For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களுக்கு ஏற்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள்... எந்த வயதிலிருந்து ஆரம்பிக்கும்?

ஆஸ்டியோபோரோசிஸ் ஒரு அமைதியாக தாக்கக் கூடிய நோயாகும். இதை அவ்வளவு சுலபமாக கண்டறிய இயலாது.பெண்களையே அதிகளவு தாக்கும் நோயாக கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய காலங்களில் இந்த நோய் ஆண்களையும் அதிகளவில்

By Suganthi Rajalingam
|

பொதுவாக ஆஸ்டியோபோரோசிஸ் என்பது பெண்களையே அதிகளவு தாக்கும் நோயாக கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய காலங்களில் இந்த நோய் ஆண்களையும் அதிகளவில் பாதித்து வருகிறது.

how to avoid osteoporosis problems

சில ஆண்கள் மட்டுமே இந்த நோயை எலும்பு முறிவிற்கு முன்பே கண்டறிந்து செயல்படுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆஸ்டியோபோரோசிஸ்

ஆஸ்டியோபோரோசிஸ்

இது ஒரு அமைதியாக தாக்கக் கூடிய நோயாகும். இதை அவ்வளவு சுலபமாக கண்டறிய இயலாது. ஆண்களின் எலும்பமைப்பு வலுவாக மிகப்பெரிய அளவில் காணப்படுவதால் அவர்களின் எலும்பு இழப்பும் மெதுவாகவே தொடங்க ஆரம்பிக்கிறது. அவர்களின் ஹார்மோன் மாற்றமும் மெதுவாக இருப்பதால் எலும்பு இழப்பும் மெதுவாக நடக்கிறது. பெண்களின் மெனோபாஸ் மாற்றத்தின் காரணமாக 50 வயது வரை ஆண்களை விட பெண்கள் இந்த பிரச்சினையை அதிகளவில் சந்திக்கின்றனர். ஆனால் 65-70 வயதில் இருபாலரும் ஓரே விகிதத்தில் பாதிப்புகளை அடைகின்றனர் என்பது தான் உண்மை.

வகைகள்

வகைகள்

இரண்டு வகையான ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளது

முதன்மை ஆஸ்டியோபோரோசிஸ்

70 வயதுக்கு மேல் உள்ள ஆண்களுக்கு வயதுப் பிரச்சினை காரணமாக சந்திக்கும் எலும்பு இழப்பு தான் செனிலைன் ஆஸ்டியோபோரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது

இரண்டாம் நிலை ஆஸ்டியோபோரோசிஸ்

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. மது அருந்துதல், புகை பிடித்தல், உடற்பயிற்சி இல்லாமை, குடல் நோய்கள் இவற்றால் ஏற்படுகிறது.

காரணங்கள்

காரணங்கள்

வயது

இந்த நோய் ஆண்களிடையே வர முக்கியமான காரணம் வயது. 50 வயதை கடந்த உடன் ஆண்களின் எலும்பின் அடர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக வருடத்திற்கு 0.5 - 1% வரை குறையத் தொடங்கி விடுகிறது. அதே நேரத்தில் எலும்பு மீண்டும் கட்டமைப்பு திறனும் குறைந்து விடுவதால் பெரும் இழப்பு ஏற்படுகிறது.

இது டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் குறைந்து ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உயர்வதால் ஏற்படுகிறது. எனவே எலும்பு கட்டமைப்பு மற்றும் எலும்பு மறுசீரமைப்பு அவசியமாகிறது.

கால்சியம் மற்றும் விட்டமின் டி

கால்சியம் மற்றும் விட்டமின் டி

இது இரண்டும் எலும்பின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. விட்டமின் டி நம் உணவில் உள்ள கால்சியம் சத்தை உறிஞ்சுவதற்கும், கால்சியம் எலும்புகளின் வலிமை மற்றும் எலும்பு முறிவை குறைப்பதற்கும் பயன்படுகிறது. பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் அதிகளவில் உள்ளது. ஒரு சராசரி ஆணுக்கு தேவையான ஒரு நாள் கால்சியம் அளவு 50 - 1000 மில்லி கிராம் ஆகும். விட்டமின் டி சூரிய ஒளியிலிருந்து நம் உடலுக்கு கிடைக்கிறது.

