை கட்டாயம் வாங்கி சாப்பிட்டு விடுவோம். நமது தவறான பிம்பம் என்னவென்றால் நாம் சாப்பிடும் உணவுகளை இப்படி கவர்ச்சியாக விற்றால் அது நமக்கு நலனையே தரும் என்ற பொய்யான எண்ணமே. இவை முற்றிலும் உடலுக்கு கெடுதல் தரும். கேன்னில் அடைக்கப்பட்ட சூப்கள், தின்பண்டங்கள், இறைச்சிகள் போன்றவை விறைப்பு தன்மையை ஏற்படுத்தும்.

பால் பொருட்கள்
பாலில் அதிக படியான நிறையுறாத கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரோல்கள் இருக்கின்றன. இதனை அதிகமாக பருகினால் உடல் எடை கூடி ஹார்மோன் மாற்றம் பெரும். எனவே இது விறைப்பு தன்மையையும் ஏற்படுத்தும். அத்துடன் இது விந்தணுவின் செயல்பாட்டையும் குறைத்து விடும்.

செயற்கை உற்பத்தி சோடாக்கள்
குளிர்பானங்களில் அதிக அளவில் செயற்கை முறையில் இனிப்புகளை சேர்ப்பார்கள். இது ஆணின் பிறப்புறுப்பில் அதிக விறைப்பு தன்மையை தந்து அதனை முற்றிலுமாக பாதிக்க செய்து விடும். இது பல வகையான கோளாறுகளை தரும். அத்துடன் உடலில் கொலெஸ்ட்ரோல் அளவையும் அதிகரிக்கும்.

பாட்டில் நீர்
இந்த உலகின் முதல் ஆதாரமாக கருதப்படுவது நீர்தான். இவை இன்று மிகவும் மோசமான நிலையை அடைந்து, இவற்றின் தன்மையும் மாறி வருகின்றது. பிளாஸ்டிக் பாட்டிலில் அடிக்கப்பட்ட நேற்றை பருகினால், அதில் உள்ள Bisphenol A என்ற வேதி பொருள் மலட்டு தன்மையை ஏற்படுத்தும். மேலும் இது விறைப்பு தன்மையை அதிகரிக்க செய்யும்.

புதினா
கீரை வகைகளில் சிறந்த உணவாக கருதப்படும் இந்த புதினா ஆண்களுக்கு சற்றே எதிரிதான். புதினாவை உணவில் அதிகமாக சேர்த்து கொள்ளும் ஆண்களுக்கு விரைவிலேயே விறைப்பு தன்மையை ஏற்படும் என்று Phytotherapy Research கூறியுள்ளது. இவற்றை எலிகளுடன் பரிசோதித்த போது டேஸ்ட்டோஸ்டெரோன் அளவு குறையும் என்றே ஆய்வுகள் சொல்கின்றன.

சிவப்பு இறைச்சிகள்
நாம் அதிகம் சிவப்பு இறைச்சிகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. இவை நம் உடலுக்கு நன்மை தருகின்றதா என்பதை கட்டாயம் நாம் ஆராய வேண்டும். சிவப்பு இறைச்சியில் ஆட்டு இறைச்சியே மற்றவற்றை காட்டிலும் உடலுக்கு நன்மை தர கூடியது. மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி போன்றவை விறைப்பு தன்மையை அதிகரிக்க செய்யும்.

மைக்ரோவேவ் பாப்கான்
அறிவியலில் வளர்ச்சி நம்மை பல விதத்திலும் முன்னேற்றம் அடைய செய்து வருகின்றது. ஆனால் அவற்றில் சில நமக்கு தீங்கும் செய்கின்றன. பாப்கான் அடைக்கப்படும் பைகளானது perfluorooctanoic acid மூலம் தயார் செய்யப்பட்ட்து. இவை ஆண்களின் ஹார்மோன் அளவை குறைவாக சுரக்க செய்து, விறைப்பு தன்மையை ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications