நைட் தூங்கும் முன் பாலில் குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

பழங்காலத்தில் நம் முன்னோர்கள் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு கை வைத்தியங்களின் மூலம் தான் தீர்வு கண்டார்கள். அதுவும் நம் வீட்டுச் சமையலறையில் இருக்கும் மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களைக் கொண்டே நோய்களுக்கு சிகிச்சை அளிப்பார்கள்.

இந்தியாவில் ஒவ்வொரு வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருட்களிலும் நோய்களைக் குணப்படுத்தும் பண்புகள் அதிகம் உள்ளது. அதிலும் மஞ்சள், குங்குமப்பூ போன்றவற்றில் அடங்கியுள்ள மருத்துவ பண்புகள் உடலினுள் உள்ள அழற்சிகளை சரிசெய்ய ஆரம்பித்து, சரும பிரச்சனைகள் முதல் புற்றுநோய் வரை என அனைத்தையும் சரிசெய்யும்.

கீழே பழங்காலத்தில் நோய்களைக் குணப்படுத்த நம் முன்னோர்கள் தயாரித்துக் குடித்து வந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்றும், அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்தும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருத்துவ குணம் நிறைந்த அற்புத பானம்

மருத்துவ குணம் நிறைந்த அற்புத பானம்

பல நோய்களைத் தடுக்கும் அற்புத பானத்தைத் தயாரிப்பது மிகவும் எளிது. ஏனெனில் இது வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே தயாரிக்கப்படும் ஒரு அருமருந்தாகும். இந்த அற்புத பானம் மிகவும் சுவையாக இருப்பதோடு, பல்வேறு வகையான அழற்சிகள், மாதவிடாய் வலிகள், சர்க்கரை நோயைத் தடுத்து, மனநிலையை மேம்படுத்தும். முக்கியமாக இந்த பானம் தயாரிப்பதற்கு 5 நிமிடம் தான் ஆகும்.

பானம் தயாரிக்கத் தேவையான பொருட்கள்:

பானம் தயாரிக்கத் தேவையான பொருட்கள்:

முந்திரி அல்லது தேங்காய் பால் - 1 சிறிய கப்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

தேன் - 1 டீஸ்பூன்

பட்டைத் தூள் - 1 1/2 டீஸ்பூன்

ஏலக்காய் - 2

குங்குமப்பூ - சிறிது

பிஸ்தா - 2 ஸ்பூன்

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளில் சக்தி வாய்ந்த குர்குமின் என்னும் பொருள் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு ஏஜென்ட் போன்று செயல்பட ஆரம்பித்து, உடலினுள் உள்ள அழற்சியைப் போக்கும். மேலும் குர்குமின் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதாடு, உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அளவையும் அதிகரித்து, புற்றுநோயின் அபாயத்தைப் பாதியாக குறைக்கும்.

மேலும் இந்த மஞ்சள் அல்சைமர் நோய், பர்கின்சன் நோய் மற்றும் பக்கவாதம் போன்றவற்றை வெற்றிகரமாக சரிசெய்ய பயன்படுத்தப்பட்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் மஞ்சளில் நரம்புகளைப் பாதுகாக்கும் பண்புகள் உள்ளது.

குங்குமப்பூ

குங்குமப்பூ

மன இறுக்கம் மற்றும் அல்சைமர் நோய்களை எதிர்த்துப் போராடுவதில் குங்குமப்பூ மிகச்சிறந்த பொருள். ஏனெனில் இதில் பொட்டாசியம் ஏராளமான அளவில் உள்ளது. இது செல்களின் உற்பத்தி மற்றும் பாதிக்கப்பட்ட செல்களை சரிசெய்ய உதவும். மேலும் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். அதோடு குங்குமப்பூ மனநிலையை மேம்படுத்தி, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தடுத்து, எடையைக் குறைக்க உதவி புரியும்.

பச்சை பால்

பச்சை பால்

இந்த பானத்திற்கு நாம் சாதாரணமாக குடிக்கும் பாலைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, முந்திரி, தேங்காய், பாதாம், அரிசி போன்றவற்றில் இருந்து கிடைக்கும் பாலைப் பயன்படுத்தினால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். ஏனெனில் சாதாரண பால் உடலின் சீரான செயல்பாட்டிற்கும் தேவையான நொதிகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை அழித்துவிடும்.

இதர பொருட்கள்

இதர பொருட்கள்

இந்த பானத்தில் ஏலக்காய் மற்றும் பட்டையை சேர்த்துக் கொள்வதன் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதில் பட்டை இதய பிரச்சனைகளான பக்கவாதம் மற்றும் மாரடைப்பை பாதியாகக் குறைக்கும். அதோடு பட்டை நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை மேம்படுத்தி, உடலைத் தாக்கும் கிருமிகளின் தாக்கத்தை எதிர்த்துப் போராடி, உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்.

பானம் தயாரிக்கும் முறை

பானம் தயாரிக்கும் முறை

பிளெண்டரில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் விருப்பத்திற்கு ஏற்ப, அதை வெதுவெதுப்பான நிலையிலோ அல்லது குளிர்ச்சியாகவோ குடிக்கலாம். இது மிகவும் சுவையான பானம் மற்றும் எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாதது. எனவே தவறாமல் இந்த பானத்தை தயாரித்துக் குடித்துப் பாருங்கள்.

சளி, இருமல்

சளி, இருமல்

இந்த பானத்தில் ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளதால், இவற்றை சளி, இருமல் இருக்கும் போது குடிப்பதால், விரைவில் நிவாரணம் கிடைக்கும். அதோடு உடலைத் தாக்கிய எப்பேற்பட்ட வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்களும் போய்விடும்.

நோயெதிர்ப்பு சக்தி

நோயெதிர்ப்பு சக்தி

இந்த பானத்தை ஒருவர் காலையில் அல்லது இரவில் குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, பல்வேறு நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் வகையில் உடல் வலிமையாகும்.

செரிமானம் மேம்படும்

செரிமானம் மேம்படும்

மஞ்சள் செரிமான பிரச்சனைகளைப் போக்க பெரிதும் உதவியாக இருக்கும். எனவே அஜீரண கோளாறால் அவஸ்தைப்படுபவர்கள், இந்த மஞ்சள், குங்குமப்பூ கலந்த பாலைக் குடித்து வருவதன் மூலம் விரைவில் நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் இந்த பானம் நெஞ்செரிச்சலையும் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Consume Milk With Turmeric And Saffron To Treat Disease

How to prepare the saffron turmeric milk mixture? This amazing recipe will improve overall body. Read on to know more...