For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வலி நிவாரணி மாத்திரைகளைப் பற்றிய சில முக்கிய தகவல்கள்!

இங்கு வலி நிவாரணி மாத்திரைகளைப் பற்றிய சில முக்கிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

நாம் அனைவரும் நம்முடைய வாழ்வின் சில தருணங்களிலாவது உடலில் ஒருவித வலியை உணர்ந்திருப்போம். இதுவரை எனக்கு உடலில் எந்த வித வலியும் ஏற்பட்டதே இல்லை என்று கூறும் மனிதனுக்கு நரம்பு தொடர்பான கோளாறு உண்டு என்பது விளங்கும். ஆகவே, பொதுவாக அடிபடும் போது, அல்லது வேறு எதாவது நோயின் போது, அதன் முதல் அறிகுறி, வலியாகத் தான் இருக்க முடியும். இந்த வலியை வயது, வித்தியாசமின்றி ஆண் பெண் பேதமின்றி அனைவரும் உணர்ந்திருப்பார்கள் என்பதில் எந்தஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது

சில வகை வலிகள் தற்காலிகமாகவும், மிதமாகவும் இருக்கும். ஆனால் சில வகை வலிகள் மிகவும் அதிகமாக மற்றும் நீண்ட நாட்கள் இருக்கும். உதாரணத்திற்கு, எலும்பு முறிவால் உண்டாகும் வலி, அல்லது தசை நார் கிழிந்ததால் உண்டாகும் வலி மிகவும் ஆழமானதாகவும் நீண்ட நாட்களும் இருக்கும். அதே நேரம், ஒற்றை தலைவலி அல்லது மாதவிடாய் வலிகள், ஆழமானதாக இருந்தாலும், ஒரு நாளுக்கு மேல் இந்த வலிகள் இருப்பதில்லை.

அதனால், நீண்ட நாட்கள் மிகவும் ஆழமானதாக இருக்கும் வலிகளில் இருந்து விடுபெற, பொதுவாக வலி நிவாரணி மாத்திரைகள் அல்லது வீக்கத்தை குறைக்கும் மாத்திரைகளை தேடி செல்லுகிறோம். இவை, தற்காலிக நிவாரணத்தை தருபவையாக உள்ளன. இந்த வலி நிவாரணி மாத்திரைகளை தொடர்ந்து பல நாட்கள் பயன்படுத்தும் போது மனித உடல் ஆரோக்கியத்திற்கு இவை, எதிர் விளைவுகளை உண்டு பண்ணுகின்றன. பெயின் கில்லர் எனப்படும் வலி நிவாரணி மாத்திரைகளைப் பற்றிய சில முக்கிய தகவல்களை இந்த பதிவு நமக்கு கொடுக்க இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வலி நிவாரணி மாத்திரை கட்டாயம் தேவையா ?

வலி நிவாரணி மாத்திரை கட்டாயம் தேவையா ?

உங்கள் உடலில் வலி பரவும் நேரம் நீங்கள் வலி நிவாரண மாத்திரைகளை எடுக்க நினைக்கும் முன்னர், முக்கியமான ஒரு விஷயத்தை ஆராய வேண்டும். அது அந்த வலியின் ஆழம் மற்றும் உங்களுக்கு கண்டிப்பாக வலி நிவாரண மாத்திரை தேவையா என்பது தான். பல விதமான வலிகள் உடலில் தோன்றினாலும், அவை, தானாகவே மறையக்கூடியதாக தான் பெரும்பாலும் இருக்கும். உங்களால் சில நாட்கள் அந்த வலியை பொறுத்துக் கொள்ள முடியும் என்ற போது, இந்த வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏனென்றால், இத்தகைய வலி நிவாரணி ,மாத்திரைகள் உங்களை பரிபூரணமாக குணப்படுத்துவதில்லை, மாறாக ஒரு தற்காலிக நிவாரணத்தையே தருகின்றன.

ஆதாரத்தைக் குணப்படுத்துங்கள்:

ஆதாரத்தைக் குணப்படுத்துங்கள்:

எல்லா வலிகளுக்கும் அடிப்படையாக ஒரு மூலக்காரணம் இருக்கும். அந்த வலி, எதாவது ஒரு காயம் அல்லது கோளாறினால் உண்டானதாக இருக்கும். மேலும், வலி என்பது ஒரு அறிகுறி தான். ஆகவே, வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்தி தற்காலிக நிவாரணம் பெறுவதைக் காட்டிலும், சரியான நிபுணரிடம் சென்று, வலிக்கான மூலம் என்ன என்பதை தெரிந்து, அதற்கேற்ற சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதால், வலி நிரந்தரமாக உங்களை விட்டு போகும்.

நிபுணரை தேர்ந்தெடுங்கள்:

நிபுணரை தேர்ந்தெடுங்கள்:

நீங்கள் எந்த ஒரு வியாதி அல்லது காயத்தால் நீண்ட நாட்கள் வலியால் அவதிபடுபவராக இருந்தால், அந்த குறிப்பிட்ட நோயை குணபடுத்தும் நிபுணரிடம் ஆலோசனை பெற்று, அதற்கான சிகிச்சை முறையை எடுத்துக் கொள்ளலாம். நீண்ட நாட்கள் வலி நிவாரணியை எடுத்துக் கொள்வதற்கு மாற்றாக மேலே கூறிய முறை சிறந்தது. பொதுவாக நிபுணர்கள், பல்வேறு கட்ட சிகிச்சைகளுக்கு பின்னர் அந்த வலி முற்றிலும் மறைவதற்கான காலத்தை தெரிவிப்பார்.