குறிப்பு

500 மில்லி கிராமுக்கு மேல் கால்சியம் எடுத்தால் அது நமது உடல் ஏற்காது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யும் போது எலும்புகளின் வலிமை அதிகமாகும். ஜாக்கிங், ஒடுதல் அல்லது மற்ற விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்வது நல்லது.

மது அருந்துதல்

மது அருந்துதல்

அதிகமாக மது அருந்துதல் எலும்புகளின் வலிமையை குறைப்பதோடு கல்லீரலையும் பாதிக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு தடவைக்கு மேல் குடிக்கக் கூடாது என்ற சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது நல்லது. மது பழக்கத்தை அறவே தவிர்த்தல் இன்னமும் நன்மை அளிக்கும்.

புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல்

புகைப் பிடிக்கும் பழக்கம் எலும்பு தேய்மானத்தை உருவாக்கும். ஏனெனில் இவர்கள் மற்றவர்களை காட்டிலும் உடல் ரீதியாக வலுவிழந்து காணப்படுவர். எனவே இவர்களின் எலும்பும் பலவீனமாகி எலும்பு இழப்பு ஏற்படும்.

மருந்துகள்

மருந்துகள்

மன அழுத்தம், டயாபெட்டீஸ், முடக்கு வாதம், புற்று நோய், நெஞ்செரிச்சல் போன்றவற்றிற்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகள் ஸ்டீராய்டு போன்றவை எலும்பு இழப்பை ஏற்படுத்தும். எனவே இந்த மாதிரியான மருந்துகளை அதிகளவில் எடுப்பதை தவிர்த்து ஆரோக்கியமான உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

செய்ய வேண்டியவை

செய்ய வேண்டியவை

சமநிலை உடற்பயிற்சி

ஒரு காலில் நின்று கொண்டு ஒரு கையில் உடற்பயிற்சி கருவி கொண்டு செய்ய வேண்டும். ஆனால் இதை 15 நிமிடங்களுக்கு மேல் செய்ய வேண்டும். பிறகு மறு காலைக் கொண்டு திரும்பவும் செய்யவும். கொஞ்சம் கஷ்டமாக இருந்தால் தலையணை மேல் நின்று கொள்ளுங்கள்.

குதிகால் நடத்தல்

குதிகால் நடத்தல்

நாம் கோவில்களில் நடப்பது அடி மேல் அடி வைத்து நடக்க வேண்டும். ஒரு பாதத்தின் குதிகாலை ஒட்டி மற்றொரு பாதத்தின் விரல்களை வைத்து நடக்க வேண்டும். ஒரு நபரின் உறுதுணையோடு கூட நடந்து செல்லலாம். இப்படி தினமும் 100 மீட்டர் தூரம் நடக்க வேண்டும்.

காலை உயர்த்தல்

காலை உயர்த்தல்

ஒரு காலில் நின்று கொண்டு மற்ற ஒரு காலை பக்கவாட்டில் தூக்க வேண்டும். அப்படியே 10 நிமிடங்கள் நின்று மறுகாலிற்கும் இதை திரும்பவும் செய்யவும்.

நேரான தண்டுவடம்

நேரான தண்டுவடம்

அமரும் போதும் சரி உடற்பயிற்சி செய்யும் போதும் சரி உங்கள் தண்டுவடத்தை நேராக வைத்து இருங்கள். இவையும் எலும்பின் வலிமையை அதிகரிக்கும்.

செய்யக்கூடாதவை

செய்யக்கூடாதவை

மிக வேகமான நகர்வு, முன்னோக்கி மற்றும் பின்னோக்கி வளைவு போன்றவை கூடாது. இவை முதுகெலும்பை முறித்து விடும்.

5-6 கிலோவிற்கு அதிகமான பொருளை ஒரே நேரத்தில் தூக்கக் கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: men women ஆண் பெண்
English summary

Factors That Increase The Risk Of Osteoporosis In Men

Osteoporosis is a silent disease that is tough to detect. As men have a larger skeleton, bone loss starts much later and happens at a much slower rate, as men don't have fast hormonal change. These problems comes due to lack of exercise, bad habits, age and so on
Story first published: Monday, May 14, 2018, 18:37 [IST]
Desktop Bottom Promotion