வயிற்று புற்றுநோய் குறித்து உங்களுக்குத் தெரியாத சில உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய காலத்தில் புற்றுநோய் ஒருவரை சர்வ சாதாரணமாக தாக்குகிறது. புற்றுநோய்களில் நிறைய வகைகள் உள்ளன. அதில் மிகவும் ஆபத்தானது வயிற்று புற்றுநோயாகும். ஏனெனில் வயிற்று புற்றுநோய் இருந்தால், அதற்கான ஆரம்ப அறிகுறிகள் எதுவும் தெரியாது. அப்படியே அறிகுறிகள் தெரிந்தாலும், நாம் அதை சாதாரண செரிமான பிரச்சனை என்று நினைத்து விட்டுவிடுவோம்.

வயிற்று புற்றுநோய் என்பது வயிற்றில் புற்றுநோய் செல்கள் உருவாவதாகும். இது ஆரம்பத்தில் இரைப்பையின் சுவற்றில் தான் ஆரம்பமாகும். செல்களானது கட்டிகளாக மாறும் போது தான், நிலைமை மோசமாகும். உடல்நல நிபுணர்கள் வயிற்றில் அல்சர் வருவதற்கு பாக்டீரியா போன்ற குறிப்பிட்ட காரணிகள் தான் வயிற்றுப் புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணம் என்று கூறுகின்றனர். சில சமயங்களில் குடல் அழற்சி கூட, வயிற்றுப் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்குமாம். இப்போது வயிற்று புற்றுநோய் குறித்த சில உண்மைகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதா? அதுவும் ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட்டிற்கு மேல் சிகரெட் பிடிப்பீர்களா? அதே சமயம் வயிற்றுப் புண்ணால் கஷ்டப்படுகிறீர்களா? அப்படியானால், சற்றும் தாமதிக்காமல், மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஏனெனில் இத்தகையவர்களுக்கு வயிற்று புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.

உண்மை #2

உண்மை #2

புற்றுநோய்களிலேயே மிகவும் ஆபத்தான ஒரு வகை என்றால் அது வயிற்றுப் புற்றுநோய் தான். ஏனெனில் இதை கண்டறிவது என்பது கடினம். வயிற்று புற்றுநோய் ஆரம்பத்தில் அறிகுறிகள் எதையும் வெளிப்படுத்தாது. இதனால் அதை அப்படியே விட்டுவிடுவதால், அந்த புற்றுநோய் செல்களானது அப்படியே உடல் முழுவதும் பரவி, சிகிச்சை அளிப்பதே கடினமாகிவிடும். இந்த காரணத்தினாலேயே இது ஆபத்தான புற்றுநோயாக கருதப்படுகிறது.

உண்மை #3

உண்மை #3

வயிறு என்னும் இரைப்பை செரிமான மண்டலத்தின் மேல் பகுதியாகும். உண்ணும் உணவுகளானது வயிற்றில் செரிமானமாகி, பின் ஊட்டச்சத்துக்களுடன் செரித்த உணவை செரிமான உறுப்புக்களான சிறு குடல் மற்றும் பெருங்குடலுக்கு அனுப்பும். வயிற்று புற்றுஅநாயானது வெரிமான மண்டலத்தின் மேல் பகுதியில் உள்ள ஆரோக்கியமான செல்களானது கட்டுப்பாடு இல்லாமல் வளரும் போது, அது கட்டிகளாக மாறி, புற்றுநோயை உண்டாக்கும். இந்த செயல்முறை மெதுவாக நடைபெறும். எனவே தான் வயிற்றுப் புற்றுநோய் ஒருவருக்கு இருப்பதை அறிய பல வருடங்கள் ஆகிறது.

உண்மை #4

உண்மை #4

உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் வயிற்று புற்றுநோய் உள்ளதா? அப்படியானால், உங்களுக்கு வயிற்றுப் புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. ஒருவருக்கு வயிற்று புற்றுநோய் வருவதற்கு மரபணு காரணிகளும் முக்கிய பங்கை வகிக்கின்றன.

உண்மை #5

உண்மை #5

சில வகையான பாக்டீரியல் தொற்றுகளான எச்.பைலோரி என்னும் பாக்டீரியா, லிம்போமா என்னும் ஒரு வகையான இரத்த புற்றுநோய், வயிற்றில் உள்ள அசாதாரண திசு வளர்ச்சி, மோசமான உணவுப் பழக்கம் மற்றும் உடல் பருமன் போன்றவைகளும் வயிற்றுப் புற்றுநோய் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்.

உண்மை #6

உண்மை #6

வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப காலத்தின் உணவுகளை உண்ணும் போது விழுங்குவதில் சிரமத்தை சந்திப்பது மற்றும் கடுமையான வயிற்று வலியால் அவஸ்தைப்படுவது போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

உண்மை #7

உண்மை #7

உங்கள் உடல் எடை திடீரென்று குறைந்தாலோ மற்றும் வயிற்று உப்புசமாக இருந்தாலோ (மிகவும் குறைந்த அளவில் உணவை உட்கொண்டால்), அவைகளும் வயிற்று புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

உண்மை #8

உண்மை #8

சில சமயங்களில், பல நாட்களாக வாந்தி வந்தவாறு இருந்தால், அதுவும் இரத்தம் கலந்த வாந்தி அல்லது இரத்தம் கலந்த மலம் வெளியேறினால், உங்கள் செரிமான மண்டலத்தில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts About Stomach Cancer

Does vomiting blood indicate stomach cancer? Well, here are some facts about stomach cancer...
Story first published: Wednesday, March 28, 2018, 16:40 [IST]