சுய சிகிச்சையைத் தவிர்த்திடுங்கள்:

சுய சிகிச்சையைத் தவிர்த்திடுங்கள்:

மருத்துவரால் பரிந்துரைக்கப்படாமல், நீங்கள் சுயமாக மருந்து கடைகளில் இருந்து எந்த ஒரு மருந்தையும் வாங்கி பயன்படுத்துவதை தவிர்ப்பது நலம். இது ஒரு ஆபத்தான பழக்கமாகும். குறிப்பாக வலி மாத்திரைகளை , மருத்துவர் பரிந்துரைக்காமல் எடுத்துக் கொள்ளும் போது, அது இறப்பிற்கும் வழிவகுக்கலாம். ஆகவே, உங்களுக்கு கட்டுப்படுத்த முடியாத வலி இருக்கும்போது, மருத்துவரிடம் சென்று உங்கள் வலியின் ஆழத்திற்கு ஏற்ற மருந்தை பரிந்துரைக்க செய்து, அதனை வாங்கி உண்ணலாம்.

பக்க விளைவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:

பக்க விளைவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:

மற்ற மருந்து மாத்திரைகளைப் போல், வலி நிவாரணி மருந்துகளுக்கும் பக்க விளைவுகள் உண்டு. ஆகவே, வலி நிவாரணி மாத்திரைகள் அல்லது மருந்துகளை எடுத்துக் கொள்வதற்கு முன், அதன் பக்க விளைவுகளைப் பற்றி முழுதும் தெரிந்து கொள்வது நல்லது. செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் , மயக்கம், சோர்வு, குறைந்த இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற நோய்கள் இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகளால் உண்டாகும் நோய்களாகும். ஆனாலும், சரியான அளவு மருந்தை பிரயோகிக்கும் போது, பக்க விளைவுகள் பெரும்பாலும் பெரிதாக உண்டாவதில்லை.

வலி நிவாரணிக்கு அடிமையாதல்:

வலி நிவாரணிக்கு அடிமையாதல்:

வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொள்வதால் உண்டாகும் மிக அபாயகரமான பக்க விளைவு, மனோரீதியாக இவற்றிற்கு அடிமையாதல் என்பதாகும். உலகம் முழுவதிலும் பல ஆயிரக்கணக்கான மக்கள், இத்தகைய பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில் இவர்கள் பெரும்பாலும், வலி நிவாரணிகளையே தேர்ந்தெடுக்கின்றனர். உடனடியாக ஒரு தற்காலிக நிவாரணத்தை தரும் இந்த மருந்துகளின் தன்மை தான் மனிதர்கள் இவற்றிற்கு அடிமையாவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. ஆகவே, இத்தகைய மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள், வலி குறைந்த பின்னும் அதனைப் பயன்படுத்துவதை நிறுத்துவதில்லை.

தவறான வழிக்கு செல்லுதல்:

தவறான வழிக்கு செல்லுதல்:

வலி நிவாரணி மருந்துகளுக்கு அடிமையானவர்கள் எளிதில் தவறான ஒரு பாதையை தேர்வு செய்ய வாய்ப்புகள் அதிகம் உண்டு. இப்படி வலி நிவாரணிக்கு அடிமையாகும் சிலர், கொக்கைன், மது, ஹெராயின் போன்றவற்றை பயன்படுத்தும் அபாயம் அதிகம் உள்ளது. வலி நிவாரணி மருந்துகளில் உள்ள உச்ச நிலையை பொறுத்துக் கொள்ளும் எதிர்ப்பு சக்தி இவர்களின் உடலுக்கு இல்லாமல் போவதால் இத்தகைய நிலை உண்டாகிறது.

உறுப்புகள் சேதமடைதல்:

உறுப்புகள் சேதமடைதல்:

வலிமையான வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் மற்றொரு மோசமான தாக்கம் என்பது, உடல் உறுப்புகள் சேதமடைதல் ஆகும். வலி நிவாரணியில் இருக்கும் சில இரசாயனங்கள், உடலால் உடைத்து வெளியேற்றக்கூடிய அளவை விட கடினமாக இருக்கக்கூடியவை ஆகும். ஆகவே இத்தகைய ரசாயனங்களை உடைக்க, கல்லீரல், இதயம் போன்றவை இன்னும் கடினமாக உழைக்கக் வேண்டியிருக்கிறது. ஆகவே, தொடர்ந்து வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால், கல்லீரல், இதயம் போன்றவை வலிமை இழக்கின்றன. இதனால் விரைந்து இவை சேதமடைகின்றன.

உங்கள் மருத்துவ வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்:

உங்கள் மருத்துவ வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்:

உங்கள் உடலில் உள்ள வலி தொடர்பாக, புதிதாக எதாவது ஒரு மருத்துவரை அல்லது நிபுணரை சந்திக்க சென்று, அவர்கள் உங்களுக்கு வலி நிவாரணி மருந்துகளை பரிந்துரை செய்வதற்கு முன், உங்கள் மருத்துவ வரலாற்றை அவர்களுக்கு தெரியப்படுத்துவது மிகவும் முக்கியம். உதாரணத்திற்கு, நீங்கள் முன்னர் ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம், அல்லது உங்களுக்கு ஏதாவது ஒன்றில் ஒவ்வாமை இருக்கலாம், மன ரீதியாக ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கலாம். இவற்றை பற்றி உங்கள் மருத்துவருக்கு தெரிவிப்பதன் மூலம், அதற்கு ஏற்ற வகையில் வலி நிவாரணிகளை உங்களுக்கு அவர் பரிந்துரை செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts About Pain Killers

Painkillers are extremely potent medications which may have adverse effects on your health. Know the important facts about painkillers.
Story first published: Monday, February 19, 2018, 18:50 [IST]
Desktop Bottom Promotion